வியாழன், 4 ஜூலை, 2013

ரிஷிகள்

ராதே கிருஷ்ணா 04-07-2013


ரிஷிகள்
temple
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் ...மேலும்

temple

பிருகு மகரிஷிஜனவரி 18,2011

உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். பிருகு என்னும் சொல்லுக்கு, கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பாசுக்குபவர் என்று ... மேலும்

temple

சுகபிரம்மர்ஜனவரி 18,2011

குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி ...மேலும்

temple

வால்மீகிஜனவரி 18,2011

திருடன் ஒருவன் தனது குதிரையில் காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது சில முனிவர்கள் வந்தனர். விசாலமான நெற்றி, பிரகாசம் பொருந்திய முகம், ஒளி பொருந்திய கண்கள் என்று ...மேலும்

temple

பரத்வாஜர்ஜனவரி 18,2011

அன்பான சீடரே! இந்த தண்ணீரைப் பாருங்கள். நல்லோர்களின் மனம் போல, எவ்வளவு அழகாகவும், தெளி வாகவும் இருக்கிறது, ராம பிரானின் புண்ணிய சரிதமான ராமாயணத்தை இயற்றும் முன்பாக வால்மீகி ... மேலும்

temple
பரதகண்டம் என பெயர்பெற்ற இந்த புண்ணிய பூமியில் பல சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களின் தலை சிறந்தவராக வியாசர் கருதப்படுகிறார். வியாசர் துவாபராயுகம் முடியும் ... மேலும்

temple

வசிஷ்ட மகரிஷிமார்ச் 26,2011

ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மா படைப்புத்தொழிலைச் செய்தபோது, பிரஜாபதிகள் என்னும் பத்துப்பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் ... மேலும்

temple

நாரதர்மார்ச் 26,2011

உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு ... மேலும்

temple

பராசரர்மார்ச் 26,2011

வசிஷ்டரின் பேரரான பராசரர், சக்தி ரிஷியின் புத்திரராக அவதரித்தார். சக்தி ரிஷியையும், அவருடைய சகோதரர்கள் நூறுபேரையும் ருதிரன் என்னும் ராட்சஷன் கொன்று குவித்தான். பூலோகத்தில் ... மேலும்

temple

கவுதமர்மார்ச் 26,2011

ஆங்கிரஸ் மகரிஷியின் வம்சத்தில் தோன்றிய மகரிஷிகளில் கவுதமர் மிக முக்கியமானவர். இவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார். தீர்க்கதமஸ் என்னும் மகரிஷிக்கும், ... மேலும்


























































 10 ரிஷிகள்
அத்திரி மகரிஷி
ஜனவரி 18,2011

அ-
+
Temple images
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார். ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள். ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள்  தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவி<லும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே.
யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்தி<லும், ஜோதிட சாஸ்திரத்தி<லும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும். பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.









































































10 ரிஷிகள்
பிருகு மகரிஷி
ஜனவரி 18,2011

அ-
+
Temple images
உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். பிருகு என்னும் சொல்லுக்கு, கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பாசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன. பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள்.பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது. மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார். சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார். பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்.பிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் . இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், அதோ பார்! அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர்.
விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர். ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான். புலோமாவிற்கு திருமணவயது வந்தது. பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது. புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான். இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார். அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்கவேண்டியிருந்தது.ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்கு கிளம்பினார். அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் . இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, சுவாமி! நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா? இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகி விட்டாள் ! என்று நியாயம் பேசினான். அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள், திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்ப இயலாது, என்று மறுத்து விட்டார். பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான். இவள் என் மனைவி! நான் இவளைத் தூக்கிச் செல்வேன்! என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான். அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள். அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள்.
அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான். பிருகு தன் அனுஷ்டானங் களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார். நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன. தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்து பார்த்தார். தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது. ஏ! அக்னி! நீ யாகத்தீயாகவும், அடுப்புத் தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய். மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார்.மனம் வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா.  அக்னியே! உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே. இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவையில்லாதவர்களாகவே இருப்பர். அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் உன்னால் பொருட்களையும், உயிரையும் இழப்பர். எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார். புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார். பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார். ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார். அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பல காணப்படுகின்றன. பிராமண சமுதாயத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராக இருப்பவர் இவர்.




















































































 10 ரிஷிகள்
சுகபிரம்மர்
ஜனவரி 18,2011

அ-
+
Temple images
குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார்.  கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன. தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது.மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை <உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர்.குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தேவகுரு பிரகஸ்பதி சுகருக்கு வேதங்களைக் கற்பித்தார்.
சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார். பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான். உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. இவரைப் பற்றிய இன்னொரு சம்பவமும் சுவையானது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதைதெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள்.  திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை.  அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.









































































