வெள்ளி, 3 ஜூலை, 2015

தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள்

ராதே கிருஷ்ணா 03-07-2015

தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள்
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.
6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்துஅவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.
11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.
13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.
14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.
16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்சிவனும் கூறியுள்ளனர்.
18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.
19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.
20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.
21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.
22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.
23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.
25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.
26. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.
27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின்பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான்மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும்தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
28. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.
30. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.
32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.
35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.
37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.
38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பாவகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
40. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
41. “நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம்,பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.”
42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.
43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம்கிடையாது.
45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.
46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மைஅளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
47. சாஸ்திரப்படி, சிராத்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.
48. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்துஉறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.
50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டுஇறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.
54. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.
55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.
58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி,திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது





பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான்!

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள் கூறியதன் உண்மைப் பொருள்தனை நாம் நன்றாக அறியமுடிகிறது.
அவ்வண்ணம் வந்தது தாம் தான் என்பதை நமக்கு சான்றென தரவே பற்பல மஹான்கள் அவர்களது பொழுதுகளில் மற்ற மஹான்களைப் போலவே தோன்றி நம்மை அறியவைத்திருக்கின்றனர் போலும்.
ஆயினும் கூட கலியுகத்தில் பிறந்ததாலோ என்னவோ மஹான்கள் நம்மிடையே ஸ்தூல ரூபமாய் இருக்கும் பொழுதினை விடவும் பற்பல மடங்கு அவர்கள் சூக்ஷுமமாய் இருக்கும் பொழுதினில் பெரிதாய் உணர்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆயினும் என்ன? இன்றாவது வாழ்வில் உணர்ந்தோமே என்ற ஆஸ்வாசம் மேலிட நம் மனம்:

மஹா பெரியவா சரணம்! மஹா பெரியவா சரணம்! மஹா பெரியவா சரணமென! கூவுகிறது…



"ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம்
கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் - திரி
போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது"
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஓர் ஏழைப் பாட்டி.பெரியவாளிடம் அபார பக்தி.
கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும்
சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
மடி ஆசாரம் பார்ப்பாள். ஏராளமான பக்தி.
தினமும் பெரியவர் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள்.
கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.
இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி.இன்னொரு
புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை.
ஒரு பக்தர் அரிசிக் குறுணையும்,வெல்லமும்
பெரியவாளிடம் சமர்ப்பிந்திருந்தார்.அவற்றை நல்லபடியாக
விநியோகம் செய்ய வேண்டுமே?
பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.
"காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும்
கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா. அரை ஆழாக்கு
வீதம் போடு..." என்றார்கள்.
அந்தப் பாட்டியும் பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து,
பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும்,
வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.
அந்த வேலை முடிந்ததும் பெரியவா அந்தப் பாட்டியைக்
கூப்பிட்டார்கள்.
பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது.
ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.
"திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய்,
எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப்
போடு.ஒவ்வொரு நாளும் இரண்டு,மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்" என்றார்கள்.
பாட்டிக்குப் பரம சந்தோஷம். பரம சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களுக்குச் சென்று பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள்.சில நாட்களில் இந்தக் கைங்கரியம் நிறைவு பெற்றது.அந்தச் செய்தியையும் தெரிவித்தாள் பாட்டி.
பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப்பின்,
ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார்.
பெரிய மனுஷத் தோரணை, அகங்காரம்.
"ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.
லட்சதீபம் போட்டிருக்கேன்....." என்று தற்பெருமை
தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.
பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது.
தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக்
கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு
நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.
வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா
சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால்,அந்தப்
பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.
பெரியவா சொன்னார்கள்.
"இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா
லக்ஷபோஜனம் செய்திருக்காள்.
பல லக்ஷதீபம் போட்டிருக்காள்...."
ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது.
'யார் அந்தப் பாட்டி...அவ்வளவு பெரிய பணாக்காரி?'
என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.
பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.
"இவள்தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம்
செய்தவள்..."
அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக்கொண்டு
வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர்
அயர்ந்து போனார்.பாட்டியின் நெற்றியிலிருந்த
வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு,
அவளுடைய இதய சுத்தத்தை விளாக்கினாற்போலிருந்தது.
பெரியவா சொன்னார்கள்.
"ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார்.
பிரும்மா முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான்
இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.
"நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய்.
ஆனால், இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு
(எறும்புகளுக்கு) ஆகாரம் போட்டிருக்கிறாள்.
"ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம்
கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் - திரி
போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப்
பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள்.
பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி,திரி
போட்டு தன் கையாலேயே ஏற்றியிருக்கிறாள்...."
கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.
பெரியவாளிடம் பவ்யமாகவும்,அகங்காரமில்லாமலும்
பேசவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.பின்னால்
பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து
இடம் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய
மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து,பல சமாசாரங்கள்
பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
அடக்கம் கற்றுக்கொண்ட அவர், ஆனந்தமாகத்
திரும்பிச் சென்றார்