10 ரிஷிகள்
வால்மீகி
ஜனவரி 18,2011

அ-
+
Temple images
திருடன் ஒருவன் தனது குதிரையில் காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது சில முனிவர்கள் வந்தனர். விசாலமான நெற்றி, பிரகாசம் பொருந்திய முகம், ஒளி பொருந்திய கண்கள் என்று ஏழுபேரும் தவசிரேஷ்டர்களாக இருந்தனர். அவர்களை மறிக்க அவன் நெருங்கினான். அப்போது, அவர்களது முகத்தில் இருந்து கிளம்பிய ஒளி, அவனது கண்களைக் கூச வைத்தது.திருடனுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும், அவர்களில் ஒருவரையாவது தாக்கி அவரிடம் உள்ள கமண்டலத்தையாவது பறித்து விடும் எண்ணத்தில் பின் தொடர்ந்தான். ஒரு முனிவர் ஒரு கிணற்றின் கரையில் நின்றார். மற்றவர்கள் முன்னால் சென்று விட்டனர். திருடன் தனது வில்லால் அந்த முனிவரைத் தாக்க முயன்றான். ஆனால், மனதில் ஏதோ குழப்பம் உண்டானது. திடீரென்று அவர் முன் போய் நின்றான். சாஷ்டாங்கமாய் பாதத்தில் விழுந்தான். அருளே உருவான அந்த முனிவர் பாதத்தில் விழுந்தவனை எழுப்பினார்.மகனே! தயங்காமல் உன் தேவையை என்னிடம் சொல்! என்றார். திருடன் அவரிடம்,சுவாமி! என் குடும்பம் பட்டினியாக இருக்கிறது. உங்கள் பொருளை எடுத்துச் சென்றால் தான் என் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும், என்றான். இதைக் கேட்ட முனிவர் கலக்கம் கொள்ளவில்லை. உன் விருப்பப்படியே செய். எனக்குத் தடையேதும் இல்லை. ஆனால், உன் நலத்திற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல், என்றார். திருடன், அதற்கென்ன!  தாராளமாக பதில் சொல்கிறேன், என்றான். நல்ல நிலையில் உள்ள ஒரு உயிரை இம்சை செய்து பொருட்களைப் பறிப்பது கொடியபாவம் என்கிறது தர்மசாஸ்திரம். நீ செய்வது பாவம் தானே! என்றார் ரிஷி.ஆமாம்! நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். ஆனால், இதைத் தவிர வேறு தொழில் தெரியாதே. தெரிந்தே இப்பாவத்தைச் செய்கிறேன், என்றான்.ரிஷி மேலும் கேட்டார்,ஒருவனை அடித்து எடுத்துச் சென்ற பொருளை நீ ஒருவனே அனுபவிக்கிறாயா?இல்லை சுவாமி! என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதில் பங்குண்டு. நான் கொண்டு செல்<லும் பொருளில் தான் எல்லாருக்கும் சாப்பாடு நடக்கிறது, என்றான்.
நீ கொண்டு போகும் பொருளை அனுபவிக்கும் உன் குடும்பத்தார் உன்னைச் சேரும் பாவத்திலும் பங்கெடுப்பார்களா? என்ற ரிஷியிடம், இதற்கு பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. குடும்பத்தலைவன் என்ற முறையில் ஏதோ தொழில் செய்து அவர்களுக்கு உணவிடுவது என் கடமை,என்றான் திருடன். நல்லது! உன் பாவத்திலும் குடும்பத்தினர் பங்கெடுப்பார்களா என்பது இப்போது மிக முக்கியமான விஷயம். உன் ஈனச் செயல்களால் பெரும் பாவங்களை மலைபோல குவித்திருக்கிறாய். நான் மட்டுமல்ல... மற்ற ரிஷிகளையும் இப்போதே அழைத்து வந்து இங்கேயே அமர்ந்திருக்கிறேன். நீ சென்று உங்கள் குடும்பத்தாரின் நிலையை அறிந்து வந்து எங்களிடம் தெரியப்படுத்து! பின்னர் உன் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் தாக்கி பொருளைப் பறித்துக் கொள்ளலாம். என்று யோசனை தெரிவித்தனர். திருடன் அவர்களிடம், என்ன! கபடநாடகம் நடத்துகிறீரா? என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இங்கிருந்து தப்பி விடலாம் என்று தானே இப்படியொரு திட்டம் போட்டிருக்கிறீர். அது நடக்காது,என்றான்.முனிவர் அவனிடம், நீ திரும்பி வருகின்ற வரையில் நான் இங்கிருந்து நகர மாட்டேன். இது சத்தியம். நீ தாராளமாக என்னை நம்பலாம். சீக்கிரம் கேட்டுவிட்டு மட்டும் வந்துவிடு. உன் நன்மைக்காகத் தான் இதைச் சொல்கிறோம். என்றார்.முனிவரின் வார்த்தையில் உண்மை இருப்பதாக திருடனின் மனதிற்குப்பட்டது.அவன் வீட்டுக்குச் சென்றான்.பசியோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு வெறுங்கையோடு அவன் வந்தது கோபத்தை உண்டு பண்ணியது.அவர்களின் எண்ணத்தை உணர்ந்த கள்வன்,  கோபப்படாதீர்கள். இன்றைக்கு உங்களுக்கு வேண்டிய பொருளுக்கு ஏற்பாடு செய்து விட்டேன்.
என் சந்தேகத்திற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்,என்றவன், அன்றாடம் நான் பாவம் செய்து கொண்டு வரும் உணவை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், என் பாவத்திலும் பங்கெடுப்பீர்களா?என்று கேட்டான்.குடும்பத்தலைவனான நீர் கொண்டுவரும் உணவில் தான் எங்களுக்கு பங்குண்டே தவிர, அதனைப் பெறும் வழி பாவமோ, புண்ணியமோ, அதைப்பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. அதில் எங்களுக்கு பங்கும் இல்லை. சீக்கிரம் இன்றைய உணவிற்காக ஏற்பாட்டினைச் செய்யும், என்றனர்.வீட்டாரின் பதிலைக் கேட்ட திருடனுக்கு ஞானம் பிறந்தது. திரும்ப வந்தான். அதற்குள் ஏழு முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். அவர்களின் காலில் விழுந்தான். இதுநாள் வரை தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தரும்படி கண்ணீர் விட்டான். ஞானிகளின் தரிசனம் வீண்போகுமா? திருடன் அறிவுக்கண் பெற்றான். அவனுக்கு ராம மந்திரத்தைப் போதித்தனர். அங்கிருந்த மரா மரத்தின் அடியில் அமர்ந்து அம்மரத்தின் பெயரையே உச்சரித்து வரும்படி கூறினர். இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்தால் இன்றோடு உன் பாவமூட்டை உன்னை விட்டு அகன்று விடும். நீ நற்கதி பெறுவாய், என்று அருள்செய்து விட்டு அவர்கள் மறைந்தனர். காலச்சக்கரம் சுழன்றது. கள்வன் தன் மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்ய, மரத்தடியில் அமர்ந்தான். அவன் அமர்ந்திருந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லி வந்தான். அதை வேகமாகச் சொல்லும் போது, அவனையறியாமல் ராம என மாறியது. அவன் கண்விழிக்கவே இல்லை. சுற்றிலும் புற்று உண்டானது. ராமநாமத்தால் அவனின் பாவங்கள் அடியோடு நீங்கின. அவர் பெரிய மகான் ஆனார். புற்றில் இருந்து வந்த மகான் என்பதால், அவருக்கு வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது. வால்மீகம் என்றால் புற்று எனப்பொருள். இவரே ராமாயணம் என்னும் தெய்வீக காவியத்தை நமக்கு அளித்தார். யோகவாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.













































































 10 ரிஷிகள்
பரத்வாஜர்
ஜனவரி 18,2011

அ-
+
Temple images
அன்பான சீடரே! இந்த தண்ணீரைப் பாருங்கள். நல்லோர்களின் மனம் போல, எவ்வளவு அழகாகவும், தெளி வாகவும் இருக்கிறது, ராம பிரானின் புண்ணிய சரிதமான ராமாயணத்தை இயற்றும் முன்பாக வால்மீகி மகரிஷி, தன் சீடரான பரத்வாஜரிடம் சொன்ன வார்த்தை இது. ராமபிரான், தெளிந்த தண்ணீர் போல பரிசுத்தமானவர் என்பதை, இவ்வாறு சுருங்கக் கூறினார் வால்மீகி. இதனால், பரத்வாஜரை ராமாயணத்திற்கு சாட்சி யானவர் என்று சொல்வதுண்டு.வால்மீகியின் சீடர்களில் பிரதான மானவர் பரத்வாஜர். இவர் சீடராக இருந்தவேளையில் தான், வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். பரத்வாஜர், பல மகரிஷிகளிடம் சீடராக இருந்து, அவர்களிடமிருந்து வேதங்கள், அதன் உட்பொருள் என சகல விஷயங் களையும் கற்றுத்தேர்ந்தார். கற்றலில் ஆர்வம் கொண்டு, தன்னை தாழ்த்திக் கொண்டு, தம்மை ஒத்த ரிஷிகளிடம் கூட சீடராகத் தொண்டாற்றினார்.பரத் என்றால் தாங்குகிறவர் என்றும், வாஜம் என்றால் வலிமை என்றும் பொருள். வலிமையான தேகத்தை உடையவர் என்பதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. வாஜம் என்றால் அன்னம் (உணவு), அரிசி, நீர், நெய், யாகத்தில் பயன் படுத்தும் பொருள், பரிசு, வேகம், செல்வம் என்றும் பொருள் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் பொறுப்புடையவராக இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சித்திரை மாதத்திற்கு வாஜம் என்ற பெயருண்டு.தேவர்களின் குருவான பிரகஸ்பதி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் சகோதரரின் மனைவி மமதையுடன் கூடியதாக சொல்லப்படுகிறது. இதனால் தோன்றிய குழந்தையை வளர்க்கும் படி பிரகஸ்பதி மமதையிடம் கூறினார். அவளோ, பிரகஸ்பதியே வளர்க்க வேண்டுமென்றாள். இறுதியில் இருவரும் குழந்தையை விட்டுச் சென்றனர்.
குழந்தையில்லாத ஒரு தம்பதியர் அதை எடுத்து வளர்த்தனர். தேவர்கள் அவருக்கு பரத்வாஜர் எனப் பெயர் சூட்டினர். இவரது பெயரை பர த்வாஜம் எனப் பிரித்தால் இருவருக்குப் பிறந்தவர் என்று பொருளாகும். இவரே பிற்காலத்தில் பெரிய மகரிஷியாகி, சப்த ரிஷிகளிலும் ஒருவரானார். இவரது பிறப்பு இழிவான நிலையில் இருப்பதால்தான், ரிஷி மூலம் காணக்கூடாது என்ற பழமொழியே உருவானதாகச் சொல்வர். யமுனை நதிக்கரையில் தங்கியிருந்து, வெகுகாலம் வாழ்ந்தவர் இவர்.பரத்வாஜர் வேதங்களின் மீது முழு ஈடுபாடு கொண்டவர். வேதத்தை முழுமையாகக் கற்க விரும்பிய இவர், அதற்காக கடும் சிரத்தையெடுத்தார். இதற்காக அவர் மூன்று முறை ஆயுள் நீட்டிப்பு பெற்று வேதம் கற்றார். நான்காவது முறையாகவும் ஆயுளை நீட்டித்துக்கொள்ள, இந்திரனை வேண்டினார். அவரிடம் வந்த இந்திரன், மூன்று மலைகளைக் காட்டி, அதிலிருந்து கைப்பிடியளவு மண் கொடுத்தான். அம்மலையின் அளவிற்கு வேதம் இருப்பதாகச் சொன்னவன், கைப்பிடி மண்ணளவிற்கே அவர் வேதம் கற்றதாக உணர்த்தினான். இவ்வாறு வேதம் கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக பரத்வாஜர் திகழ்ந்தார். இதை, யஜுர் வேதம் குறிப்பிடுகிறது. யஜுர் வேதத்திற்கு இவர் விளக்கம் எழுதி யுள்ளார். ரிக் வேதத்தில் வரும் பல சூக்தங்களுக்கு பரத்வாஜர் ரிஷியாக இருக்கிறார். சாமவேதம் என்பது இசை வடிவம் கொண்டது. இதில், பரத்வாஜரின் பெயரால் ஒரு பகுதி இருக்கிறது. பரத்வாஜர் விருந்தோம்பல் செய்யும் குணத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
ராமபிரான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர்.ராமர், காட்டிற்குச் சென்றபோது, அவரை அயோத்திக்கு மீண்டும் அழைத்து வர பரதன் சித்திரக்கூட மலையை நோக்கிச் சென்றார். அவருடன் ராமபிரானை தங்கள் நாட்டிற்கு அழைத்து வருவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர் களும் கிளம்பினர். வழியில் பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை பரதன் கண்டான். அவனையும், உடன் வந்தவர்களையும் உபசரித்தார் பரத்வாஜர். அவரது விருந்தை ஏற்றுக் கொண்ட அனைவரும் பரதனிடம், நாங்கள் அயோத்திக்கும் வரவில்லை. தண்ட காரண்யத்திற்கும் செல்லவில்லை. நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுகிறோம், என்றனர். ராமபிரானை அழைத்து வரும் தங்களது தலையாய கடமையைக்கூட மறந்து, பரத்வாஜருடன் தங்கிவிடுவதாக கூறும் அளவிற்கு அவர்களை உபசரித்தவர் பரத்வாஜர். வனவாசம் முடிந்ததும் ராமன் அயோத்திக்குத் திரும்பினார். குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு திரும்பாவிட்டால் பரதன் உயிரை விட்டுவிடும் இக்கட்டான சூழ்நிலை அது! இதற்காக விரைவாக நாடு திரும்பிக்கொண்டிருந்த நிலையிலும், ராமபிரான், வழியில் இருந்த பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்று நாடு திரும்பினார். தனக்காக பசி, தூக்கம் மறந்து உதவி செய்த வானர வீரர்களுக்கு, விருந்து கொடுக்க வேண்டு மென விரும்பிய ராமன், அதை பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் நிறைவேற்றி வைத்தார். மகாபாரதத்தில் கவுரவர், பாண்டவர்களுக்கு வில் வித்தை கற்றுக்கொடுத்த குரு துரோணாச்சாரியார் ஆவார். இவர், பரத்வாஜ தலைமுறையில் வந்தவர் என்பதால், துரோணாச்சாரியாருக்கும் பரத்வாஜர் என்ற பெயருண்டு. பரத்வாஜ சீக்ஷõ, பரத்வாஜ சம்ஹிதா, பரத்வாத சூத்திரம், பரத்வாஜ ஸ்ம்ருதி என பல நூல்களை பரத்வாஜர் இயற்றியுள்ளார்.



































