காஞ்சீ ஜகத்குரு ஶ்ரீசரணர்கள்- ஓம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள்

சோம்பேறியைவிட நாஸ்திகன் உயர்ந்தவன்- காஞ்சீ ஜகத்குரு ஶ்ரீசரணர்
தெய்வபரமான சிந்தனையோ, ஆத்மாவைப்பற்றிய நினைப்போ இல்லாமல், அதே ஸமயத்தில் எந்த விதமான அறிவு விசாரணையும் செய்யாமல், வெறுமே நின்று கொண்டும், தூங்கிக் கொண்டும், சோம்பேறியாக இருப்பதைவிட, புத்தியைக்கொண்டு ஆராய்ந்து, ”ஈஸ்வரன் இல்லை; நாஸ்திகம் தான் சரியானது” என்றமுடிவுக்கு வந்தால்கூட தேவலை என்பேன்.
ஸத்ய தத்வத்தைத் தெரிந்துகொள்ள ஒரு முயற்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து சிரமப்பட்டு ஒருவன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன் தான் என்பேன்.
அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவு [ஊடயசவைல] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும்.
ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை.



ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி பரம பாவன சரித நாமாவளி

ஜய-வர்ஷே பூஜ்யஸ்ரீ-கோவிந்த-குலே க்ருதாவதாராய நம:
த்வாதசே க்ருத-யதீ-வேஷாய நம:
விம்சே தபஸ்-ஆர்த-வபுர்-தராய நம:
பஞ்ச-விம்சே வேதாந்த-விஜ்ஞான-ஸுதிஸ்சிதார்த்தாய நம:
த்ரிம்சே ஸ்வாத்ம-பீயூஷ-ரஸாஸ்வாதன-சீலாய நம:
சத்வாரிம்சே மணிகர்ணிகா-மக்ன-பரிவ்ராஜகாய நம:
பஞ்சாசே பூத-வ்ருந்தை: ஸெவித-பூஜ்ய-சரண-யுதாய நம:
பஞ்ச-பஞ்சரசே காமகோடே யோக லிங்கார்சன-மக்ன-மானஸாய நம:
ஷஷ்டிதமே தர்மேந்த்ரிவனே தத்த-சித்தாய நம:
பஞ்ச-ஷஷ்டிதமே காமாக்ஷீ-பதாம்போஜ-ஸேவனோல்லஸித மானஸாய நம:
ஸப்ததிதமே ஸ்ரீசன்ர-மந்திர-நிர்மாண-வபட்வாசார்யாய நம:
அசிந்தமே உத்தர-சிதம்பர-நிர்மாண-தூரீக்ருத-கலங்க-பாங்காய நம:
பஞ்சசிதமே நிஜ-பாவன-பதாம்போஜ-பவித்ரீ-க்ருத-பூமண்டலாய நம”:
நவதிதமே புராண-ஸுந்தர-மந்திர-பரிரக்ஷித-ஸஹஸ்ர-சந்த்ரதர்சினே நம:
சதாயுஷே ஜாஜ்வல்யமானாகண்ட-ரூபே திரோபூத-சிவாய-கேவளாய நம:
ஸ்ரீசங்கர-ஸ்தாபிதாதிம-பீடாசார்ய-வர்ய-ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர-ஸரஸ்வதீ-ஸ்வாமினே நம:

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||



PLEASE jOIN IN THIS அம்பகவ! UMBHAGAVA!
எல்லோரும் ‘அம் பகவ’: மந்திரோபதேசம்!
மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா!
இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்று மஹா பெரியவா கூறினார்கள்.
இதை எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்!மஹா பெரியவா!
எல்லோரும் ஜபிக்க அம்பகவ!
அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ! அம்பகவ!அம்பகவ!அம்பகவ!
LET US WRITE AT LEAST 36 TIMES A DAY.
UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA! UMBHAGAVA!
PLEASE jOIN IN THIS அம்பகவ! UMBHAGAVA( Daily)
 — with Mannargudi Sitaraman Srinivasan.






































1 கருத்து:

  1. Sri Krishnamoorthi Balasubaramanian,

    Just came across a post by Sri Sai Srinivasan(https://mahaperiyavaa.wordpress.com/2016/05/01/incredible-manthra-upadesam-by-maha-periyava/#comment-36474) in which he has pointed out this Mantra Upadesam by Maha Periyava. But he has mentioned the mantra as அம் பகவஹ (UMBHAGAVAHA......Request you to kindly clarify the correct pronounciation of the mantra. Dont want to pronounce it incorrectly. I have written a similar clarification to Sri Sai Srinivasan also.

    Regards,
    Swaminathan Ramanathan

    பதிலளிநீக்கு