 10 ரிஷிகள்
வேதநாயகர் வியாசர்
மார்ச் 26,2011

அ-
+
Temple images
பரதகண்டம் என பெயர்பெற்ற இந்த புண்ணிய பூமியில் பல சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களின் தலை சிறந்தவராக வியாசர் கருதப்படுகிறார். வியாசர் துவாபராயுகம் முடியும் சமயத்திலும், கலியுகம் ஆரம்பமாவதற்கு முன்பும் அவதாரம் செய்தவர் என்று புராணங்கள் வழியாக அறியமுடிகிறது. அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் அறநெறியையும், ஆன்மிக தத்துவத்தையும் உலகிற்கு வழங்கிய வண்ணம் இருந்தார். எல்லாவற்றிற்கும் ஆதாரமான வேதத்தில் சொல்லியுள்ளபடி கலியுகத்தில் பக்திமார்க்கம் குறைந்து நசித்து போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரே வடிவாக இருந்த வேதத்தையும், அதன் சிதறிக்கிடந்த பாகங்களையும் தொகுத்து ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என நான்காக பிரித்தார். பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை விளக்குவது தான் வேதம். இறைவனை மந்திரங்களாக துதித்து வழிபடும்படி வழிகாட்டுவது ரிக்வேதம். மனிதன் தன் ஆயுளில் செய்ய வேண்டிய சடங்குகள், அதற்கு தேவையான உபகரணங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய யாகங்கள் ஆகியவை பற்றி தெரிவிப்பது யஜுர் வேதமாகும். பாடல்களால் இறைவனை துதிப்பது சாம வேதம் ஆகும். இதனால்தான் இசையில் சாமகாணம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மந்திர தந்திரம், மருத்துவம், சக்தி, வழிபாடு ஆகியவை பற்றி விளக்குவது அதர்வண வேதம். இவற்றை தொகுத்து மக்களுக்கு அளித்ததன் மூலம் அவர் வேதவியாசர் எனப்பட்டார். வியாசர் என்ற சொல்லுக்கு தொகுத்தவர் அல்லது ஆராச்சியாளர் என பொருள்.
இந்த வேதங்களில் ரிக் வேதத்தை சுமந்து என்ற மகரிஷியிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயணரிடமும், சாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை பைலரிடமும் ஒப்படைத்து அவற்றைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். வேதங்களின் கருத்துக்களை உள்ளடக்கி 18 புராணங்களாகவும், மகாபாரதமாகவும் உருவாக்கினார். அதை சூதம் என்ற முனிவருக்கு உபதேசித்தார். சூதர் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி அனுக்ரஹம் செய்தார். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் தன்னை மாற்றிக்கொண்டார்.வியாசர் சத்தியவதி தாயின் மகன். இவள் ஒரு ராஜகுமாரி. விதிவசத்தால் ஒரு மீனவக் குடும்பத்தின் வளர்ப்பு மகள் ஆனாள். அந்த மீனவர் தலைவன், சத்தியவதிக்கு பரிசல் ஓட்ட கற்றுத் தந்தான். ஒருமுறை பராசர முனிவர் என்பவர் அந்தப் பரிசலில் பயணம் செய்தார். அந்த நேரம் இந்த உலகில் ஒரு மகாபுருஷன் தோன்ற வேண்டிய நல்ல நேரம். அந்த மகாபுருஷனை கலியுகம் முடிந்து, இந்த உலகம் அழியும் வரை மக்கள் மறக்க மாட்டார்கள். அவன் எழுதப் போகும் காவியம், படித்தவன், படிக்காதவன் என எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும் என்பதை பராசரர் உணர்ந்திருந்தார். பராசரர் அந்தப் பெண்ணிடம், நாம் இப்போது ஒன்று சேர்ந்தால் உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் பிறப்பான். இதனால் உன் கன்னித்தன்மை பாதிக்காது. அவன் பிறந்த உடனேயே நீ மீண்டும் உன் கன்னித் தன்மையை அடைவாய், என்றார்.  சத்தியவதி சம்மதித்தாள். பராசரர் ஆற்றின் நடுவிலுள்ள ஒரு தீவை அடைந்தார். அந்தப் பகுதியை இருள் சூழ வைத்தார். அவர்களுக்குப் பிறந்தார் வியாசர். அவர் மிக மிக கருப்பாக இருந்தார். தன் தாயிடம் தான் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். மகனைப் பிரியும் போது தாய் சத்தியவதி, எதாவது ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் உன்னை நினைப்பேன். அப்போது நீ வந்து எனக்கு உதவ வேண்டும், என்றாள்.
வியாசரும் ஒப்புக் கொண்டார். இதனிடையே குருவம்சத்து அரசன் சந்தனுவுக்கு பீஷ்மர் பிறந்தார்.ஒரு சந்தர்ப்பத்தில், பராசரருடன் கூடி வியாசரைப் பெற்ற சத்தியவதியை சந்தனு சந்தித்தான். அவள் மீது ஆசைப்பட்டான். பீஷ்மர் கடும் முயற்சியெடுத்து அவளையே தன் தந்தைக்கு திருமணம் செய்து வைத்தார். அவளுக்குப் பிறக்கும் குழந்தையே நாடாளும் என சத்தியம் செய்தார். அத்துடன் தானும் இனி திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என சபதம் எடுத் தார். தந்தைக்காக தன் வாழ்க்கையையே துறந்து துறவி போல் வாழ முடிவெடுத்தார்.சந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்னும் மக்கள் பிறந்தனர். இவர்களில் சித்திராங்கதன் ஒரு போரில் கொல்லப்பட்டான். விசித்திரவீரியன், காசி மன்னனின் மகள்கள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை மணந்தான். அவனும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை எதுவும் பிறப்பதற்குள் இறந்தான். இப்போது அந்தக் குடும்பத்தில் எஞ்சியது பீஷ்மர் மட்டுமே. வேறு வழி இல்லாததால் பீஷ்மரை பட்டம் சூட்டிக் கொள்ளக் கூறினாள் சத்தியவதி. ஆனால் தான் செய்த சத்தியத்தை மீற மாட்டேன் எனக் கூறிவிட்டார் பீஷ்மர். நாடாள வாரிசு இல்லாத நிலையில், தன் மகன் வியாசரை நினைத்தாள் சத்தியவதி. தாயின் உணர்வுகளை புரிந்து கொண்டு அங்கு தோன்றினார் வியாசர். அவரிடம், சான்றோனாகிய நீ, நாட்டின் நலன் கருதி, உன் தமையனின் மனைவியருடன் கூடுவதில் தவறில்லை. அவர்களோடு கூடி குழந்தைகளைப் பெறுவாயாக, என்றாள்.
அம்பிகாவும், அம்பாலிகாவும் இதற்கு சம்மதித்தாலும், கரிய நிறமுடைய, தாடியும், ஜடாமுடியும் கொண்ட வியாசரை விரும்பவில்லை. இருப்பினும் மாமியாரின் விருப்பத்தை நிறைவேற்ற கண்ணை மூடிக் கொண்டு, வியாசருடன் ஒன்று சேர்ந்தாள் அம்பிகா. இதனால் அவளுக்கு ஒரு குருட்டு மகன் பிறந்தான். அவனுக்கு திருதராஷ்டிரன் என பெயர் சூட்டினர். இன்னொரு பெண்ணான அம்பாலிகா வியாசரின் உருவத்தை கண்ட மாத்திரத்தில் முகம் வெளுத்தது. அவள் வெளுத்த முகம் கொண்ட ஒரு மகனைப் பெற்றாள். அவன் பாண்டு எனப்பட்டான். அம்பிகாவுக்கு குருட்டு மகன் பிறந்ததால், இன்னும் ஒரு மகனைப் பெற அம்பாலிகாவைக் கேட்டுக் கொண்டாள் சத்தியவதி. ஆனால், அம்பிகா வியாசருடன் சேர விரும்பாமல், தனக்கு பதிலாக தன் தாதி ஒருத்தியை அனுப்பி விட்டாள். அவள் வியசாருடன் மனம் உவந்து, அவரது தவவலிமையை மட்டும் நினைத்து கூடினாள். அவளுக்கு விதுரன் என்ற மகன் பிறந்தான். இப்படி பாரதக் கதையை துவக்கி வைத்தவரே வியாசர் தான். இவ்வகையில் அவர் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் தாத்தா ஆகிறார். இதைத்தவிர வேதங்களில் உள்ளடங்கி உள்ள தத்துவங்களை சுருக்கமாக மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் பிரம்மசூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரங்களாக உருவாக்கினார். இது பிக்ஷú சூத்திரம் என்றும், வியாச சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.
தனது நுண்ணறிவால் மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்து மதத்தின் ஆதிகுருவாக வேதவியாசர் போற்றப்படுகிறார். இவர் ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். சிரஞ்சீவி என்றால் என்றும் வாழ்பவர் என பொருள். கலியுகம் தோன்றி எவ்வளவோ ஆண்டுகளாகி விட்ட போதிலும் வியாசரின் மகாபாரதம் இன்றும் மக்களுக்கு வேதம் போல் விளங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டுமென உபன்யாசகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விளங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதம் என்படும் ஆனி பவுர்ணமியின் குருவை வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வடமாநிலங்களில் ஆனி பவுர்ணமியை குரு பூர்ணிமா என சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஞானத்தை உணர்ந்துவதால் குரு பரம்பொருளாக சொல்லப்படுகிறார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார். அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம். தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம். குரு பக்தியால் பிறப்பற்ற நிலையை எய்தலாம். ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களாக இறைவன் அவதரித்த போது அவர் கூட ஒரு குருவிடம் தீட்øக்ஷ பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.



































































































10 ரிஷிகள்
வசிஷ்ட மகரிஷி
மார்ச் 26,2011

அ-
+
Temple images
ரிஷிகளில் வசிஷ்டருக்கு சிறப்பிடம் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மா படைப்புத்தொழிலைச் செய்தபோது, பிரஜாபதிகள் என்னும் பத்துப்பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிமக்களை உருவாக்கி உலகத்தை விரிவாக்கினர். அவர்களில் ஒருவர் வசிஷ்டர். அதனால் வசிஷ்டர் பிரம்மாவின் பிள்ளை என்கிறது ராமாயணம்.வசிஷ்டரின் பிறப்புக்கு வேறு புராணகாரணமும் சொல்வார்கள். மித்ரன், வருணன் என்று இரண்டு தேவர்கள் இருந்தனர். அந்த இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் என்பதால் அகத்தியர், வசிஷ்டர் இருவரும் மைத்ராவருணி என்ற பெயரால் அழைக்கப் படுவதாக  ரிக்வேதத்தில் கூறப் பட்டுள்ளது. வசிஷ்டரிஷியின் மனைவியான அருந்ததி, கர்தம பிரஜாபதி, தேவஹூதி தம்பதியரின் புதல்வியாகப் பிறந்தவள். இவள் சிறந்த பதிவிரதையாக வாழ்ந்ததால் பத்தினிக்கடவுளாகப் போற்றப்படுகிறாள். கணவரைப் போலவே மகாதபஸ்வியாக வாழ்ந்தவள் அருந்ததி. திருமணங்களில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டு. மணமகளுக்கு மிகச்சிறிய நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் மணமகன், இவள் அருந்ததியை உதாரணமாகக் கடைபிடித்து வாழவேண்டும் என்று சொல்லும் சடங்கு மிக நயமானது. வசிஷ்டரை விட்டுப் பிரியாத பாக்கியம் பெற்றவள் அருந்ததி. ஒருமுறை வால்மீகி ஆஸ்ரமத்திற்கு, சீதையின் தந்தையான ஜனகர் வந்தபோது, அங்கு தற்செயலாக வந்திருந்த அருந்ததியைக் கண்டு கைகூப்பினார். அவளும் உபநிஷத் வாக்கியங்களைச் சொல்லி ஜனகரை வாழ்த்தியதாக உத்தர ராமசரித கதை கூறுகிறது.
பிரம்மாவின் பிள்ளையாகப் பிறந்த இவருக்கு வேதங்களும், நந்தினி என்ற ஒரு தெய்வீகப்பசுவுமே செல்வமாக இருந்தது. நந்தினி பசுவின் காரணமாக, வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் பகையை சந்திக்க வேண்டி வந்தது. விஸ்வாமித்திரர்  ரிஷியாவதற்கு முன் கவுசிகன் என்ற மன்னனாக இருந்தார். அவர் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாட வந்த போது, வசிஷ்டரின் ஆஸ்ரமத்தைக் கண்டார்.வசிஷ்டர்,  கவுசிகனை வரவேற்று அவருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் கணநேரத்தில் விருந்தளித்தார். இதைக் கண்டு கவுசிகனுக்கு பிரமிப்பு உண்டானது.ஆள் நடமாட்டம் இல்லாதகாட்டில் நினைத்தவுடனே வசிஷ்டர் விருந்து கொடுத்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டார். அங்கிருந்த நந்தினி பசு மூலமே இத்தகைய இனிய விருந்தை தர முடிந்தது என்று தெரிந்து கொண்டார். கவுசிகன் வசிஷ்டரிடம், ஆயிரம் பசுக்களைக் கூட உங்களுக்குத் தருகிறேன். எனக்கு நந்தினிப்பசுவைத் தாருங்கள், என்று கேட்டார். ஆனால், வசிஷ்டர் சம்மதிக்கவில்லை. கவுசிகன் பலாத்காரத்தால் சண்டையிட்டு பசுவைக் கொண்டுபோக எண்ணி போர் தொடுத்தார். ஆனால், வசிஷ்டர் கவுசிகனின் சேனைகளைத் தோற்கடித்தார். அவமானம் தாங்காமல் கவுசிகன் தலைகுனிந்தார். ஆட்சியில் இருப்பவர்களை விட தவசீலர்களுக்கே மதிப்பு அதிகமென்பதைப் புரிந்து கொண்டு, தவம் செய்யத் தொடங்கினார். தவத்தில் வென்று, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார். அவரே விஸ்வாமித்திரர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். ரிஷி என்றாலே இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது நியதி. வசிஷ்டரின் புத்திரர்களில் மூத்தவர் சக்தி. இவரைக் கல்மாஷபாதன் என்னும் நரமாமிசம் சாப்பிடும் ராட்சஷன் கொன்று தின்று விட்டான். வசிஷ்டருக்கு தன் பிள்ளை இறந்துவிட்டதால் புத்திரசோகம் உண்டானது.
உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்ற நியதி வசிஷ்டர் அறியாததா என்ன? இருந்தாலும், அவருடைய மனம் ஒருநிலையில் நிற்கவில்லை. அலைபாய்ந்தது. பின் 49 நாட்கள் செய்யும் ஏகஸ்மாந்ந பஞ்சாச யாகம் என்னும் யாகத்தைச் செய்தார். இதன் பயனாக மீண்டும் புத்திரபாக்கியம் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் கல்மாஷபாதனையும் கொன்று தன் வஞ்சத்தைத்தீர்த்துக் கொண்டார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த திரிசங்கு மன்னன், மனித உடலோடு சாகாமலே சொர்க்கம் செல்ல வேண்டும் என விசித்திரமான  ஆசை கொண்டான்.  தன் குலகுருவான வசிஷ்டரை அணுகி தன்விருப்பத்தைச் சொன்னான். ஆனால்,திரிசங்கு! நீ நினைப்பது நடக்காத காரியம். அந்த எண்ணத்தை இன்றோடு கைவிட்டுவிடு! என்றார் வசிஷ்டர். அவனுக்கு ஆவல் தணியாமல் மேலும்  மேலும், அதிகரித்துக் கொண்டே போனது. வசிஷ்டரின் பிள்ளைகளை போய் பார்த்து தன் நிலையை எடுத்துச் சொன்னான். அவர்கள் திரிசங்குவின் பேராசையைக் கண்டு கோபம் கொண்டு,நீ சண்டாளனாகப் போ! என்று சபித்துவிட்டனர். இறுதியாக திரிசங்கு விஸ்வாமித்திரரைச் சந்தித்தான். வசிஷ்டரின் மீது கொண்ட பகையால் இதை ஒருசவாலாக எண்ணி ஏற்றுக் கொண்டார். இதனால், அரும்பாடுபட்டு சேமித்து வைத்த தபோசக்தியை எல்லாம் இழந்தார்  விஸ்வாமித்திரர். வெற்றி வசிஷ்டருக்குத் தான் கிடைத்தது. வசிஷ்டர் தமது தவமகிமையால் நினைத்தபடி எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் தான். ஆனால், அவருடைய செயல்கள் எல்லாம் நியாயத்தின் அடிப்படையில் தான் இருக்கும். தன் உடலோடு வசிஷ்டர் பல உலகங்களுக்கும் அவ்வப்போது செல்வதுண்டு. ஆனால், அங்கேயே நிலையாக இருப்பதில்லை. யாகங்கள் முடிந்தவுடன் அங்கிருந்து வந்து விடுவார். தசரதசக்கரவர்த்தியின் தேர் பத்து திசைகளிலும் தடையின்றிச் செல்லும். வசிஷ்டரிஷியின் மகிமையால் தான் இப்பெருமை தசரதருக்கு வந்தது. அதைப்போலவே ரகு மகாராஜன் என்னும் மன்னனுக்கு, குபேரனிடம் செல்வதற்காகஒரு விசேஷமான தேரினை பெற்றுத் தந்தவர் வசிஷ்டர் தான். ரகுவம்சத்தில் காளிதாசர் இதை அழகாக விவரிக்கிறார்.ராமாயணத்தில் தசரதருக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து எம்பெருமான் விஷ்ணு ராமாவதாரத்தை இப்பூமியில் எடுக்கச் செய்த பெருமை வசிஷ்டருக்கே உரியது. இன்னும் சொல்லப்போனால், குலகுரு வசிஷ்டரால் தான் ராமாயண வரலாறு முழுவதுமே திட்டமிடப் பட்டது. ராவண யுத்தம் முடிந்தபின், ராமனுக்கு வசிஷ்டரே முடி சூட்டி வைத்தார். ராமராஜ்யத்திற்கு முடிசூட்டிய பெருமை இவரையே சேரும். சூரியகுலத்தில் இக்ஷ்வாகுவம்சத்து மன்னர்களுக்கெல்லாம் குலகுருவாக இருந்து ராஜ்யபரிபாலனம் செய்ததில் வசிஷ்டர் முக்கியபங்கு வகித்தார்.







































































































 10 ரிஷிகள்
நாரதர்
மார்ச் 26,2011
அ-
+
Temple images
உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி வெற்றியடையச் செய்வதில் இவர் கைதேர்ந்தவர். பரம்பொருளான நாராயணனின் நாபிக்கமலத்தில் (தொப்புள்) பிரம்மா அவதாரம் செய்தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா,நீங்கள் எல்லாரும் ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விஸ்தரியுங்கள், என்று கட்டளையிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியை அடைவதே தங்கள் குறிக்கோள் என்ற அவர்கள், இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர். எனவே பிரம்மா, மீண்டும் உலக சிருஷ்டியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றில் இருந்தும் புலஸ்தியர், புலஹர், அத்ரி, கிருது, மரீசி, ஆங்கிரஸ், பிருகு, தட்சன், கர்தமர், வசிஷ்டர் என்று ரிஷிவர்க்கத்தைப் படைத்தார். இவர்களில் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறந்தார் நாரதர். பிரபஞ்சத்தில் பலகோடி மக்களை உருவாக்கும்படி படைப்புக்கடவுள் அந்த ரிஷிகளுக்கு கட்டளையிட்டார். இவர்களில் நாரதரைத் தவிர மற்றவர்கள், தந்தையின் கட்டளையை ஏற்று, இவ்வுலகை விஸ்தரிக்கும்பணியில் முழுமூச்சாய் ஈடுபடத் தொடங்கினர். நாரதருக்கு இதில் உடன்பாடில்லை. தந்தையின் சொல்லை புறக்கணித்தார். அதோடு மட்டுமல்லாமல், பிரம்மாவுக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.
அப்பா! நீங்கள் தீயவழியில் செல்லும்படி என்னைத் தூண்டுகிறீர்கள். சத்விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லித் தரவேண்டியது தான் ஒரு தந்தையின் கடமை. அதைவிடுத்து இவ்வாறு தவறுக்கு வழிவகுப்பது நல்லதல்ல. நான் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை அன்றி மற்றொன்றைச் சிந்திக்காதவன். உலக சுகங்களை மறந்த என்போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது தான் உங்கள் கடமை,என்று புத்திமதி சொன்னார்.பிரம்மதேவருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. தன் பிள்ளை நாரதரைச் சபித்தே விட்டார். நாரதா! உன் அறிவு அழிந்து போகக் கடவது. நீ பெண் பித்தனாக வாழ்வாய். பருவமங்கையர் ஐம்பது பேரை மணம் செய்து கொண்டு காமாந்தகாரனாகத் திரிவாய். சங்கீதம், வீணையில் பாண்டித்யம், குரல்வளம் என்று குதூகலத்தோடு சிற்றின்பத்தில் மூழ்கிப் போவாய். உன் அழகையும், இளமையையும் கண்டு பெண்கள் மயங்கித் திரிவார்கள். பார்ப்பவர் கண்ணுக்கு கந்தர்வனைப் போல வாலிபனாகத் தெரிவாய், என்று சாபமிட்டார். மேலும், நீ தேவகூட்டத்தில் உபபர்ஹணன் என்று பெயரில் பிறந்து, இரண்டு லட்சம் ஆண்டுகள் சுகபோகங்களில் திளைப்பாய். அப்பிறவி முடிந்ததும், மறுபடியும் ஒரு தாசியின் வயிற்றில் பிறப்பாய். அப்போது உத்தம சிரேஷ்டர்களின் சகவாசம் உண்டாகும். அவர்கள் சாப்பிட்ட எச்சிலை உண்ட புண்ணியத்தால் ஸ்ரீகிருஷ்ணரின் அருள் கிடைக்கும். மீண்டும் என் மகனாகப் பிறவி எடுப்பாய். அப்போது தான் ஞானம் உண்டாகும், என்று சாபமிட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டார். நாரதர் பிரம்மாவின் சாபத்தை கேட்டு கதறி ஓலமிட்டார். அப்பா! இது தான் ஒரு தந்தைக்கு அழகா! நான் பல நீசப்பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு என்ன பெருமை உண்டாகப்போகிறது. இருந்தாலும் உங்களுக்காக இப்பிறவிகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், என் சிறுவிண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்பிறவி எடுத்தாலும், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பாதாரவிந்தங்களை மறக்காத பாக்கியத்தை மட்டும் தாருங்கள்,என்று வேண்டிக் கொண்டார். நாராயணா, நாராயணா என்று சொல்லிக்கொண்டே திரிந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் புஷ்கரம் என்னும் ÷க்ஷத்திரத்தில் கந்தர்வன் ஒருவன் நீண்டகாலமாக பிள்ளையில்லாமல் வருந்திக் கொண்டிருந்தான். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். கந்தர்வனின் தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி பிள்ளை வரம் தந்தார். பிரம்மசாபத்தின் பயனாக, நாரதர் கந்தர்வனின் மகனாக உபபர்ஹணன் என்ற பெயரில் பிறந்தார். சித்திரரதன் என்ற மன்னனின் மகள்களான ஐம்பது பெண்களையும் மணந்து சிற்றின்பத்தில் திளைத்தார். ஆனால், வீணாகானமும், ஸ்படிகமாலையும் கொண்டு ஹரிபக்தி கொண்டவனாகவும் வாழ்ந்தார். கந்தர்வனாக இருக்கவேண்டிய காலம் முடிவடைந்ததும் உயிர்நீத்தார். கான்யகுப்ஜ தேசத்தில் திரமிளன் என்ற அரசன் இருந்தான். அவனது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த சந்தர்ப்பத்தில் திரமிளனின் மனைவி கலாவதி கருவுற்று ஒரு ஆண்குழந்தையை ஈன்றாள். திரமிளனுக்கு குழந்தை வந்த நேரம், நாட்டில் மழை பெய்து நீர்வளம் நிறைந்தது. அதனால் நீர் என்ற பொருளில் நாரதன் என்று குழந்தைக்கு பெயரிட்டனர். (நாரம் என்றால் தண்ணீர். கடலில் மிதப்பவர் என்பதால் தான் திருமாலுக்கே நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது) ஒருநாள் நாரதரின் சகோதரர்களான சனகாதி முனிவர் நால்வரும் அதிதிகளாக கலாவதியிடம் வந்து உணவு பெற்றனர். சிறுவன் நாரதன் அவர்கள் சாப்பிட்ட மீதி உணவை வாங்கி சாப்பிட்டான். பணிவோடு நடந்து கொண்ட அந்தச் சிறுவன் மீது அன்பு கொண்டு அதிதிகள், அவனுக்கு ஸ்ரீகிருஷ்ணமந்திரத்தை உபதேசித்தனர். அன்று முதல் சிறுவன் நாரதன் கிருஷ்ணதாசனாக மாறிவிட்டான். சதா  கிருஷ்ண தியானத்தில் இருந்த நாரதருக்கு கிருஷ்ணரும் குழந்தை வடிவில் காட்சி தந்து மறைந்தார். மீண்டும் கிருஷ்ண தரிசனம் வேண்டி அழுதார் நாரதர். அப்போது, வானில் அசரீரி ஒலித்தது. நாரதா! பிரம்மாவின் சாபம் இன்றோடு உனக்கு நீங்கியது. மீண்டும் அவர் உடம்பிலேயே ஐக்கியமாகி விடுவாய் என்றது. பின்னர் மீண்டும் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறவி எடுத்து திரிலோகசஞ்சாரியாக மாறிவிட்டார். ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர் நாரதரே. பக்தபிரகலாதனுக்கு தாயின் கருவில் இருக்கும்போதே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அவனை நாராயண பக்தனாக்கினார். சின்னஞ்சிறு குழந்தை துருவனுக்கு விஷ்ணுமந்திரத்தை உபதேசித்து அவனை நட்சத்திர மண்டலத்தில் ஒளிவிடச் செய்தார். கலகப்பிரியராக இருந்து பல கலகங்களையும் ஏற்படுத்தி நன்மை ஏற்படச் செய்தார்.

















































































 10 ரிஷிகள்
பராசரர்
மார்ச் 26,2011
அ-
+
Temple images
வசிஷ்டரின் பேரரான பராசரர், சக்தி ரிஷியின் புத்திரராக அவதரித்தார். சக்தி ரிஷியையும், அவருடைய சகோதரர்கள் நூறுபேரையும் ருதிரன் என்னும் ராட்சஷன் கொன்று குவித்தான். பூலோகத்தில் நன்மையையும், தீமையையும் ஒரு மனிதன் அனுபவித்தே தீரவேண்டும் என்ற நியதியை வசிஷ்டர் அறிந்திருந்தார். ஆனாலும், சக்திரிஷி இறந்ததால், கடல்போன்ற புத்திரசோகத்தை மனதில் தேக்கிக் கொண்டு திரிந்தார்.தந்தைக்கே இப்படி என்றால் தாய்க்கு எப்படி இருக்கும்? வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் கணவரோடு மனம் கலங்கித் திரிந்தாள். குலமே வேரோடு சாய்ந்து விட்டதே! இனி வம்ச விருத்தி எப்படி உண்டாகும் என்ற எண்ணம் வசிஷ்டருக்கு உண்டானது. அப்போது, வசிஷ்டரின் மருமகளான அத்ருச்யந்தீ (சக்தி முனிவரின் மனைவி) தன் மாமனாரிடம் மாமா! நம் குலம் நிர்மூலமாகிவிடவில்லை. உங்கள் மகன் இறந்தபோது, நான் கருவினை வயிற்றில் சுமந்திருந்தேன். என் கர்ப்பத்தில் இருக்கும் நம் வம்சம் தழைக்க வந்த இந்தச் சிசு குலப்பெருமை காக்கும் மகாஞானியாக வருவான், என்று கூறி அவரைத் தேற்றினாள். ஆண்டுகள் உருண்டோடின. அத்ருச்யந்தீயின் வயிற்றில் இருந்த கரு 12 ஆண்டுகள் தாயின் வயிற்றிலேயே இருந்தது. ஒருமுறை தன் மருமகளின் முன்னே சென்று கொண்டிருந்த வசிஷ்டர் திடீரென நின்றார்.
அம்மா! அத்ருச்யந்தீ! என் பின்னால் யாரோ சுந்தரமொழியில் வேதகோஷம் செய்வதை என்னால் கேட்கமுடிகிறதே! இக்குரலைக் கேட்டால் என்பிள்ளை சக்தியின் பேச்சைப் போல இனிக்கிறதே! இது என்ன அதிசயம்! என்றார். மாமா! கர்ப்பவாசம் செய்யும் உங்கள் பேரன் தான் வேதமந்திரங்களை ஓதுகிறான். அடிக்கடி நான் இந்த மந்திர சப்தங்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். உபநயனகாலம் வந்து விட்டதால், தாமாகவே, சகலவேதங்களையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான், என்றாள். தங்கள் குலம் காக்க வரும் கோமகனை எண்ணி வசிஷ்டர் மனம் மகிழ்ந்தார். தாயின் வயிற்றிலேயே 12 ஆண்டுகள் இருந்து அந்த வயதுள்ள சிறுவனாக பிறந்தான் அந்தக்குழந்தை. தாத்தா வசிஷ்டர் அந்தப் பிள்ளைக்கு பராசரர் என்ற பெயர் வைத்தார். பராசரர் என்ற சொல்லுக்கு, பிறந்தவுடனேயே பகைவர்களை தன் தவவலிமையினால் சிதறிப் போகும்படி செய்பவன் என்பது பொருள். தாத்தா வசிஷ்டரை, அந்தக் குழந்தை தனது தந்தை என்று எண்ணிக் கொண்டு அவரை அப்பா என அழைத்தான். அத்ருசயந்தீ இதை எண்ணி மிகவும் மனவேதனைப்பட்டாள். ஆனாலும், ஆரம்பத்தில் இதைத் தடுக்க முடியவில்லை. எத்தனை நாள் தான் இந்த அவலத்தை அவளால் பொறுக்க முடியும்? ஒருநாள் பராசரரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டாள். அத்துடன், அவனது தந்தை, சித்தப்பாக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடுத்துச் சொன்னாள். பராசரருக்கு கோபம் கொப்பளித்தது.
தன் வம்சத்தாரைக் கொன்ற ராட்சஷன் ருதிரனையும், ராட்சஷ வம்சத்தையும் அழிக்க முடிவெடுத்து யாகம் ஒன்றைத் துவக்கினார். மந்திரங்களைச் சொல்லி ஹோமாக்னியை வளர்த்தார். பிரபஞ்சத்தில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இந்த யாகத்தை நிறுத்தும்படி புலஸ்தியர் என்ற மகரிஷி பராசரரிடம் மன்றாடினார். ஒருவன் செய்த குற்றத்திற்காக ஒரு இனத்தையே பழிவாங்குவது தர்மம் அல்ல! நிரபராதிகளையும் அநியாயமாகக் கொல்வது முறையல்ல! என்று வேண்டினார். மாமுனிவனே! என் பேச்சைக் கொஞ்சம் கேள். கல்மாஷபாதன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடிக் களைத்து, தண்ணீர் தாகத்தால் ஒற்றையடிப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது உன் தந்தை சக்திரிஷி எதிரில் வந்தார். அவனுக்கு அவர் வழிவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் ஒதுங்கிப் போ என்று ஆவேசமாகக் கோபித்தும் கொண்டார். நாட்டில் உள்ள பிரஜைகள் மன்னனை மதிப்பது தானே தர்மம். இதை மறந்து பேசிய உன் தந்தைமீது வெகுண்டான் கல்மாஷபாதன். குதிரை சாட்டையால் அவரை அடித்துவிட்டான். வலியால் துடித்த உன் தந்தை, கல்மாஷபாதனை ராட்சஷனாகப் போகும்படி சபித்துவிட்டார். ராட்சஷனான அவன் உன்தந்தையையும், அவரது நூறு சகோதரர்களையும் கொன்று தின்றான். இது தான் உண்மையாகவே நடந்தது. குற்றம் முழுவதையும் ராட்சஷர்களின் மீது சுமத்துவது சரியல்ல,என்றார். வயதில் பழுத்த அவரது நியாயமான பேச்சு பராசரரின் மனதை மாற்றியது. யாகத்தை நிறுத்திவிட்டு அவரது பாதத்தில் விழுந்து வணங்கினார். பராசரா! பரதேவதை நிர்ணயம் என்ற விஷயஞானத்தைப் பெற்று உலக÷க்ஷமத்திற்கு வழிகாட்டுவாயாக! என்று ஆசியளித்தார். பராசரர் தந்த பொக்கிஷமே விஷ்ணுபுராணம். வேதத்தின் சாரத்தை நமக்களிக்கும் புராண நூலாக இது திகழ்கிறது.

































































 10 ரிஷிகள்
கவுதமர்
மார்ச் 26,2011
அ-
+
Temple images
ஆங்கிரஸ் மகரிஷியின் வம்சத்தில் தோன்றிய மகரிஷிகளில் கவுதமர் மிக முக்கியமானவர். இவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார். தீர்க்கதமஸ் என்னும் மகரிஷிக்கும், ப்ரத்வேஷீ என்னும் பெண்மணிக்கும் பிறந்தவர் இவர். தீர்க்கதமஸ் பிறவியிலேயே பார்வையற்றவர். பிருகஸ்பதியின் சாபத்தால் கருவிலேயே இவருடைய கண்கள் குருடாயின. மேதையான இவருக்கு சகலவேதங்களிலும் நல்ல ஞானம் இருந்தது. பார்வையற்றவராக இருந்ததால், தீர்க்கதமஸை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. நீண்டகாலமாக பிரம்மசரியாகவே இருந்தார். ப்ரத்வேஷீ தான் அவருடைய வேதஅறிவைக் கண்டு அவரைத் திருமணம் செய்ய சம்மதித்தாள். இவ்விருவருக்கும் பிறந்த முதல் குழந்தை தான் கவுதமர். தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றாள் ப்ரத்வேஷீ. எப்போதும் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து இருப்பதை எண்ணி ப்ரத்வேஷீக்கு வெறுப்பு உண்டானது. இதனால், கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எலியும் பூனையும் போல குடும்பத்தில் சண்டை சச்சரவிற்கு பஞ்சமே இல்லாமல் போனது.
 ப்ரத்வேஷீ, தன் கணவன் தீர்க்கதமஸை  திட்டத் துவங்கிவிட்டாள். கவுதமர் அம்மா பிள்ளையாக வளர்ந்திருந்தால் ப்ரத்வேஷீயின் பக்கம் துணைநின்றார். ஒருநாள் ப்ரத்வேஷீ கவுதமரிடம், இந்த கிழத்திற்கு சோற்றை தின்பதும், வருஷம் தவறாமல் என்னைப் பிள்ளைத்தாய்ச்சியாக்குவதும் தான் ஒரே வேலை. அவர் உயிரோடு இருந்தால் இனியும் எனக்கு சங்கடம்! பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு! இனி கங்கையாற்றில் அவரை தூக்கி போட்டு விடுவது ஒன்றுதான் சரியான தீர்வு! என்றாள் அடங்காத கோபத்துடன். மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக பார்க்கும் கணவன் மீது எந்தப் பெண்ணும் வெறுப்பு கொள்ளத்தான் செய்வாள். அதைத் தான் ப்ரத்வேஷீயும் செய்தாள். அதனால் தான் அவள் பெயரிலேயே துவேஷத்தையும் சேர்த்து வைத்து விட்டார்கள் போலும். வெறுப்பு அளவுகடந்துவிட்டதால், பிரம்மஹத்தி தோஷத்தையே (கொலை பாவம்) தரும் பாவத்தையும் செய்ய முனைந்துவிட்டாள். மரக்கட்டைகளால் ஆன தெப்பம் ஒன்றைச் செய்து அதில் தீர்க்கதமஸை ஏற்றச் செய்தாள். அம்மாவின் பேச்சைக் கேட்ட கவுதமரும் பலாத்காரமாக தந்தையை தெப்பத்தில் அமர்த்தி கங்கையாற்றில் விட்டுவிட்டார். ஆற்றில் இருக்கும் திமிங்கலம், முதலைகளுக்கு இரையாகிவிடுவர்.கவுதம மகரிஷியின் தர்மபத்தினி அகல்யா உலகப் பிரசித்தமானவள். ராமாயணம் படித்த அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாத்திரம். பாலகாண்டத்திலேயே விஸ்வாமித்திரரோடு ராமலட்சுமணர்கள் செல்லும்போது கவுதம மகரிஷியின் ஆஸ்ரமம் வழியாகத் தான் சென்றார்கள். ராமன் விஸ்வாமித்திர ரிஷியிடம் கவுதமரின் ஆஸ்ரமம் ஏன் இப்படி பாழடைந்து கிடக்கிறது என்று கேட்க நடந்த கதையை அவர் ராமனுக்கு எடுத்துச்சொன்னார்.
ராமா! கவுதமரும் அகல்யாவும் தம்பதிகளாக வாழ்ந்த ஆஸ்ரமம் இது! அகல்யா அழகுள்ள பெண். அவளது அழகில் மயங்கிய இந்திரன் ஆசைகொண்டு பூலோகம் வந்தான். கவுதமர் அனுஷ்டானம் செய்ய அதிகாலையில் கிளம்பிய வேளையில் ஆயத்தமானான் இந்திரன். கவுதமரைப் போலவே வேடம் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அகல்யாவும் விபரீதம் அறியாது கணவனைப் போல இருந்த இந்திரனுடன் மகிழ்ந்திருந் தாள். தன் மனைவி அகல்யாவும், இந்திரனும் செய்த செயலை நொடிப்பொழுதில் உணர்ந்தார் கவுதமர். வெகுண்டு இந்திரன் மீது கடும்சாபம் இட்டார். இந்திரனின் உடம்பு அருவருக்கத்தக்க நிலைக்கு ஆளாகும்படி சபித்தார். பின்னரும் சினம் அடங்கவில்லை. தன் மனைவி மீதும் மின்னலாய் பாய்ந்தது அவரின் கோபம். கணவனின் ஸ்பரிசத்துக்கும், பிறரது ஸ்பரிசத்துக்கும் வேறுபாடு காணமுடியாத அவளை, நீண்டகாலம் பசி தாகத்தால் மானிடதன்மை இழந்து பேயுருக்கொண்டு அலையும்படியும் சபித்தார். அத்தோடு விட்டாரா என்ன? இறுதியில் கல்லாய் சமைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் படியும் செய்தார். சாபவிமோசனமாக பரம்பொருளாகிய உனது பாதத்தூளிகள் (தூசு) பட்டு பெண்ணாக சுயவுருவம் பெறும்படி அருள்செய்தார், என்றார் விஸ்வாமித்திரர். தங்கள் தவ வலிமையினால் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் ஞானிகள். ராமாவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சரபங்கர், சபரீ போல, கவுதமரும் காத்திருந்தார். மிதிலாபுரியில் ஜனகமன்னனிடம் அரண்மனை புரோகிதராக இருந்த சதானந்தர், கவுதமருககும் அகல்யாவுக்கும் பிறந்த புத்திரர் ஆவார். ராமாயணம் மட்டுமில்லாமல் அகல்யை சாபம் மகாபாரதம், வேதம் ஆகிய எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளது. ஞானம் மிக்க கவுதமர், அகல்யை மீண்டு வந்தபின் பலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து பின்னர் தேவலோகம் சென்றார். சப்தரிஷிகளில் ஒருவரான இவரைப் பற்றிய குறிப்புகள் நான்கு வேதங்களிலும் காணப்படுகிறது.





























































































































































































































































































































































































































































































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக