வியாழன், 21 ஜூன், 2012

நாலாயிர திவ்விய பிரபந்தம் - முதலாயிரம் - முதலாம் பகுதி

ராதே கிருஷ்ணா 21-06-2012


நாலாயிர திவ்விய பிரபந்தம் - முதலாயிரம்- முதலாம் பகுதி



நாலாயிர திவ்விய பிரபந்தம் 
நாலாயிர திவ்விய பிரபந்தம்
















பிரபந்தம் அறிமுகம்
temple

நூல் சிறப்பு!டிசம்பர் 13,2011

நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார்,  2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. ... மேலும்

temple

1. பொய்கையாழ்வார் டிசம்பர் 13,2011

12 ஆழ்வார்கள் பற்றிய விபரம்:
பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி ... மேலும்

temple

2. பூதத்தாழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் ... மேலும்

temple

3. பேயாழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் ... மேலும்

temple
பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ ... மேலும்

temple

5. பெரியாழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ... மேலும்

temple

6. ஆண்டாள்டிசம்பர் 13,2011

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை ... மேலும்

temple
பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
நட்சத்திரம் : மார்கழி கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி ... மேலும்

temple
பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு ... மேலும்

temple

9. திருப்பாணாழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.
நட்சத்திரம் : கார்த்திகை ரோகிணி (வளர்பிறை துவிதியை ... மேலும்

temple

10. குலசேகர ஆழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி ... மேலும்

temple

11. நம்மாழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : வைகாசி ... மேலும்

temple

12. மதுரகவி ஆழ்வார்டிசம்பர் 13,2011

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி ... மேலும்














































































முதலாயிரம்
temple
பொது தனியன்கள்
வடகலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே ... மேலும்

temple
திருப்பாவைத் தனியன்கள்
பட்டர் அருளிச்செய்தது
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த ... மேலும்

temple
பெருமாள் திருமொழித் தனியன்கள்
உடையவர் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல ... மேலும்

temple
திருச்சந்த விருத்தத் தனியன்கள்
திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த ... மேலும்





























பெரியாழ்வார் அருளிச்செய்தது



பொது தனியன்கள்
வடகலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.
குருபரம்பரை தனியன்
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
எம்பெருமானார் தனியன்
யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.
நம்மாழ்வார் தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
ஆழ்வார்கள் உடையவர் தனியன்
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

தென்கலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்.
குருபரம்பரை தனியன்
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
எம்பெருமானார் தனியன்
யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.
நம்மாழ்வார் தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
ஆழ்வார்கள் உடையவர் தனியன்
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
முதலாயிரம்
பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது
குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷாந்
நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமரவந்த்யம் ரங்கநா தஸ்ய ஸாக்ஷõத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
இரு விகற்ப நேரிசை வெண்பா
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்று, ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று,
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளிச்செய்தது)
முதற்பத்து
முதல் திருமொழி
1. திருப்பல்லாண்டு
மக்கள் தன்னலத்தையே விரும்புகிறார்களே! பிறர் நலத்தையும் எண்ண வேண்டாவோ! 
தம்முடைய நன்மையை விரும்பியே பகவானிடம் செல்லுகிறார்கள்; வேண்டியவற்றைக் கேட்டுப் பெறுகிறார்கள்; பகவானுக்கு ஒரு முறைகூடப் பல்லாண்டு பாடுவதில்லை! உலகின் தன்மையை அறிந்து பெரியாழ்வாரின் திருவுள்ளம் குமுறுகிறது. பல்லாண்டு பாடலாம் வாருங்கோள் என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே (மங்களாசாஸனம் செய்வதே) அடியார்களின் கடமை! அவர் காட்டிய வழியைத்தான் பின்பற்றுவோமே!
காப்பு- பல்லாண்டு வாழ்க
குறள் வெண்செந்துறை
1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2. அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
இராமனைப் பாடு
3. வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே
நமோ நாராயணாய
4.ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே
இருடீகேசனைப் பாடு
5.அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே
நரசிம்மனைப் பாடு
6. எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே
ஆழிவல்லானைப் பாடு
7. தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
கருடக் கொடியானைப் பாடு
8. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
நாகணையானைப் பாடு
9. உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
மதுரைப்பிரானைப் பாடு
10. எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
பவித்திரனைப் பாடு
11. அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே
சார்ங்கபாணியைப் பாடு
12. பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே
(இந்த 12 பாசுரங்களையும் உருக்கமாகப் பாராயணம் செய்பவர்கள் பக்தி சிரத்தையுடன் பல்லாண்டு வாழ்வர்)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
அடிவரவு: பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு- வண்ணம்.
(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ உடுத்தெந்நாள் கூறுதும், நெய்யுமல்லும் கூறுவனே)
இரண்டாம் திருமொழி
2. வண்ண மாடங்கள்
பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், கண்ணன் பிறந்த நாள் 
எப்படிக் கொண்டாடப்படுகிறது! பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!
கண்ணன் திருவவதாரச் சிறப்பு
கலி விருத்தம்
திருக்கோட்டியூர்க் கேசவனே கண்ணன்
13.வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.
ஆயர்களின் மெய்ப்பாடு
14. ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
திருவோணத்தான் உலகாளும்
15. பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தானுல காளுமென் பார்களே.
ஆயர்களின் மெய்ம்மறந்த செயல்
16. உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.
அரும்பன்ன பல்லினர்
17. கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.
பிள்ளை வாயுள் வையம் கண்ட அசோதை
18. கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.
அருந்தெய்வம்
19. வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.
உத்தான விழா
20. பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.
குழந்தையின் செயல்
21. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.
பாவம் பறந்துவிடும்
22. செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே
அடிவரவு: வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை வாயுள் பத்து கிடக்கில் செந்நெல்.
மூன்றாந் திருமொழி
3. சீதக்கடல்
கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியிலுள்ள பெண்களை அழைத்துக் கண்ணனின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். 
தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். 
திருவடிமுதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!
திருப்பாதாதிகேச வண்ணம்
(கண்ணனின் திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்)
கலித்தாழிசை
பாதக் கமலங்கள்
23. சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.
ஒளி விரல்கள்
24. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.
வெள்ளித் தளை இலங்கும் கணைக்கால்
25. பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
தவழும் முழந்தாள்
26. உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின்
பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலை யீர்வந்து காணீரே.
இரணியனை அழித்த தொடைகள்
27. பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்கு களைவந்து காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
28. மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே.
பரமனின் திருமருங்கு
29. இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன்
நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுத லீர்வந்து காணீரே.
நந்தன் மதலையின் உந்தி
30. வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.
தம்பினால் கட்டப்பட்ட திருவயிறு
31. அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.
கவுஸ்துபம் திகழும் திருமார்பு
32. பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
அசுரரை அழித்த திருத்தோள்கள்
33.நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே.
சங்கு சக்கரம் நிலவும் கைத்தலங்கள்
34. மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.
உலகங்களை விழுங்கிய கழுத்து
35. வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
ஆய்ச்சியர் விரும்பும் அழகிய வாய்
36. எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
முகத்தின் அழகு
37. நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.
வாசுதேவனின் கண்கள்
38. விண்கொ ளமரர்கள் வேதனை தீரமுன்
மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து
திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்வந்து காணீரே.
தேவகி மகனின் திருப்புருவம்
39. பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளிமணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே  பூண்முலை யீர்வந்து காணீரே.
மகரக்குழை பதிந்த திருச்செவிகள்
40. மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
பரமன் திருநுதல்
41. முற்றிலும் தூதையும் முன்கைம்மேல்  பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே  நேரிழை யீர்வந்து காணீரே.
கண்ணன் திருக்குழல்கள்
42. அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
தரவு கொச்சகக் கலிப்பா
திருப்பாதாதிகேசம் (அடியும் முடியும்)
43. சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே.
அடிவரவு: சீத முத்தும் பணை உழ பிறங்கிய மத்த இருங்கை வந்த அதிருங் பெருமா நாள்கள் மை வண்டு எந் நோக்கி விண்பருவம் மண் முற்றில் அழகிய சுருப்பார்- மாணிக்கம்
நான்காந் திருமொழி
4. மாணிக்கங்கட்டி
மக்கட் பேறு பெற்று மகிழும் இக்காலப் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி! தாலாட்டுப் பாடலிலும் பகவத் விஷயம் கலந்திருக்க வேண்டாமா! இப்பாடல்களையே தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாமே! இப் பாடல்களைக் கேட்டுப் பழகும் குழந்தைகள் பகவானின் திருவருளைப் பெறுவது திண்ணம். அவர்களுக்கு வாழ்வில் 
துன்பமே ஏற்படாது என்கிறாள் தெய்வ நங்கை யசோதை!
திருத்தாலாட்டு
(கண்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல்)
கலித்தாழிசை
பிரமன் விடுதந்த தொட்டில்
44. மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
அரனளித்த அரைவடம்
45. உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!
இந்திரனீத்த கிண்கிணி
46. என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!
அமரர் தந்த அரைஞான்
47. சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
குபேரன் தந்த முத்துவடம்
48. எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!
வருணன் அளித்த சாதிப்பவளம்
49. ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும்சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர்முடியாய்  தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!
திருமங்கை அனுப்பிய திருத்துழாய் மாலை
50. கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!
பூதேவி கொடுத்தனுப்பிய உச்சிமணிச் சுட்டி
51. கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராய ணாஅழேல் தாலேலோ!!
துர்கை தந்த பொருள்கள்
52. மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்குஅஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!
இடரில்லை
53. வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு  இல்லை இடர்தானே.
(இந்த 10 பரசுரங்களைப் பாராயணம் செய்தால் எந்தக் கஷ்டமும் வராது. மேற்கொண்டு 
இம்மாதிரி பல பாசுரங்கள் காணலாம். பக்தி, சிரத்தை மஹாவிச்வாசம் மிக மிக அவசியம்.)
அடிவரவு: மாணிக்கம் உடை எந்தம் சங்கு எழில் ஓதக்கானார் கச்சொடு மெய் வஞ்சனையால்- தன்
ஐந்தாந் திருமொழி
5. தன்முகத்து
கண்ணன் வளர்ந்து தவழ்கிறான். திறந்த வெளியில் வருகிறான். வெண்ணிலவு! சந்திரனைப் பார்க்கிறான்; தன்னோடு விளையாட வருவான் என்று நினைக்கிறான். ஆனால் சந்திரன் வான வீதியில் வேகமாகச் செல்லுகிறான். இவனே பகவான். இவனை அலட்சியம் செய்தால் நீ தப்பமுடியாது என்று 
யசோதை சந்திரனுக்குக் கூறி, நமக்கும் உணர்த்துகிறாள்.
அம்புலிப் பருவம்
(சந்திரனை அழைத்தல்)
கலிநிலைத்துறை
கோவிந்தன் கூத்து
54. தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.
அஞ்சன வண்ணனோடு ஆடு

55. என்சிறுக் குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.
வித்தகன் வேங்கடவாணன்

56. சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.
சக்கரக்கையன்
57. சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.
சிரீதரன் மழலைச் சொல்
58. அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!
கண்ணனின் துயில்
59.தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன்
60. பாலக னென்றுபரிபவம் செய்யேல் பண்டொருநாள்
ஆலி னிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந் தோடிவா.
கண்ணன் நெடுமால்
61.சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்
நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
வெண்ணெய் விழுங்கும் கண்ணன்
62.தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.
இடரில்லை
63.மைத்தடங் கண்ணி யசோதை தன்மக னுக்குஇவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனை யும்சொல்ல வல்ல வர்க்குஇட ரில்லையே
அடிவரவு: தன் என் சுற்று சக்கரம் அழகிய தண்டொடு பாலகன் சிறியன் தாழியில் மை-உய்ய
ஆறாந் திருமொழி
6. உய்யவுலகு
கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந் தாள்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை நிமிர்த்தி அசைத்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை! அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலை யசைத்து விளையாடிக் காட்டு என்று வேண்டுகிறாள் அவள்.
செங்கீரைப் பருவம்
(தலையை நிமிர்த்தி முகத்தையசைத்து ஆடுதல்)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பரம்பரனே ஆயர்கள் போரேறு
64. உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல்
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச் செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக
ஐயஎ னக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
கோளரியே ஆயர் போரேறு
65. கோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
திரிவிக்கிரமனே ஆயர் போரேறு
66. நம்முடை நாயகனே நான்மறை யின்பொருளே நாபியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்
தம்மனை யானவனே தரணி தலமுழுதும் தாரகை யின்னுலகும் தடவி அதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
நரகனை அழித்தவனே ஆயர் போரேறு
67. வானவர் தாம்மகிழ வன்சக டமுருள வஞ்சமு லைப்பேயின் நஞ்சமது உண்டவனே
கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே
தேனுக னும்முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம்மடியச் செருவத ரச்செல்லும்
ஆனை எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
மருதம் முறித்தவனே ஆயர் போரேறு
68.மத்தள வும்தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தினி ளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
காளியனுச்சியில் நடம்பயின்றவனே ஆயர் போரேறு
69. காய மலர்நிறவா கருமுகில் போலுருவா கானக மாமடுவில் காளிய னுச்சியிலே
தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆய மறிந்துபொரு வான்எதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்
ஆய எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
நப்பின்னை நாதனே ஆயர் போரேறு
70. துப்புடை யயார்கள்தம் சொல்வழு வாதுஒருகால் தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன்
அப்ப எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
ஏழுலகுடையவனே ஆயர் போரேறு
71. உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும்
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.
மறை ஏழும் பொருளே ஆயர் போரேறு
72. பாலொடு நெய்தயிர்ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக
நீல நிறத்தழகா ரைம்படை யின்நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ
ஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.
இடைக் குலத்தரசே ஆயர் போரேறு
73. செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்
மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.
புகழும் இன்பமும் அடைவர்
74. அன்னமும் மீனுருவும் ஆளரி யும்குறளும் ஆமையு மானவனே ஆயர்கள் நாயகனே
என்அவ லம்களைவாய் ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக வாடுகவென்று
அன்ன நடைமடவாள் அசோதை யுகந்தபரிசு ஆன புகழ்ப்புதுவைப் பட்ட னுரைத்ததமிழ்
இன்னிசை மாலைகள்இப் பத்தும்வல் லார்உலகில் எண்திசை யும்புகழ்மிக்கு இன்பம்அது எய்துவரே.
(இந்த 11 பரசுரங்களை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்பவர்க்கு மாபெரும் புகழ் உண்டாகும்)
அடிவரவு: உய்ய கோளரியின் நம்முடை வானவர் மத்தள காய துப்பு உன்னை பாலொடு செங்கமலம் அன்னம்-மாணிக்கம்
ஏழாந் திருமொழி
7. மாணிக்கக்கிண்கிணி
கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்தப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! கைதட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு மேலும் மகிழ்கிறான். இதைக் கண்டு பேரானந்தம் அடைகிறாள் யசோதை. கண்ணா! மீண்டும் ஒரு முறை சப்பாணி கொட்டு; உலகம் மகிழட்டும் என்று வேண்டுகிறாள்.
சப்பாணிப் பருவம்
(கைகொட்டி விளையாடுதல்)
கலித்தாழிசை
பண்டு காணி கொண்ட கைகள்
75. மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.
மாயவன் கண்ணன்
76. பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல்நின் றிழிந்துஉங்க ளாயர்தம்
மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.
ஆழியங்கையன்
77. பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன
என்மணி வண்ணன் இலங்குபொற் றோட்டின்மேல்
நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்
அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.
திருக்குடந்தை ஆராவமுது
78. தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலாஅம்புலீசந்திரா வாவென்று
நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்
கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.
பத்மநாபன்
79. புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.
தேவகி சிங்கம்
80. தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்குஅன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.
திருக்குடந்தை சார்ங்கபாணி
81. பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி.
திருக்குடந்தை சக்ரபாணி
82. குரக்கினத் தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை
அரக்கர் அவிய அடுகணை யாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.
சிங்கமதாகிய தேவன்
83. அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.
கடல் கடைந்த கார்முகில்
84. அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக்க்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி.
தீவினை போகும்
85. ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்
வேட்கையி னால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.
அடிவரவு: மாணிக்கம் பொன் பன் தூநிலா புட்டியில் தாரித்து பரந்து குரக்கினம் அளந்து அடைந்து ஆட்கொள்ள- தொடர்
எட்டாந் திருமொழி
8. தொடர்சங்கிலிகை
நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! கண்ணா நீ யல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி: என்று எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடையழகை எனக்குக் காட்டமாட்டாயா? உன் மெல்லடித் தாமரைகளைத் தரைமீது மெல்ல வைத்து யானைக்குட்டி போல் நடந்து வா! என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணைப் போன்று புகழ்மிக்க மகனைப் பெறுவார்கள்.
தளர் நடைப் பருவம்
(தளர் நடை நடத்தல்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வாரணம் கண்ணன்
86. தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்
உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க
தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.
அனந்த சயனன்
87. செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
இருடீகேசன்
88. மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
மின்னில் பொலிந்த தோர்கார் முகில்போலக் கழுத்திணில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ.
என் திரு மார்வன்
89. கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து
முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.
கருமலைக் குட்டன்
90. முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்
பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப் பலதே வனென்னும்
தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.
காமன் தந்தை
91. ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து
பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.
தடந்தாளிணையான்
92. படர்பங் கயமலர் வாய் நெகிழப் பனிபடு சிறுதுளிபோல்
இடங்கொண் டசெவ் வாயூறி யூறி இற்றிற்று வீழநின்று
கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென
தடந்தா ளினைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.
மணிவண்ணன் வாசுதேவன்
93. பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய
அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர
மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
திருவிக்கிரமன் வேழக்கன்று
94. வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல்
தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர் படவியர்த்து
ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து ஒன்றும் நோவாமே
தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.
செங்கண்மால் கேசவன்
95. திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல் செங்கண்மால் கேசவன்தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர
பெருநீர்த் திரையெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.
பக்தி மிக்க மக்களைப் பெறுவர்
96. ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.
(இந்த 11 பாசுரங்களையும் பாராயணம் செய்து ஆத்திகத்தில் அக்கறை கொண்ட குழந்தைகளைப் பெறுங்கள்)
அடிவரவு: தொடர் செக்கர் மின்னுக் கன்னல் முன்னல் ஒரு காலில் படர் பக்கம் வெண் திரை ஆயர்- பொன்.
ஒன்பதாந் திருமொழி
9. பொன்னியற்கிண்கிணி
பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெரியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார்முன் நிற்கும் நாராயணன் அவன். யசோதைக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!
அச்சோப் பருவம்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்)
கலித்தாழிசை
மின்னியல் மேகம்
97. பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ
பஞ்சாயுதன்
98.செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய
அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.
பஞ்சவர் தூதன்
99. பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.
கூனியின் கூனினை நிமிர்த்தவன்
100. நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திருவுடம் பில்பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்கஅன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.
துரியோதனனை அழல விழித்தவன்
101. கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்துஉன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ.
ஸ்ரீ பார்த்தஸாரதி
102. போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும்பேருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்
103. மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக்கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ.
நமுசியை வானில் சுழற்றியவன்
104. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.
திருமறுமார்வன்
105. கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஒவென்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.
ஹம்ஸாவதாரம்
106. துன்னிய பேரிருள் சூழ்ந்துஉல கைமூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்கஅன்று
அன்னம தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ.
நாரணனைப் பாடுவார்
107. நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன
மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல்
நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.
அடிவரவு: பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய கழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவார்-வட்டு
பத்தாந் திருமொழி
10. வட்டு நடுவே
குழந்தை ஓடி வந்து தாயின் முதுகைக் கட்டிக்கொண்டு மகிழும்; தாயும் மகிழ்வாள். கண்ணனும் தாய்க்குத் தெரியாமல் பின்புறத்தே மெல்ல நடந்து வந்து முதுகைக் கட்டிக் கொள்வான். அந்நிலையை விரும்பி யசோதை மகிழ்ந்தது போல் ஆழ்வார்தாமும் விரும்புகிறார்.
புறம் புல்கல்
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
கோவிந்தன் புறம் புல்குதல்
108. வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
எம்பிரான் கண்ணன்
109. கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
கொத்துத் தலைவனை அழித்த அச்சுதன்
110. கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.
விசயன் தேர் ஊர்ந்தவன்
111. நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்
வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
மண்பல கொண்ட வாமனன்
112. வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.
பத்திராகாரன் கண்ணன்
113. சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.
வயிறார வெண்ணெய் விழுங்கியவன்
114. பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயி றார விழுங்கிய
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.
மறையோர் வணங்கும் எம்பிரான்
115. மூத்தவை காண முதுமணற் குன்றேறி
கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
கற்பக மரத்தைப் பூமிக்குக் கொணர்ந்தவன்
116. கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
தரவு கொச்சகக் கலிப்பா
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
117. ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.
அடிவரவு: வட்டு கிங்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி-மெச்சூது.
இரண்டாம் பத்து
முதல் திருமொழி
1. மெச்சூது
சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று அவ்வாறு கண்ணனும் 
பூச்சி காட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதுபோல் அனுபவித்து இன்பமடைகிறார்.
பூச்சி காட்டி விளையாடுதல்
கலித்தாழிசை
சங்கமிடத்தான்
118. மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
பார்த்தன் தேர்மேல் நின்ற கண்ணன்
119. மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
குழலூதும் வித்தகன்
120. காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில்சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயிங் குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
கஞ்சனை மாளப் புரட்டியவன்
121. இருட்டில் பிறந்துபோய் ஏழைவல் லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப்
புரட்டிஅந் நாள்எங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
கடைதாம்புக்கு ஆப்புண்டவன்
122. சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
தேவகியின் தோன்றல்
123. செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித் தொறுப்பாடி யோம்வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
கோபால கோளரி
124. தத்துக் கொண்டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பரதனுக்கு நாடு கொடுத்தவன்
125. கொங்கைவன் கூனிசொற் கொண்டுகு வலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
களிறு துயர் தீர்த்தவன்
126. பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக்கைகூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன
உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த
அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
இலங்கை மலக்கிய வில்லாளன்
127. வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனைவிட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே.
அடிவரவு: மெச்சு மலை காயும் இருட்டில் சேப்பூண்ட செப்பு தத்து கொங்கை பதகம் வல்லாள்-அரவணையாய்.
இரண்டாம் திருமொழி
2. அரவணையாய்!
குழந்தை கண்ணபிரானுக்கு எப்போதுமே விளையாட்டு. பசியும் தெரியவில்லை! பொழுது போவதும் தெரியவில்லை! விளையாடினான். உறங்கிவிட்டான். தாயிடம் பால் குடிப்பதையும் மறந்தான். அறியாமையினால் உறங்குவோரை எழுப்பும் பகவானுக்கும் உறக்கம்! குழந்தை பட்டினியாக 
உறங்கினால் தாய் எப்படித் தரித்திருப்பாள்? யசோதை கண்ணனைப் பால் குடிக்க எழுப்புகிறாள். ஆழ்வார் யசோதையாகவே இருந்து கண்ணனை அழைக்கிறார்.
கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலிவிருத்தம்
அரவணையான் ஆயரேறு
128. அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ
வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே.
முத்தனைய புன்முறுவல்
129. வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.
வாழவைக்கும் வாசுதேவன்
130. தந்தம்மக்கள் அழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார்
வந்துநன்மேல் பூசல்செய்ய வாழவல்ல வாசுதேவா
உந்தையார்உந் திறத்தரல்லர் உன்னைநானொன் றுரப்பமாட்டேன்
நந்தகோப னணிசிறுவா நான்சுரந்த முலையுணாயே.
அமரர்கோமான் கண்ணன்
131. கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று
அஞ்சினேன்காண் அமரர்கோவே ஆயர்கூட்டத் தளவன்றாலோ
கஞ்சனைஉன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே.
ஆயர்பாடி அணிவிளக்கு
132. தீயபுந்திக் கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து
மாயந்தன்னால் வலைப்படுக் கில்வாழகில்லேன் வாசுதேவா
தாயர்வாய்ச்சொல் தருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா
ஆயர்பாடிக் கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன் முலையுணாயே.
யான்நோற்ற நோன்பின் பயன்
133. மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு
இன்னிசைக் கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார்
என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்
என்னும்வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலையுணாயே.
நின் பவளவாயின் இன்னமுதம்
134. பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி
வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே.
மல்லர் இருவரை அழித்தவன்
135. இருமலைபோ லெதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்உன்
திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்துஎன் னல்குலேறி
ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு
இருமுலையும் முறைமுறையா ஏங்கிஏங்கி இருந்துணாயே.
அமரர்க்கு அமுதளித்தவன்
136. அங்கமலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்
செங்கமல முகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக அளையவேண்டா அம்மவிம்ம
அங்கமரர்க் கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே.
கூத்தாடும் உத்தமன்
137. ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்குமோசைப் பாணியாலே
பாடிப்பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன்
ஆடியாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய்விடாதே உத்தமாநீ முலையுணாயே.
செங்கண்மால் சிந்தை பெறுவர்
138. வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவாஉண் ணென்றமாற்றம்
நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர்
பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார்
சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவார்தாமே.
அடிவரவு: அரவணையாய் வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணிந்த-போய்ப்பாடு.
மூன்றாந் திருமொழி
3. போய்ப்பாடு
கண்ணா! இன்று உனக்குக் காதணி விழா! காது குத்திக் கொள்ளவேண்டும் ! அழகான காதணிகளை அணியவேண்டும், ஓடிவா! என்று அழைக்கிறாள் அசோதை. காது நோகும் என்று கண்ணன் பயப்படுகிறான். வர மாட்டேன் என்று ஓடுகிறான். அசோதை சில ஆசை வார்த்தைகளைக் கூறி அவனை வசப்படுத்துகிறாள். எல்லோரும் வந்துவிட்டார்கள். வெற்றிலை பாக்குப் பழமெல்லாம் வைத்திருக்கிறேன் பார் 
என்று அழைக்கிறாள். ஆழ்வாரும் அப்படியே அனுபவித்து மகிழ்கிறார்.
பன்னிரு நாமங்கள்: காது குத்தல்
எழுச்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கேசவ நம்பி கண்ணன்
139. போய்ப்பா டுடையநின் தந்தையும்தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல்வண்ணா உன்னைத் தனியேபோய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவநம்பீ உன்னைக் காதுகுத்த
ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.
சிந்தை பிரியாத நாராயணன்
140. வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராய ணாஇங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்குநன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.
ஆய்ச்சியர் உள்ளத்து உறையும் மாதவன்
141. வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன்நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்யஇவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடராயர்கொ ழுந்தே
மையன்மை செய்துஇள வாய்ச்சிய ருள்ளத்து மாதவ னேஇங்கே வாராய்.
சோத்தம்பிரான் கோவிந்தன்
142. வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி
குணநன் றுடையர்இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீசொல்லுக் கொள்ளாய்
இணைநின் றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
கருங்குழல்விட்டு(விஷ்ணு)
143. சோத்தம் பிரான்என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழ லாரொடு நீபோய்
கோத்துக் குரவை பிணைந்துஇங்கு வந்தால் குணங்கொண் டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம்த ருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீஇங்கே வாராய்.
கடல்வண்ணன் மதுசூதன்
144. விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில் விரும்பி யதனைநான் நோக்கி
மண்ணெல் லாம்கண்டுஎன் மனத்துள்ளே யஞ்சி மதுசூத னேயென்ற றிந்தேன்
புண்ணேது மில்லைஉன் காது மறியும் பொறுத்துஇறைப் போதுஇரு நம்பீ
கண்ணாஎன் கார்முகி லேகடல் வண்ணா காவல னேமுலை யுணாயே.
ஆயர்பாடிப்பிரான் திரிவிக்கிரமன்
145. முலையேதும் வேண்டேனென் றோடிநின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலையொன்று இறுத்தாய் திரிவிக் கிரமா திருவாயர் பாடிப் பிரானே
தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே.
கருடக்கொடியோன் வாமனன்
146. என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டாகாண் என்னைநான் மண்ணுண்டே னாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும்
துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.
முறுவலிடும் சிரீதரன்
147. மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரையுர லோடுஎன்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்துஅங்கு இருக்கில் சிரிதரா உன்காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற காரிகை யார்சிரி யாமே.
கன்றெறிந்த இருடீகேசன்
148. காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.
சகடமுதைத்த பத்மநாபன்
149. கண்ணைக் குளிரக் கலந்துஎங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழ லார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்துதித் திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநா பாஇங்கே வாராய்.
வஞ்சமகள் சாவப் பாலுண்ட தாமோதரன்
150. வாவென்று சொல்லிஎன் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம்கொண்டு வைத்தேன் இவைகாணாய் நம்பீமுன் வஞ்ச மகளைச்
சாவப்பா லுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோத ராஇங்கே வாராய்.
துவாதச நாமங்களின் பயன்
151. வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே.
(நமது இல்லங்களில் குழந்தைகளுக்குக் காது குத்தும் விழா நடக்கும்போது, பன்னிரு நாமங்களை இட்டழைக்கும் இப்பாடல்களைப் பாடுவதும், குழந்தை காது கொண்டு கேட்பதும் மிகச் சிறந்ததாகும்)
அடிவரவு: போய்ப்பாடு வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என்குற்றம் மெய் காரிகையார்க்கும் கண்ணை வாவார்காது- வெண்ணெயளைந்த.
நான்காந் திருமொழி
4. வெண்ணெயளைந்த
அழகன் கண்ணனை நீராட்ட எண்ணினாள் அசோதை. திருமஞ்சனத்திற்காக( நீராட்ட) தண்ணீர் கொண்டு சேர்த்தாள். இலவங்கம் ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களை அதில் சேர்த்தாள். ஆனால் கண்ணன் வரவில்லை. ஓடுகிறான். புல்லைக் காட்டிப் பசுவை இழுப்பதுபோல் தாய் நல்ல வார்த்தைகளைக் கூறுகிறாள். பின்னால் ஓடுகிறாள். அவனும் ஓடுகிறான். நாரணா ஓடாதே வாராய் என்று அன்போடு அழைக்கிறாள்.
நீராட்டம்
(கண்ணனை நீராட அழைத்தல்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஸ்நானாஸனம்
152. வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
திருவோண நன்னாள்

153. கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்
இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
திருமஞ்சனநீர்

154. பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.
அலங்காராஸனம்

155. கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
போஜ்யாஸனம்
 156. அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
பழங்கள் ஸமர்ப்பித்தல்

157. எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
குறை கூறமாட்டேன்

158. கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்
பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே
சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.
பிறந்த திருநன்னாள்

159. கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
நப்பின்னை சிரிப்பாளே
160. பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.
கார்மேனிக் கண்ணபிரான்

161. கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல்
சீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.
அடிவரவு: வெண்ணெய் கன்றுகள் பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார்மலி- பின்னை
ஐந்தாந் திருமொழி
5. பின்னை மணாளனை
குழந்தையை வளர்ப்பது பெரும் போர்தான். கட்டுப்படாத கண்ணனை நயமான வார்த்தைகளைக் கூறி எப்படியோ நீராட்டி விட்டாள் தாய். கூந்தலை வாரி அழகு செய்விக்க எண்ணினாள். கண்ணன் தாயின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஓட நினைக்கிறான். காக்காய் வா! கண்ணனுக்குக் குழல் வார வா! என்று காக்கையை அழைத்துக் கண்ணனின் கவனத்தைத் திருப்புகிறாள். இவ்வாறு சீராட்டிக் குழல் வாரியதை ஆழ்வாரும் அனுபவிக்கிறார்.
கண்ணனின் குழலை வாரக் காக்கையை வாவெனல்
கலித்தாழிசை
பின்னை மணாளன் மாதவன்

162. பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல்தனி வித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட
மன்னனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் மாதவன் தன்குழல் வாராய்அக் காக்காய்
காயாமலர் வண்ணன் கண்ணன்
163. பேயின் முலையுண்ட பிள்ளை இவன்முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாக வந்துகுழல் வாராய்அக் காக்காய் தூமணி வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
அமரர் பெருமான் கண்ணன்

164. திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் கார்முகில் வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
பறவை உருக்கொண்ட அசுரன் வதம்
165. பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்துகுழல் வாராய்அக் காக்காய் பேய்முலை யுண்டான்குழல் வாராய்அக் காக்காய்.
கன்றெறிந்த ஆழியான்

166. கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை
பற்றி யெறிந்த பரமன் திருமுட
உற்றனபேசிநீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்துகுழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன்குழல் வாராய்அக் காக்காய்.
ப்ராக்ஜ்யோதிஷபுர மன்னரை அழித்தவன்
167. கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நனைந்திட்டுஅவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்குஅணி யாகக்குழல் வாராய்அக் காக்காய் கோவிந்தன் தன்குழல் வாராய்அக் காக்காய்.
அழகர் பெருமான் மாயவன்

168. பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டிநீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத் திருண்டகுழல் வாராய்அக் காக்காய் மாயவன்தன் குழல் வாராய்அக் காக்காய்.
சதுர்முகனைப் படைத்த தாமோதரன்

169. உந்தி யெழுந்த உருவம லர்தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய்அக் காக்காய் தாமோ தரன்தன்குழல் வாராய்அக் காக்காய்.
உலகளந்தான் ஆயிரம் பேருடையான்

170. மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணை மேல்வைத்து
பின்னேயிருந் துகுழல் வாராய்அக் காக்காய் பேரா யிரத்தான்குழல் வாராய்அக் காக்காய்.
தரவு கொச்சகக் கலிப்பா
வினைகள் குறுகா
171. கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சி சொல்
விண்தோய் மதிள்வில்லி புத்தூர்க்கோன் பட்டன்சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினைதாமே
அடிவரவு: பின்னை பேயின் திண்ணம் பள்ளத்தில் கற்றினம் கிழக்கில் பிண்டம் உந்தி மன்னன் கண்டார்- வேலி
ஆறாம் திருமொழி
6. வேலிக்கோல்
கண்ணன் தலையை வாரிக்கொண்டான். மலர் சூட்ட நல்ல மலர் கொண்டுவர உள்ளே சென்றாள் தாய். மாடு கன்றகளை மேய்க்க ஆயர் சிறுவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டான் கண்ணன். தானும் செல்லத் துடித்தான்! கன்று மேய்க்கும் கொம்பு எங்கே என்று தேடினான். தாயைக் கேட்கிறான். அழுகிறான். அடடா! அதுவா! இப்போதுதான் காக்கை எடுத்துச் சென்றுவிட்டது! காக்காய்! கண்ணனுக்குக் கோல் கொண்டு வா. என்றழைத்துக் கண்ணனைத் தங்க வைக்கிறாள் தாய்! இது ஒரு அநுபவம்!
காக்கையைக் கண்ணனுக்கு கோல் கொண்டுவர விளம்புதல்
கலித்தாழிசை
காலிப்பின் போகிறவன்
172.வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற்பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவாற்குஓர் கோல்கொண்டுவா கடல்நற வண்ணற்குஓர் கோல்கொண்டுவா.
திவ்ய தேசங்களில் விளையாடும் மகன்
173. கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநில்
அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா
கம்சனைக் கொன்ற தேவபிரான்

174. கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்கமுன் னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா
பாரதம் கைசெய்தவள்

175. ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோ தனன்பக்கல்
சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா.
ஸ்ரீ பார்த்தசாரதி

176. சீரொன்று தூதாய்த் துரியோ தனன்பக்கல்
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பாரொன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்குஓர் கோல்கொண்டுவா தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா.
குடந்தைக் கிடந்தான்
177. ஆலத் திலையான் அரவி னணைமேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா
கற்றைக் குழலழகன்

178. பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்டஅக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்துஉன்னை
மற்றைக்கண் கொள்ளாமே கோல்கொண்டுவா மணிவண்ண நம்பிக்குஓர் கோல்கொண்டுவா.
அணைகட்டிக் கடலையடைத்த இராமன்
179. மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ
தன்னிகரொன் றில்லாச்சிலைகால் வளைத்திட்ட
மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா வேலை யடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா.
விபீடணனுக்கு அரசளித்த வேங்கடவாணன்
180. தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து
மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற
மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா.
மக்களைப் பெற்று மகிழ்வர்
181. அக்காக்காய் நிம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று
மிக்கா ளுரைத்தசொல் வில்லிபுத் தூர்ப்பட்டன்
ஒக்க வுரைத்த தமிழ்பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர்இவ் வையத்தே.
கண்ணனைப் பூச்சூட அழைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆனிரை மேய்க்கும் பிரானுக்குச் சண்பகப் பூ
182. ஆனிரை மேய்க்கநீ போதி அருமருந் தாவ தறியாய்
கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப
தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.
அழகிய மணவாளனுக்கு மல்லிகைப் பூ
183. கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்
மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.
திருவேங்கடத்தானுக்குப் பாதிரிப் பூ
184. மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.
அழகிய நம்பிக்கு மருவும் தமனகமும்
185. தெருவின்கண் நின்றுஇள வாய்ச்சி மார்களைத் தீமைசெய்யாதே
மருவும் தமனக மும்சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே
உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்டநீ வாராய்.
கரியின் கொம்பை ஒடித்தவனுக்குச் செங்கழுநீர்
186. புள்ளினை வாய்பிளந் திட்டாய் பொருகரி யின்கொம் பொசித்தாய்
கள்ள வரக்கியை மூக்கொடு காவல னைத்தலை கொண்டாய்
அள்ளிநீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரிலெ ழுந்த செங்கழு நீர்சூட்ட வாராய்.
மல்லர்களை அழித்தவனுக்குப் புன்னைப் பூ
187. எருதுக ளோடு பொருதி ஏதும் உலோபாய்கான் நம்பி
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்க ளோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச்சூட்ட வாராய்.
திருக்குடந்தை ஆராவமுதுக்குக் குருக்கத்திப் பூ
188. குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே
மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய்
குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
அணியரங்கனுக்கு இருவாட்சிப் பூ
189. சீமா லிகனவ னோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய்
ஆமா றறியும் பிரானே அணியரங் கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்.
வடபத்ரசாயிக்குக் கருமுகைப் பூ
190. அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா
உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய்
கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.
அசோதையின் மகிழுரை
191. செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்தஇம் மாலை
பண்பகர் வில்லிபுத் தூர்க்கோன் பட்டர் பிரான்சொன்ன பத்தே.
(குழந்தைகளுக்குத் தலையில் பூச்சூட்டும்போதும், பெண்கள் மலரை அணிந்துகொள்ளும்போதும், பூச்சூட்டல் முகூர்த்த காலத்திலும் இத்திருமொழியை ஸேவித்தால் பகவானின் திருவருளைப் பெறலாம்)
அடிவரவு: ஆனிரை கரு மச்சொடு தெருவின்கண் புள்ளினை எருதுகளோடு குடங்கள் சீமாலிகன் அண்டத்து செண்பகம்-இந்திரன்
எட்டாந் திருமொழி
8. இந்திரனோடு
எல்லோருடைய பார்வையும் நன்மை தரவல்லது என்று எண்ணுவதற்கில்லை. சிலர் பார்வை தீமையும் தரும். திருஷ்டி தோஷத்தைக் கண்ணெச்சில் என்று கூறுவார்கள். அந்தி(மாலை) வேளையில் இளங்குழந்தையைத் தெருவிலும் சந்து பொந்துகளிலும் இருக்க விடலாகாது. கண்ணா! அந்திப்போது! நாற்சந்திகளில் நில்லாதே வா! என்று அழைத்துக் காப்பு இடுகிறாள் யசோதை. காப்பு: ரøக்ஷ. ஸ்ரீதேவிக்கு உகந்த இடம் திருவெள்ளறை. அங்கிருக்கும் பெருமானையே ஆழ்வார் இத்திரு மொழியில் கண்ணனாக அனுபவிக்கிறார்.
காப்பிடல்
(திருஷ்டி தோஷம் வராதபடி திருவந்திக்காப்பிடக் கண்ணனை அழைத்தல்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவெள்ளறை அழகன்
192.இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய்.
திருவெள்ளறை நின்றவனுக்கு அந்திக் காப்பு

193. கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம்
நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய்
மன்றில்நல் லேல்அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்
நின்றுகண் டாய்என்தன் சொல்லு நான்உன்னைக் காப்பிட வாராய்.
திருவெள்ளறை எம்பிரான்
194. செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.
திருவெள்ளறையான் கண்ணன்

195. கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோ டேதீமை செய்வாய்
வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்.
திருவெள்ளறை ஞானச்சுடர்

196. பல்லா யிரவர்இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீஇங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்.
மஞ்சுதவழ் மணிமாட வெள்ளறை நின்றவன்
197. கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும்
உண்டு மஞ்சு தவழ்மணி மாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீஅங்குநிற்க அழகனே காப்பிட வாராய்.
ஒளியுடை வெள்ளறை நின்றவன்
198. கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த
பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.
திருவெள்ளறை செல்வப்பிள்ளை
199. இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய்
கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.
அந்திப் போதினில் விளக்கேற்றுவேன், வா
200. இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.
வினை போகும்
201. போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை
மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை
பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள் ளார்வினை போமே.
(திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க ரøக்ஷ கட்டுதல், சில பொருள்களைச் சுற்றிப் போடுதல் முதலியவை நம் நாட்டில் வழக்கத்தில் இருக்கின்றன.
பெருமான் திருவீதியில் புறப்பாடு கண்டருளியதும், கோவில் வாசலில் திருஷ்டி தோஷம் படாமலிருக்கத் திருவந்திக் காப்பு செய்வதைக் காணலாம். கருப்பூர ஆரத்தி, புதிய வஸ்திரம் கிழித்துச் சுற்றிப் போடுதல் செய்வதைப் பார்க்கிறோம்)
அடிவரவு: இந்திரனோடு கன்றுகள் செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பமதனை இருக்கொடு போதமர்-வெண்ணெய்.
ஒன்பதாந் திருமொழி
9. வெண்ணெய் விழுங்கி
கண்ணனின் தீம்புகளும் விளையாட்டுகளும் தனிப்பட்டவை சுவை மிக்கவை! குழந்தை கண்ணனை அருகில் படுக்கவைத்து உறங்கச் செய்கிறாள். உறங்கி விட்டான் என்று நினைத்து எழுந்து வீட்டு 
வேலைகளைக் கவனிக்கச் செல்கிறாள் அசோதை. கண்ணனும் எழுந்தான். பல வீடுகளுக்குச் செல்லுகிறான். வெண்ணெயைக் களவு செய்கிறான். பாலைக் காய்ச்சிக் குடிக்கிறான். பாத்திரங்களை உருட்டித் தள்ளி உடைக்கிறான். எல்லாப் பெண்களும் அசோதையிடம் ஓடி வருகிறார்கள். கண்ணனின் ஒவ்வொரு தீம்பையும் சொல்லி முறையிடுகிறார்கள். கண்ணா! உன்மீது கூறப்படும் பழிச் சொற்களைக் கேட்கமுடியவில்லை இங்கே வா என்றழைக்கிறாள் அசோதை.
பாலக்கிரீடை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அண்ணாற் கண்ணன்
202.வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டுஅத னோசை கேட்கும்
கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக் காக்ககில் லோம்உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரைபுரை யால்இவை செய்ய வல்ல
அண்ணற்கண் ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய்உன் மகனைக் கூவாய்.
வாமனனே காகுத்தன்
203.வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல்செய்ய வாய்மு கத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே
அரிய னிவன்எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார்
பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியே னுக்குஇங்கே போத ராயே.
திருவுடைப் பிள்ளை
204. திருவுடைப் பிள்ளை தான்தீய வாறு தேக்கமொன் றுமிலன் தேசு டையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான்வ ழக்கோ அசோதாய்
வருகவென்று உன்மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மதுசூ தனனே.
கொண்டல் வண்ணன் கோயில் பிள்ளை
205. கொண்டல்வண் ணாஇங்கே போத ராயே கோயிற்பிள் ளாய்இங்கே போத ராயே
தெண்திரை சூழ்திருப் பேர்க்கி டந்த திருநார ணாஇங்கே போத ராயே
உண்டுவந் தேன்அம்ம னென்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்
கண்டெதி ரேசென் றெடுத்துக் கொள்ளக் கண்ணபி ரான்கற்ற கல்வி தானே.
சாளக்கிராமமுடைய நம்பி

206. பாலைக் கறந்துஅடுப் பேற வைத்துப் பல்வளை யாள்என் மக ளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுதுஅங்கே பேசி நின்றேன்
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக்கரும்பின் மொழி யனைய அசோதைநங் காய்உன் மகனைக் கூவாய்.
குடமாடு கூத்தன்

207. போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல கத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்
கோது கலமுடைக் குட்ட னேயா குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா
வேதப் பொருளே என்வேங்கடவா வித்தக னேஇங்கே போத ராயே.
பன்னிரு ச்ரவண விரதம்
208. செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்தஅக் காரம் நறுநெய் பாலால்
பன்னிரண் டுதிரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள் ளைபரி சறிவன்
இன்ன முகப்பன்நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.
தாய் சொல் கொள்வது தருமம்
209. கேசவ னேஇங்கே போத ராயே கில்லேனென் னாதுஇங்கே போத ராயே
நேச மிலாதா ரகத்தி ருந்து நீவிளை யாடாதே போத ராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும்  தொண்டரும் நின்ற விடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோத ராஇங்கே போத ராயே.
உறியிலேயே குறி
210. கன்ன லிலட்டுவத் தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு
என்னக மென்றுநான் வைத்துப் போந்தேன் இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்
உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.
என் மகள் வளைவிற்று நாவற்பழம் வாங்கினான்
211. சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலு டையன்உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்துஎன் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத் திக்குஅவ் வளைகொ டுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல் லேனென்று சிரிக்கின்றானே.
கோவிந்தன் அடியார்களாவர்
212. வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ் வருபுனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன்அடி யார்க ளாகி
எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் இணையடி என்தலை மேல னவே.
(இந்த 11 பாசுரங்களையும் பக்தியுடன் அநுஸந்தானம் செய்வோர் எட்டுத் திசைக்கும் இருள் நீக்கும் விளக்காகி நிற்பர்)
அடிவரவு: வெண்ணெய் வருக திரு கொண்டல் பாலை போதர் செந்நெல் கேசவனே கன்னல் சொல்லில் வண்டு-ஆற்றில்.
பத்தாந் திருமொழி
10. ஆற்றிலிருந்து
கண்ணனுடைய திருவிளையாடல்களினால் துன்புற்றார்கள் சில பெண்கள். யசோதையிடம் வந்து 
தாம் அடைந்த துன்பங்களை முறையிடுகிறார்கள். அன்பைக் காட்டியதற்கேற்றவாறு பரி மாற்றம் செய்யாத குறைகளை எடுத்துக் கூறுகிறார்கள்.
அயலகத்தார் முறையீடு
கலித்தாழிசை
காற்றிற் கடியன்
213. ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும்
தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.
எண்டிசையோரால் இறைஞ்சப்படும் இறைவன்
214. குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ
எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு
விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.
காளியன்மீது நடமாடியவன்
215. தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.
மழை தடுத்து ஆனிரை காத்தவன்

216. தேனுக னாவி செகுத்து பனங்கனி
தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து ஆனிரை காத்தானால்
இன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.
ஆய்ச்சியர் பிடியில் சிக்கியவன்
 
217. ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது அங்கு
ஆப்புண் டிருந்தானால் இன்று முற்றும் அடியுண் டழுதானால் இன்று முற்றும்.
தளர்நடையிட்ட இளம்பிள்ளை

218. தள்ளித் தளிர்நடை யிட்டுஇளம் பிள்ளையாய்
உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி
கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்.
மாணுருவாய வாமனன்
219. மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று
மூவடி தாவென்று இரந்தஇம் மண்ணினை
ஓரடி யிட்டுஇரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்.
வேழம் துயர்கெடுத்த பெருமான்
220. தாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும் அதற்குஅருள் செய்தானால் இன்று முற்றும்.
வராகத்தின் உருவாகிய பெருமான்
221. வானத் தெழுந்த மழைமுகில் போல்எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்.
தரவு கொச்சகக் கலிப்பா
துன்பமே இல்லை
222. அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கைநல் லார்கள் தாம்வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைப்கோன் பட்டன்சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே.
அடிவரவு: ஆற்றில் குண்டலம் தடம் தேனுகன் ஆய்ச்சியர் தள்ளி மாவலி தாழை வானத்து அங்கமலம்- தன்னேராயிரம்
மூன்றாம் பத்து
முதல் திருமொழி
1. தன்னேராயிரம்
கண்ணபிரானை அம்மமுண்ண (முலைப்பால் குடிக்க) யசோதை அழைக்கிறாள். கண்ணன் வருகிறான். 
ஆனால் அவனுடைய மேன்மையையும், அவனுடைய செயல்களையும் நினைத்து அஞ்சுகிறாள். தன் மகன் பகவானே என்று நினைக்கிறாள். உனக்கு அம்மம் தர அஞ்சுவன் என்று கூறுகிறாள். ஆழ்வாரும் யசோதையாக இருந்துகொண்டு அப்படியே அனுபவிக்கிறார்.
அன்னை கண்ணனுக்கு அம்மம்தர அஞ்சுதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வஞ்சமகள் துஞ்ச வாய்வைத்தவன்
223. தன்னே ராயிரம் பிள்ளை களோடு தளர்நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை துஞ்சவாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
சகடம் இறச் சாடியவன்

224. பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்
வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து
மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
மருதான அசுரரைப் பொன்றுவித்தவன்

225. கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்
இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீஉன்னை என்மக னேயென்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
ஆய்ச்சியரை மையல் செய்தவன்

226. மையார் கண்டமட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்துஅவர் பின்போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று குற்றம் பலபல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ புத்தகத் துக்குள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
விம்மியழுது எதையும் சாதிக்கும் பிள்ளை
227. முப்போ தும்கடைந் தீண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி
கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பா லுண்டழு பிள்ளைகள் போலந விம்மிவிம் மியழு கின்ற
அப்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
கன்றினால் விளவெறிந்தவன்
228. கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றா நிறைமண்டித் தின்ன
விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென்குழல் கன்னி யொருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
ஆயர் கன்னியர் தொழும் சோதி
229. மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு வாய்வைத்துஅவ் வாயர்தம் பாடி
சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்துஉன்னைச் சுற்றும் தொழநின்ற சோதி
பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்றகுற் றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
சொல்லப்படாதன செய்தவன்
230. வாளா வாகிலும் காணகில் லார்பிறர் மக்களை மையன்மை செய்து
தோளா லிட்டுஅவ ரோடு திளைத்துநீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
காய்வார்க்கு உகப்பனவே செய்பவன்

231. தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிறைப்பின்பு போவர்
நீஆய்ப் பாடிஇளங் கன்னி மார்களை நேர்பட வேகொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பன வேசெய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
இருபத்தொரு நாழிகை மறைந்த மாயன்

232. தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம்கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்துஇரா நாழிகை  மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான்ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
இருடீகேசன் அடியாராவார்

233. கரார் மேனி நிறத்தெம்பி ரானைக் கடிகமழ் பூங்குழ லாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான் அம்மம்தா ரேனென்ற மாற்றம்
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பட்டர்பி ரான்சொன்ன பாடல்
ஏரா ரின்னிசை மாலை வல்லார் இருடீகே சனடி யாரே.
அடிவரவு: தன்னேராயிரம் பொன் கும்மாயத்தொடு மையார் முப்போதும் கரும்பு மருட்டார் வாளா தாய்மார் தொத்தார் காரார்-அஞ்சன
இரண்டாம் திருமொழி
2. அஞ்சன வண்ணனை
மாடு மேய்க்கக் கண்ணனை அசோதை காட்டிற்கு அனுப்பிவிட்டாள். ஆனால் அவனது பிரிவைத் தாளமுடியவில்லை. என் அன்பு மகனை இங்கேயே இருக்கச் செய்யாமல் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிற்கு அனுப்பிவிட்டேனே என்று மனம் கரைந்து அவனது தீம்புகளை எல்லாம் நினைத்து அனுபவித்துப் பேசுகிறாள். ஆழ்வாரும் அதை அப்படியே அனுபவிக்கிறார்.
கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் இரங்குதல்
கலிநிலைத்துறை
ஆயர் கோலக் கொழுந்து
234. அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
சிற்றில் சிதைத்த சிரீதரன்
235. பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின்
எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
பொன்மணி மேனியான்

236. நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன்மணி நின்றதிர் கா னதரிடைக் கன்றின்பின்
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே.
கண்ணுக்கினியவன்; எண்ணற்கு அரியவன்

237. வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட
பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக்கா னதரிடைக் கன்றின்பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே.
தெய்வத் தலைவன்
238. அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வம் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
படிறு பல செய்யும் பிரான்
239. மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்
படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின்
இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
புள்ளின் தலைவன்
240. வள்ளி நுடங்கிடை மாதர் வந்துஅலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழ ரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங்கா னதரிடைக் கன்றின்பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
பன்னிரு திங்கள் கருவில் இருந்தவன்
241. பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால்
என்இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்துயான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
தாமோதரன்
242. குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுடை
கடியவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
எனக்கினியான் மணிவண்ணன்

243. என்றும் எனக்குஇனி யானை என்மணி வண்ணனை
கன்றின் பின்போக்கி னேனென்று அசோதை கழறிய
பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல்
இன்தமிழ் மாலைகள் வல்ல வர்க்குஇட ரில்லையே.
அடிவரவு: அஞ்சன பற்று நன்மணி வண்ணம் அவ்வவ் விடம் மிடறு வள்ளி பன்னிரு குடை என்றும்- சீலை.
மூன்றாந் திருமொழி

3. சிலைக்குதம்பை
யசோதை கன்றுகளை மேய்க்கக் கண்ணனைக் காட்டிற்கு அனுப்பினாள்; ஆனால் அவன் பிரிவு தாளாது ஏங்கினாள். மாலையில் அவன் திரும்பி வருகிறான். அவனுடைய அலங்காரங்களைக் கண்டு மகிழ்கிறாள். பிறரையும் அழைத்து அவ்வழகைக் காணச் செய்கிறாள். தான் பெற்ற பெருமையையும், கண்ணனது தீம்புகளையும் கூறி, கண்ணா! நீ நாளை முதல் கன்றின் பின் போகாமல் கோலம் செய்து இங்கே இரு என்கிறாள். ஆழ்வார் அசோதையாக இருந்து அப்படியே அனுபவித்துக் கூறுகிறார்.
கண்ணன் கன்றுகள் மேய்த்து வருவதுகண்டு அன்னை மகிழ்தல்
எழுச்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கடல் வண்ணணின் இடைக்கோலம்
244. சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ
கோலப் பணைக்கச் சும்கூ றையுடையும் குளிர்முத் தின்கோ டாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோமற் றாரு மில்லை.
மன்னிய சீர் மதுசூதனன்
245. கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம்
மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன்
என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா.
கோடல் பூச்சூடிவரும் தாமோதரன்
246. காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோ டல்பூச்
சூடிவ ருகின்ற தாமோ தராகற்றுத் தூளிகாண் உன்னு டம்பு
பேடை மயிற்சாயல் பின்னை மணாளா நீராட் டமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்.
கடிபொழில் வேங்கடவன்
247. கடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றேநீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல
அடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்.
சிற்றாயர் சிங்கம்
248. பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை வாய்வைத்த போரே றேஎன்
சிற்றாயர் சிங்கமே சீதைம ணாளா சிறுக்குட்டச் செங்கண் மாலே
சிற்றாடை யும்சிறுப் பத்திர மும்இவை கட்டிலின் மேல்வைத் துப்போய்
கற்றாய ரோடுநீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.
காயாம்பூ வண்ணன்
249. அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்
என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.
பார்க்கடல் வண்ணன்
250. பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக்கைக ளாலே விளங்கா யெறிந்தாய் போலும்
என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமா வார்களே.
வாட்டமிலாப்புகழ் வாசுதேவன்

251. கேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்தி ரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன்தன் னைக்கொண்டு ஒருபோ தும்எனக் கரிது
வாட்டமி லாப்புகழ் வாசுதே வாஉன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்.
கோலம் செய்து இங்கே இரு

252. திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.
கடல் வண்ணன் கழலிணை காண்பவர்
253. புற்றர வல்குல் அசோதைநல் லாய்ச்சி தன்புத் திரன்கோ விந்தனை
கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்துஅவள் கற்பித்த மாற்ற மெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ்தரு தென்புது வைவிட்டு சித்தன் சொல்
கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே.
அடிவரவு: சிலை கன்னி காடுகள் கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று- தழைகளும்.
நான்காந் திருமொழி
4. தழைகளும்
கண்ணன் தாய் சொல் தட்டாதவன். தாய் வேண்டிக் கொண்டபடியே ஏழு நாட்கள் பிரியாமல் அவளோடு தங்கி இருந்தான். மீண்டும் கன்று மேய்க்கக் காடு சென்று திரும்பி வருகிறான். பல இசைகளும் 
மேளங்களும் முழங்க நண்பர்களோடு ஆரவாரமாக வருகிறான். அவன் வருவதைக் கண்ட ஆயர் பெண்கள் கண்ணன்மீது காமுற்றுக் கூறிய வார்த்கைளை ஆழ்வாரும் கூறி அனுபவிக்கிறார்.
காலிப்பின் வரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மங்கையர் ஊண் மறந்தனர்
254. தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி
குழல்களும் கீதமு மாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பன ராகி எங்கும் உள்ளம் விட்டுஊண் மறந்தொழிந் தனரே.
ஆயர்குழாம் நடுமே வரும் பிள்ளை

255. வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு வசையறத் திருவரை விரித் துடுத்து
பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே
முல்லை நல்நறு மலர்வேங் கைமலர் அணிந்து பல்லா யர்குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்எதிர் நின்று அங்கினவளை இழவேன் மினே.
ஆநிரை மேய்த்து வாடிய பிள்ளை

256. சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார்கொண் டோட
ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்ற ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகேநின் றாள்என்பெண் நோக்கிக் கண்டாள் அதுகண்டுஇவ் வூர்ஒன்று புணர்க் கின்றதே.
குழலூதிக் கன்றுகள் மேய்க்கும் கோவலன் 
257. குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவல னாய்க்குழ லூதி யூதி
கன்றுகள் மேய்த்துத் தன்தோ ழரோட கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டு என்றும் இவனையொப் பாரை நங்காய் கண்டறி யேன்ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில் லாவளை கழன்று துக லேந்திள முலையும்என் வசமல் லவே.
திருமாலிருஞ்சோலை மாயன் ஆயன்
258. சுற்றி நின்றுஆ யர்தழை களிடச் சுருள்பங்கி நேத்திரத் தால்அ ணிந்து
பற்றி நின்றுஆ யர்கடைத் தலையே பாடவும் ஆடக்கண் டேன்அன் றிப்பின்
மற்றொரு வர்க்குஎன்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால்
கொற்றவ னுக்குஇவ ளாமென் றெண்ணிக் கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே.
அந்தமொன்றில்லாத ஆயப்பிள்ளை

259. சிந்துர மிலங்கத் தன்திரு நெற்றிமேல் திருத்திய கோறம் பும்திருக் குழலும்
அந்தர முழவத் தண்தழைக் காவின்கீழ் வருமாய ரோடுஉடன் வளைகோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ்வீதி போது மாகில்
பந்துகொண் டானென்று வளைத்து வைத்துப் பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ.
ஆயரோடு ஆலித்துவரும் ஆயப்பிள்ளை

260. சாலப்பல் நிரைப்பின் னேதழைக் காவின் கீழ்தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல்நறுங் குஞ்சி நேத்திரத் தால ணிந்துபல் லாயர்குழாம் நடுவே
கோலச் செந்தா மரைக்கண் மிளிரக் குழலூதி யிசைபா டிக்குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டுஎன் மகளயர்க் கின்றதே.
இந்திரன்போல் வரும் ஆயப்பிள்ளை
261. சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி யப்பித் திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தால ணிந்து
இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை எதிர்நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்துகி லொடுசரி வளைகழல் கின்றதே.
குழலூதும் அலங்காரப் பிள்ளை
262. வலங்காதின் மேல்தோன்றிப் பூவ ணிந்து மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத் தால்குழல் தாழ விட்டுத் தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி
அலங்காரத் தால்வரு மாயப் பிள்ளை அழகுகண்டு என்மகள் ஆசைப் பட்டு
விலங்கிநில் லாதுஎதிர் நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய்ம்மெலி கின்றதே.
பரமான வைகுந்தம் நண்ணுவர்

263. விண்ணின் மீதுஅம ரர்கள்விரும் பித்தொழ மிறைத்துஆயர் பாடியில் வீதியூடே
கண்ணங் காலிப்பின் னேஎழுந் தருளக் கண்டுஇளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில்புது வையர்கோன் விட்டு சித்தன் சொன்ன மாலைபத்தும்
பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.
அடிவரவு: தழைகளும் வல்லி கரிகை குன்று சுற்று சிந்துரம் சால சிந்துரப் பொடி வலம் விண்ணின்மீது-அட்டு.
ஐந்தாந் திருமொழி
5. ஆட்டுக்குவி
ஒரு நாள் திரு ஆய்பாடியில் இந்திர பூஜை! அவனுக்காகச் செய்து வைத்த உணவுகளை எல்லாம் கோவர்த்தனமலைக்கு இடச் செய்தான் கண்ணன். தானே அம்மலையாக இருந்து அமுது செய்தான். இந்திரனுக்குக் கோபம். கருமுகில்களை அழைத்து ஏழு நாள் பெரு மழை பெய்வித்தான் . 
கண்ணனுக்கு ஆயர்கள் மீதும், ஆநிரைகள்மீதும் எவ்வளவு அன்பு! கோவர்த்தனமலையையே குடையாகப் பிடித்து ஆநிரை காத்தான். அவ்வரலாற்றை ஆழ்வார் கூறி மகிழ்கிறார்.
கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு மழை தடுத்து ஆயர்களையும ஆநிரைகளையும் காத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கடல் வண்ணன் பொறுத்த மலை
264. அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும் தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்றுமா ரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டுகுற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
மதுசூதனன் எடுத்த மலை

265. வழுவொன் றுமிலாச் செய்கைவா னவர்கோன் வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்டு
மழைவந்து எழுநாள் பெய்துமாத் தடுப்ப மதுசூ தன்எடுத் துமறித் தமலை
இழவு தரியாத தோரீற் றுப்பிடி இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும்
குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
இலங்கும் ஆழிக்கை எந்தை
266. அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும் ஆனா யரும்ஆ நிரையும் அலறி
எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை
தம்மைச் சரணென் றதம்பா வையரைப் புனமேய் கின்றமா னினம்காண் மினென்று
கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
தேவர் பெருமான் கொண்டு நின்ற மலை
267. கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றுமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
பன்றியுருவாகிய ஈசன் எடுத்த மலை
268. வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்துவாங் குமினென் பவன்போல்
ஏனத் துருவா கியஈ சன்எந்தை இடவ னெழவாங் கியெடுத் தமலை
கானக் களியா னைதன்கொம் பிழந்து கதுவாய் மதம்சோ ரத்தன்கை யெடுத்து
கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
நெடுந்தோள் கொடுத்துத் தூக்கிப் பிடித்த மலை
269. செப்பா டுடைய திருமா லவன்தன் செந்தா மரைக்கை விரலைந் தினையும்
கப்பா கமடுத் துமணி நெடுந்தோள் காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை
எப்பா டும்பரந் திழிதெள் ளருவி இலங்கு மணிமுத் துவடம் பிறழ
குப்பா யமென நின்றுகாட் சிதரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
தாமோதரன் தாங்கிய தடவரை

270. படங்கள் பலவு முடைப்பாம் பரையன் படர்பூமி யைத்தாங் கிக்கிடப் பவன்போல்
தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத் தாமோ தரன்தாங் குதட வரைதான்
அடங்கச் சென்றுஇலங் கையையீ டழித்த அனுமன் புகழ்பா டித்தம்குட் டன்களை
குடங்கைக் கொண்டுமந் திகள்கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
நாராயணன் காத்த மலை

271. சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச் சரமா ரிபொழிந் துஎங்கும்பூ சலிட்டு
நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல் நாரா யணன்முன் முகம்காத் தமலை
இலைவேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய
கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
முசுக்கணங்கள் குதி பயிற்றும் மலை
272. வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன் வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை
தன்பே ரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோ தரன்தாங் குதட வரைதான்
முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள் முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை
கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
கோவர்த்தனத்தை எடுத்தது இந்திர ஜாலமோ!

273. கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் கோல மும்அழிந் திலவா டிற்றில
வடிவே றுதிரு வுகிர்நொந் துமில மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்
முடியே றியமா முகிற்பல் கணங்கள் முன்னெற் றிநரைத் தனபோ லஎங்கும்
குடியே றியிருந் துமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
வைகுந்தம் நண்ணுவர்
274. அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர் தியவ னுடைய
குரவிற் கொடிமுல் லைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலிமா மறைவா ணர்புத்தூர்த் திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும்
பரவு மனநன் குடைப்பத் தருள்ளார் பரமா னவைகுந் தம்நண் ணுவரே.
அடிவரவு: அட்டு வழு அம்மை கடு வானத்தில் செப்பாடு படங்கள் சலம் வன்பேய் கொடி அரவில்-நாவலம்.
ஆறாந் திருமொழி
6. நாவலம்
பிருந்தாவனத்தில் கண்ணன் புல்லாங்குழல் இசைத்தான். அக்குழலோசையை ஆயர் பெண்கள், 
தேவமாதர்கள் கேட்டுத் தம் செயல்களை மறந்தனர். ஆநிரைகள் இசையிலே ஈடுபட்டு அசையாமல் 
நின்றன. செடி கொடிகளும் மரங்களும் மகிழ்ந்தன. அவ்வளவு என்ன! உலகத்தையே இசை மயக்கியது.
கண்ணன் வேய்ங்குழலூதிய சிறப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குழலிசையில் மயங்கிய ஆசிரிய விருத்தம்
275.நாவ லம்பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள்இதுஓ ரற்புதம் கேளீர்
தூவ லம்புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து எங்கும்
காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின் றனரே.
கோவிந்தன் குழலூதியதன் விளைவு
276.இடவணரை யிடத்தோளொடுசாய்த் திருகைகூடப் புருவம்நெரிந்தே
குடவயிறுபட வாய்கடைகூடக் கோவிந்தன் குழல்கொடடூதினபோது
மடமயில்களோடு மான்பிணைபோலே மங்கைமார்கள் மலர்க்கூந்தலவிழ
உடைநெகிழ வோர்கையால்துகில்பற்றியொல்கி யோடரிக்க ணோடநின்றனரேஉ..
வாசுதேவன் நந்தகோன் இளவரசு
277. வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசுதே வன்மது ரைமன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்துவந் தீண்டி மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப
தேனள வுசெறி கூந்த லவிழச் சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே.
குழலிசையில் மயங்கிய அரம்பையர்
278. தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
கான கம்படி உலாவி யுலாவிக் கருஞ்சிறுக் கன்குழ லூதின போது
மேனகை யொடுதி லோத்தமை அரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய்திறப் பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே.
குழலோசை கேட்ட தும்புரு நாரதர் நிலை

279. முன்நர சிங்கம தாகி அவுணன் முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்
மன்னரஞ் சும்மது சூதனன் வாயில் குழலி னோசை செவி யைப்பற்றி வாங்க
நன்ன ரம்புடைய தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து
கின்ன ரமிது னங்களும் தம்தம் கின்ன ரம்தொடு கிலோமென் றனரே.
குழலின் அமுதகீதத்தில் கந்தருவர் மயங்கினர்

280. செம்பெ ருந்தடங் கண்ணன்திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன்இந் நாள்குழ லூதக் கேட்டவர் கள்இட ருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் அமுத கீதவலை யால்சுருக் குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்துகைம் மறித்துநின் றனரே.
குழலிசையில் மயங்கிய தேவர்களின் நிலை

281. புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப
அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே.
குழலிசையில் பறவைகளும் கறவைகளும் மயங்கின

282. சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க
குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.
குழலிசை கேட்ட மான்களின் நிலை

283. திரண்டெ ழுதழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான் ஊது கின்றகுழ லோசை வழியே
மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர
இரண்டு பாடும்துலங் காப்புடை பெயரா எழுதுசித் திரங்கள் போல நின்றனவே.
குழலிசை கேட்ட மரங்களின் செயல்
284. கருங்கண் தோகைமயிற் பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொரு வன்குழ லூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.
சாதுக்களின் கோஷ்டியில் சேர்வர்
285. குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்
குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக் கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை
குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன் விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார்
குழலை வென்றகுளிர் வாயின ராகிச் சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே.
(இந்தப் பாசுரங்களை நம்பிகையோடு பாராயணம் செய்வோர் தெய்வீக சங்கீதத் துறையில் 
புகழுடன் விளங்குவர்)
அடிவரவு: நாவலம் இட வான் தேனுகன் முன் செம் புவியுள் சிறு திரண்டு கருங்கண் குழல்-ஐய
ஏழாந் திருமொழி
7. ஐயபுழுதி
கண்ணன்மீது மையல் கொண்டு தன் மகள் படும்பாட்டைத் தாய் கூறுவதுபோல், ஆழ்வாரும் அப்பெண்ணின் தாயாகவே இருந்துகொண்டு கூறி அனுபவிக்கிறார். பெண்ணின் நிலை. அவளைப் பற்றி ஊரார் கூறும் சொல் ஆகியவற்றையும், தன் வீடு சிறிய வீடாக இருந்தாலும், பெண்ணின் திருமணத்தை வீட்டிலேயே 
செய்ய வேண்டும் என்ற அவளது கருத்தையும் (பாடல் 10) இத்திருமொழி அறிவிக்கிறது.
திருமாலிடம் ஈடுபட்ட மகளின் இளமைகண்டு நற்றாய் இரங்குதல் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அரவணைப் பள்ளியான்
286. ஐய புழுதி உடம்ப ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில்சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி யானோடு கைவைத்து இவள்வருமே.
மாயன் மாமணிவண்ணன்
287. வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடிகூ டிற்றில
சாய்வி லாத குறுந்தலைச் சிலபிள் ளைகளோ டிணங்கி
தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
பஞ்சாயுதன் கோவிந்தன்

288. பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை
சங்கை யாகிஎன் னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.
மாயன் செய்த சூழ்ச்சி என்னே!

289. ஏழை பேதைஓர் பாலகன் வந்துஎன் பெண்மக ளையெள்கி
தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறி யாத தென்னும் மூதுரையு மிலளே.
துழாயலங்கல் நாரணன்
290. நாடும் ஊரும் அறிய வேபோய் நல்ல துழாயலங்கள்
சூடி நாரணன் போமிட மெல்லாம்  சோதித் துழிதருகின்றாள்
கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவ னோடுஇவளை
பாடு காவ லிடுமி னென்றென்று பார்தடு மாறினதே.
பூவைப்பூ வண்ணன்

291. பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்துஇவள் பாடக மும்சிலம்பும்
இட்ட மாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப்புறப் பட்டுநின்றுஇவள் பூவைப்பூ வண்ணா வென்னும்
பட்ட வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
கேசவன் கேடிலி
292. பேச வும்தெரி யாத பெண்மையின் பேதையேன் பேதைஇவள்
கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர் கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாச வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
பருவப் பெண்ணின் இயல்பு
293. காறை பூணும் கண்ணாடி காணும்தன் கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
முகில்வண்ணன் பக்கத்தில் விடுக
294. கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணா லங்கள் செய்துஇவளை
வைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த்த லையெழு நாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள
மைத்த டமுகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே.
உலகளந்தானிடம் ஒருப்படுத்திடுமின்

295. பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து பேணிநம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும்ஒன் றெண்ணு கின்றாள்
மருத்து வப்பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன்முன்
ஒருப்ப டுத்திடு மின்இவளை உலகளந் தானி டைக்கே.
துயரமே இல்லை
296. ஞால முற்றும்உண்டு ஆலி லைத்துயில் நாரா யணனுக்குஇவள்
மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை
கோல மார்பொழில் சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலை பத்தும் வல்ல வர்கட்கு இல்லை வருதுயரே.
அடிவரவு: ஐய வாயில் பொங்கு ஏழை நாடு பட்டம் பேச காறை கைத்தலத்து பெரு ஞாலம்-நல்லதோர்.
எட்டாந் திருமொழி
8. நல்லதோர் தாமரை
தன் மகளுக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி என்பதைத் தாய் அறிந்தாள்; கண்ணனோடு கலவி உண்டாயிற்று என்பதையும் உணர்ந்தாள். ஊரில் பழிச் சொல் தோன்றுவதற்கு முன் இவளை பகவானிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று உறவினர் கூறினர். அதையும் தாய் கேட்கவில்லை. ஒரு நாள் தாயும் மகளும் படுத்துறங்கும்போது, கண்ணன் இம்மகளை அழைத்துச் சென்றுவிட்டான். தாய் கண் விழித்துப் பார்த்தாள். மகளைக் காணவில்லை. பதறினாள்; கதறினாள் அருமையாக வளர்த்த தன் மகளை நினைத்துப் புலம்புகிறாள். என்னே ஆழ்வாரின் அனுபவம்!
மாயவன் பின்சென்ற மகளை நினைத்துத் தாய் பலபடியாகக் கூறி ஏங்குதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மல்லரை அட்டவன் பின் சென்றாளோ?
297. நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந் தாலொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ என்மக ளைஎங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின்போய் மதுரைப்பு றம்புக்காள் கொலோ.
தந்திரத்தில் வல்ல நாராயணன்
298. ஒன்று மறிவொன்றில் லாத உருவறைக் கோபாலர் தங்கள்
கன்றுகால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறிசெய்து போனான் நாராய ணன்செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்குஓ ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.
தாமோதரனுக்கே உரியவளோ?
299. குமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி  அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ.
செங்கண்மால் இவளை மணந்து விடுவானோ?
300. ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.
மகளைப் பெற்ற தாயின் நிலை
301. தம்மாமன் நந்தகோ பாலன் தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர் இனித்தரி யாரென்னுங் கொலோ.
பெருமானைக் கைப்பற்றுவாளோ? 
302. வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ.
பெருமான் என் மகளை என்ன செய்வானோ? 
303. அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகா வல்வைக்குங் கொலோ.
தயிர் கடைவாளோ?
304. குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ.
உலகளந்தான் என் மகளை ஆள்வானா?
305. வெண்ணிறத் தோய்தயிர் தன்னை வெள்வரைப் பின்முன் எழுந்து
கண்ணுறங் காதே யிருந்து கடையவும் தான்வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந் தான்என் மகளை
பண்ணறை யாப்பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ.
தூமணி வண்ணற்கு ஆளாவர்
306. மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியி லும்புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப்பத்தும் வல்லார் தூமணி வண்ணற்கா ளாரே.
அடிவரவு: நல்லதோர் ஒன்றும் குமரி ஒரு தம்மாமன் வேடர் அண்டத்து குடியில் வெண்ணிற மாயவன்- என்னாதன்
ஒன்பதாந் திருமொழி
9. என்னாதன்
பெரியாழ்வார் இதுவரை கண்ணனின் பண்புகளையே கூறி மகிழ்ந்தார். இனி இராமனின் சீரிய 
குணங்களையும் கலந்து கூறி மகிழ விரும்பினார். தாமே இரண்டு ஆயர் பெண்களாக ஆனார். 
ஒரு பெண்ணின் வாயினால் இராம குணத்தையும், மற்றொரு பெண் வாயினால் கிருஷ்ணனின் 
குணத்தையும் கூறி அவர்களின் பெருமைக் கடலில் மூழ்குகிறார். ஒரு பாசுராம் இராமனின்
 பெருமையையும் மற்றொரு பாசுரம் கிருஷ்ணனின் பெருமையையும் கூறுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது!
இராமகிருஷ்ணாவதாரங்களின் செயல்களை இரு தோழியர் கூறிப் பரவசமடைந்து விளையாடுதல் (உந்தி பறத்தல்)
கலித்தாழிசை
பாரிஜாதமரம் கொண்டுவந்த எம்பிரான்
307. என்னாதன் தேவிக்குஅன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என்னாதன் வன்மையைப் பாடிப்பற எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.
தாடகையை அழித்த தாசரதி
308. என்வில் வலிகண்டு போவென்று எதிர்வந்தான்
தன்வில்லி னோடும் தவத்தை எதிர்வாங்கி
முன்வில் வலித்து முதுபெண் ணுயிருண்டான்
தன்வில்லின் வன்மையைப் பாடிப்பற தாசரதி தன்மையைப் பாடிப்பற.
ருக்மணியை அழைத்துவந்த தேவகி சிங்கம்

309. உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.
சீற்றமிலாத மீதை மணாளன்

310. மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன
சீற்ற மிலாதானைப் பாடிப்பற சீதை மணாளனைப் பாடிப்பற.
பஞ்சவர் தூதன்
311. பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநல் பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.
பரதனுக்கு அடிநிலையளித்த இராமன்
312. முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டுஉன்
அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரதநம் பிக்குஅன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
காளியனுக்கு அருளிய தூமணிவண்ணன்
313. காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டுஅவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற.
தம்பிக்கு அரசீந்த அயோத்தியரசன்
314. தார்க்குஇளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்குஅவ
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற.
வேய்ங்குழலூதும் வித்தகன்
315. மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.
ஆராவமுதனே அயோத்தியர் கோன்

316. காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த
ஆரா வமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.
தரவு கொச்சகக் கலிப்பா
அல்லல் இல்லை
317. நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்குஅல்ல லில்லையே.
அடிவரவு: என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தாற்கு மாயம் காரார் 
நந்தன்- நெறிந்த
பத்தாந் திருமொழி
10. நெறிந்த கருங்குழல்
 இராம தூதனாக இலங்கைக்குச் சென்ற(அனுமன்) திருவடி அசோகவனத்தில் சீதா பிராட்டியைக் 
காண்கிறார். பல அடையாளங்களைச் சொல்லித் தான் இராமதூதன் என்பதை உணர வைக்கிறார். 
இராமன் கொடுத்தனுப்பிய மோதிரத்தைக் கொடுத்து மகிழ்விக்கிறார். இவ்வரிய செயல்களைக் கூறி 
மகிழ்கிறார் ஆழ்வார். ஒருவன் இராமபக்தன் என்பதற்கு இத்திரு மொழியைக் கூறுவதும் ஓரடையாளம்.
சீதைக்கு அனுமன் கூறிய அடையாளம்
கலிவிருத்தம்
வில்லால் பரசுராமனின் தவவலிமையைச் சிதைத்தது
318.நெறிந்தகருங் குழல்மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்தமணி முடிச்சனகன் சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது
அறிந்துஅரசு களைகட்ட அருந்தவத்தோன் இடைவிலங்க
செறிந்தசிலை கொடுதவத்தைச் சிதைத்ததும்ஓ ரடையாளம்.
சீதை மல்லிகை மாலையால் இராமனைக் கட்டியது

319. அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே
எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்
மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.
இலக்குமணனோடு காடு சென்றது
320. கலக்கியமா மனத்தனளாய்க் கைகேசி வரம்வேண்ட
மலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போஎன்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னொடும்அங்கு ஏகியதுஓ ரடையாளம்.
குகனோடு தோழமை கொண்டது

321. வாரணிந்த முலைமடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்
சீரணிந்த தோழமையைக் கொண்டதும்ஓ ரடையாளம்.
சித்திரகூடத்தில் பரதன் இராமனை வணங்கியது
322. மானமரு மெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூ டத்துஇருப்ப
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓ ரடையாளம்.
அத்திரத்தினால் காகாசுரன் கண்ணை அறுத்தது

323. சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம்.
இலக்குமணன் சீதையை விட்டுப் பிரிந்தது

324. மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட
நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்துஎம் பிரான்ஏக
பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும்ஓ ரடையாளம்.
மோதிரத்தை அடையாளமாகக் காட்டியது

325. மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட
அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே.
சீதை மோதிரம் பெற்று உகந்தது

326. திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்
மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான்என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.
இமையவரோடு ஒன்றுவர்
327. வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.
அடிவரவு: நெறிந்த அல்லி கலக்கிய வாரணி மான சித்திர கூடத்து மின் மைத்தகு திக்கு வாராரும்-கதிர்

நான்காம் பத்து
முதல் திருமொழி
1. கதிராயிரம்
ஸ்ரீமத் நாராயணனே இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்தான்; பல அரிய செயல்களைச் செய்தான், அவர்களை நேரில் காணவில்லையே! அக்காலத்தில் பிறந்திருக்கக்கூடாதா! என்று நினைக்கத் தோன்றுகிறது! அவர்களை நேரில் கண்டவர்கள் உண்டோ என்று நினையாதீர். பலர் நேரில் கண்டு களித்தார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
பகவானைக் காண்பதற்குத் தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்
கலிநிலைத்துறை
நரசிம்மனே இராமன்
328. கதிரா யிரமிரவி கலந்தெரித் தாலொத்த நீள்முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
அதிரும் கழற்பொருதோள் இரணிய னாகம் பிளந்துஅரியாய்
உதிர மளைந்தகையோ டிருந்தானை உள்ளவா கண்டாருளர்.
சனகனின் வேள்விச்சாலையில் இராமன்
329. நாந்தகம் சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்துபெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க
வேந்தர்தலைவஞ் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்.
கடற்கரையில் இராமன்
330. கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழிய
சிலையால் மராமர மெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
தலையால் குரக்கினம்தாங்கிச்சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்.
நப்பின்னைக்காக ஏழுவிடைகளையும் அடக்கிய கண்ணன்
331. தோயம் பரந்த நடுவுசூழலில் தொல்லை வடிவுகொண்ட
மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்
வீயப் பொருது வியர்த்துநின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.
ருக்மிணியைத் தேரேற்றிக் கொண்டு வந்த கண்ணன்
332. நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறு வாசகஞ் செய்யநின்ற திருமாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனை நடுவுபோர் செய்யச்சிக்கெனக் கண்டாருளர்
துவாரகையிலே அரியணையில் கண்ணன்
333. பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பௌவம் ஏறிதுவரை
எல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.
அருச்சுனன் தேர்மிசை நின்ற கண்ணன்
334. வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ள விடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்
ஆழிகொண்டு சூரியனை மறைத்த ஆயன்
335. நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே
நாழிகை போகப் படைபொருதவன் தேவகி தன்சிறுவன்
ஆழிகொண்டு அன்றுஇரவி மறைப்பச் சயத்திர தன்தலையை
பாழி லுருளப் படைபொருதவன் பக்கமே கண்டாருளர்.
பூமிப்பிராட்டியோடு வராகப் பெருமாள்
336. மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.
பரமனடி சேர்வர்
337. கரிய முகில்புரை மேனிமாயனைக் கண்ட சுவடுரைத்து
புரவி முகம்செய்து செந்நெலோங்கி விளைகழ னிப்புதுவை
திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.
(விவசாயம் செய்வோர் வெள்ளைப்பரிமுகரான ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவரைத் தியானம் செய்து, விதைகள் நட்டால் விளைவு மிகப் பெரிதாகக் கிட்டும்)
அடிவரவு: கதிர் நாந்தகம் கொலை தோயம் நீரேறு பொல்லா வெள்ளை நாழிகை மண்ணும் கரிய-அலம்பா
இரண்டாம் திருமொழி
2. அலம்பா வெருட்டா
தென்னாட்டைச் சிறக்க வைப்பவை இரண்டு மலைகள்! எம்பெருமாள் உவந்து எழுந்தருளி இருக்கும் மலைகள் இரண்டு மலைகள்! அவை திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை. திருமாலிருஞ்சோலைமலையில் சிலம்பாறு என்று ஓராறு ஓடுகிறது. அங்கே தேவமாதர்கள் வந்து நீராடுவார்கள். திருமாலிருஞ்சோலை
 இயற்கை எழிலைக் கொண்டது; யானைகள் நிரம்பியது. மலயத்துவச பாண்டியன்(தென்னன்) கொண்டாடி மகிழும் மலை திருமாலிருஞ்சோலையே என்கிறது இத்திருமொழி. திருமாலிருஞ்சோலையை அழகர்கோயில் என்பர்.
திருமாலிருஞ்சோலை மலைச் சிறப்பு
கலிநிலைத்துறை
சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலை
338. அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
குலம்பாழ் படுத்துக் குலவிளக் காய்நின்ற கோன்மலை
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்க ளாடும்சீர்
சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.
பல்லாண்டு ஒலி கேட்கும் திருமாலிருஞ்சோலை
339. வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித் தான்பொருந் தும்மலை
எல்லா விடத்திலும் எங்கும் பரந்துபல் லாண்டொலி
செல்லா நிற்கும் சீர்த்தென் திருமாலிருஞ் சோலையே.
செல்வன் வாழுமிடம் திருமாலிருஞ்சோலை
340. தக்கார்மிக் கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
எக்கால மும்சென்று சேவித் திருக்கும் அடியரை
அக்கா னெறியை மாற்றும் தண்மாலிருஞ் சோலையே.
கற்பகத்தேனாறு பாயும் திருமாலிருஞ்சோலை
341. ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை
வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி
தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.
கம்சனது யானையைக் கொன்றவன் மலை
342. ஒருவாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன் சென்றுறை யும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந் தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத் திரியும் தண்மாலிருஞ் சோலையே.
சாந்தணிதோள் சதுரன் இருக்குமிடம் திருமாலிருஞ்சோலை
343. ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை
சாவத் தகர்த்த சாந்தணி தோள்சது ரன்மலை
ஆவத் தனமென்று அமரர் களும்நன் முனிவரும்
சேவித் திருக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
பாண்டியன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை
344. மன்னர் மறுக மைத்துனன் மார்க்குஒரு தேரின்மேல்
முன்னங்கு நின்று மோழை யெழுவித்த வன்மலை
கொன்னவில் கூர்வேற் கோன்நெடு மாறன்தென் கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.
வண்டுகள் ஸஹஸ்ரநாமம் சொல்லும் மலை

345. குறுகாத மன்னரைக் கூடுகலக்கிவெங் கானிடைச்
சிறுகால்நெறியே போக்குவிக் கும்செல்வன் பொன்மலை
அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமம் சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.
திருமாலிருஞ்சோலை மலையின் இயற்கையழகு

346. சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலிகொடுத்து ஆவத் தனம்செய் அப்பன்மலை
இந்திர கோபங்கள் எம்பெரு மான்கனி வாயொப்பான்
சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே.
பிடியும் களிறும் திளைக்கும் திருமாலிருஞ்சோலை
347. எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
கண்ணன் கழலிணை காண்பர்
348. மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை
கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை
விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல்
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.
அடிவரவு: அலம்பா வல்லாளன் தக்கார் ஆனாயர் ஒரு ஏவிற்று மன்னர் குறுகாத சிந்த எட்டு மருத-உருப்பிணி
மூன்றாந் திருமொழி

3. உருப்பிணி நங்கை
திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அழகர். இவனே இராமன்; 
இவனே கண்ணன். அழகன் அமரும் மலை! அழகும் குளிர்ச்சியும் வெற்றியுமுடைய மலை. 
குறத்தியர் குறிஞ்சிப் பண்பாடிக் கோவிந்தனை மகிழ்விக்கும் மலை! அணி பணமாயிரங்களார்ந்த திருவனந்தன்மேல் படுத்திருக்கும் பெருமாள் ஆளும் மலை. வேதாந்த விழுப்பொருளாகிற 
அழகர் நிலைத்து வாழும் மலை.
திருமாலிருஞ்சோலையின் மாட்சி
கலி விருத்தம்
ருக்மிணிப் பிராட்டியை மீட்டவன் மலை
349. உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற
உருப்பனை யோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை
பொருப்பிடைக் கொன்றைநின்று முறியாழியும் காசும்கொண்டு
விருப்பொடு பொன்வழங்கும் வியன்மாலிருஞ் சோலையதே.
மணிவண்ணன் மலை திருமாலிருஞ்சோலை
 350. கஞ்சனும் காளியனும் களிறும்மரு தும்எருதும்
வஞ்சனை யில்மடிய வளர்ந்தமணி வண்ணன்மலை
நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி நளிர் மாமதியை செஞ்சுடர்
நாவளைக்கும் திருமாலிருஞ் சோலையதே.
பொன்னரிமாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை
351. மன்னு நரகன்தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்தகடல் வண்ணன்மலை
புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும்நின்று
பொன்னரி மாலைகள்சூழ் பொழில்மாலிருஞ் சோலையதே.
குறத்தியர் பண்பாடிக் கூத்தாடும் திருமாலிருஞ்சோலை
352. மாவலி தன்னுடைய மகன்வாணன் மகளிருந்த
காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும்மலை
கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலி பாடிநடம் பயில்மாலிருஞ் சோலையதே.
அழகன் அலங்காரன் மலை திருமாலிருஞ்சோலை மலை
353. பலபல நாழம்சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை
அலவலை மைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே.
வண்டுகள் பாடும் திருமாலிருஞ்சோலை மலை
354. பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்கு நூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்டகு வண்டினங்கள் பண்கள்பாடி மதுப்பருக
தோண்ட லுடையமலை தொல்லைமாலிருஞ் சோலையதே.
தெள்ளருவி பெருகும் மலை மாலிருஞ்சோலை மலை

355. கனங்குழை யாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழு வேற்றுவித்த எழில்தோள்எம் பிராமன்மலை
கனம்கொழி தெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்
இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ் சோலையதே
தேவர்கள் பிரதட்சிணம் செய்யும் மலை

356. எரிசித றும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலை வாயில்பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த
அரைய னமரும்மலை அமரரொடு கோனும்சென்று
திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ் சோலையதே.
விமலன் வாழும்மலை திருமாலிருஞ் சோலை
357. கோட்டுமண் கொண்டிடந்து குடங்கையில்மண் கொண்டளந்து
மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்மலை
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறையென்று
ஓட்டரும் தண்சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே.
அனந்தசயனன் ஆளும்மலை திருமாலிருஞ்சோலை

358. ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு

359. மாலிருஞ் சோலையென்னும் மலையையுடை யமலையை
நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.
அடிவரவு: உருப்பிணி கஞ்சன் மன்னு மாவலி பலபல பாண்டவர் கனம் எரி கோட்டு ஆயிரம் மாலிருஞ்சோலை- நாவகாரியம்
நான்காந் திருமொழி
4. நாவ காரியம்
திருக்கோட்டியூரை மங்களாசாஸனம் செய்கிறது இத்திரு மொழி! இங்கிருக்கும் எம்பெருமான் மிகக் கருணை கொண்டவன். சோலைகள் நிரம்பிய ஊர் இது. இங்கு வாழத் தவம் செய்திருக்க வேண்டும். திருக்கோட்டியூர் எம்பெருமானை நினையாதவர்கள், அவன் பெயரைச் சொல்லாதவர்கள் பாக்கியம் பெறாதவர்கள். அவனைப் போற்றுவோர் என் தலைவர்கள் என்கிறார் ஆழ்வார்.
மனம் வாக்கு காயம் ஆகியவற்றைக்கொண்டு திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும் அனுபவிக்காதவரை இழித்தும் கூறல்
சந்தக் கலி விருத்தம்
பாவாகாரிகளை எப்படிப் படைத்தான் பிரமன்?
360. நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார்
தேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர்
மூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாதஅப்
பாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ.
பகவானை நினையாதவர்கள் ஏன் பிறந்தனர்? 
361. குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனு கூலராய்
செற்றமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
துற்றியேழுல குண்டதூமணி வண்ணன்தன்னைத் தொழாதவர்
பெற்றதாயர் வயிற்றினைப்பெரு நோய்செய்வான்பிறந் தார்களே.
கை பெற்ற பயன் உணவு உண்ணவா?

362. வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.
பருகும் நீரும் உடுக்கும் உடையும் பாவம் செய்தனவோ!

363. உரகமெல்லணை யான்கையில் உறை சங்கம்போல்மட வன்னங்கள்
நிரைகணம்பரந் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர்
நரகநாசனை நாவிற்கொண்டழை யாதமானிட சாதியர்
பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ.
பூமிக்குப் பாரங்கள்

364. ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர் சாடிப்போய்
தீமைசெய்துஇள வாளைகள்விளை யாடுநீர்த்திருக் கோட்டியூர்
நேமிசேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை பூமிபாரங்க
ளுண்ணும்சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே.
பக்தர்களுடைய பாத தூளியின் சிறப்பு

365. பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்
ஏதமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
நாதனைநர சிங்கனைநவின் றேத்துவார்க ளுழக்கிய
பாததூளி படுதலால்இவ் வுலகம்பாக்கியம் செய்ததே.
என்ன தவம் செய்தார்களோ?

366. குருந்தமொன்றொசித் தானொடும்சென்று கூடியாடி விழாச்செய்து
திருந்துநான்மறை யோர்இராப்பகல் ஏத்திவாழ்திருக் கோட்டியூர்
கருந்தடமுகில் வண்ணனைக்கடைக் கொண்டுகைதொழும் பத்தர்கள்
இருந்தவூரி லிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய் தார்கொலோ.
செல்வநம்பியை அடிமை கொண்டவன்
367. நளிர்ந்தசீலன் நயாசல னபிமானதுங்கனை நாடொறும்
தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே.
பக்தர்கள் பகவானின் சின்னங்கள்
368. கொம்பினார்பொழில் வாய்குயிலினம் கோவிந்தன்குணம் பாடுசீர்
செம்பொனார்மதிள் சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர்
நம்பனைநர சிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான்தன சின்னங்கள்இவ ரிவரென்றுஆசைகள் தீர்வனே.
அன்னதான வள்ளல்கள் வாழுமிடம் திருக்கோட்டியூர்

369. காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு
தேசவார்த்தைப டைக்கும்வண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய்குற ளாஎன்று பேசுவார்அடி
யார்கள்எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.
இருடீகேசனுக்கு ஆளாவர்

370. சீதநீர்புடை சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர்
ஆதியானடி யாரையும்அடி மையின்றித்திரி வாரையும்
கோதில்பட்டர் பிரான்குளிர்புது வைமன்விட்டு சித்தன்சொல்
ஏதமின்றிஉ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே.
(இராமாநுஜரின் ஐந்து ஆசாரியர்களுள் திருக்கோட்டியூர் நம்பி ஒருவர். இராமநுஜர் 
இவரிடம் சரமச்லோகார்த்தம் கேட்டார். தகுதியுடையவர்களுக்குத் திருமந்திரப் பொருளை இராமாநுஜர் வெளியிட்ட இடமும் திருக்கோட்டியூரே.)
அடிவரவு: நாவகாரியம் குற்றம் வண்ணம் உரகம் ஆமை பூதம் குருந்தம் நளிர்ந்த கொம்பின் காசின் சீதநீர்-ஆசைவாய்.
ஐந்தாந் திருமொழி
5. ஆசைவாய்
ஒவ்வொருவரும் பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். நாள்தோறும் பகவந் நாமங்களைச் சொல்லுகிறவர்கள் பெரும் பயனடைவார்கள். அவர்கள் பெருமை அளவு கடந்தது. பகவந் நாமத்தைச் 
சொல்ல ஒரு காலத்தை எதிர்பார்க்க வேண்டா. உயிர் போகும் நேரத்தில் அவனை அழைக்கமுடியுமா? 
அவன் திருநாமத்தைச் சொல்லமுடியுமா? இப்போதே சொல்லுங்கள். இதயமாகிற கோயிலைக் கட்டி, 
அங்குப் பகவானை நிலைநிறுத்தி ஆர்வமாகிற மலரை இட்டு வணங்குங்கள் என்கிறார் ஆழ்வார்.
பகவானிடம் மனம் செலுத்தாமல் காலங்கடத்தும் மக்களுக்கு நல்லுரை கூறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கேசவா புருடோத்தமா என்று சொல்க
371. ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி அன்னை அத்தன்என் புத்திரர் பூமி
வாச வார்குழ லாளென்று மயங்கி மாளு மெல்லைக்கண் வாய்திற வாதே
கேச வாபுரு டோத்தமா என்றும் கேழ லாகிய கேடிலீ என்றும்
பேசு வாரவர் எய்தும் பெருமை பேசு வான்புகில் நம்பர மன்றே.
நமோநாரணா என்று கைகூப்பி வணங்கு

372. சீயினால் செறிந்தேறிய புண்மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்
வாயி னால்நமோ நாரணா வென்று மத்த கத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக்கொ டுக்கிலும் போகவொட் டாரே.
மனத்தில் மாதவனை நிலைநிறுத்து

373. சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
ஓம் என்ற பிரணவத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டிக் கூறு

374. மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல்மி டற்றினை உள்ளெழவாங்கி
காலுங் கையும் விதிர்விதிர்த் தேறிக் கண்ணு றக்கம தாவதன் முன்னம்
மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதி ராகில் விண்ண கத்தினில் மேவலு மாமே.
இருடீகேசனையே ஏத்திப் புகழ்
375. மடிவ ழிவந்து நீர்புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவ ழிவாரக் கண்ட மடைப்பக் கண்ணு றக்கம தாவதன் முன்னம்
தொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா சூலத் தால்உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவ ழியில்நீர் கூறையும் இழவீர் இருடீ கேசனென் றேத்தவல் லீரே.
இதயத்தில் மதுசூதனனை அமைத்து வழிபடு
376. அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டுல வும்கடற் பள்ளி மாய னைமது சூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்குஎன்றும் சாதிக்க லாமே.
மதுசூதனன் என்று அடிக்கடி கூறு
377. தென்ன வன்தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப் பின்முன் னாக இழுப்பதன் முன்னம்
இன்ன வன்இனை யானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி
மன்ன வன்மது சூதன னென்பார் வான கத்துமன் றாடிகள் தாமே.
கவுஸ்துபமுடைய கோவிந்தனோடு கூடியாடு

378. கூடிக் கூடிஉற் றார்கள் இருந்து குற்றம் நிற்கநற் றங்கள் பறைந்து
பாடிப் பாடிஓர் பாடையி லிட்டு நரிப்ப டைக்குஒரு பாகுடம் போலே
கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கௌத்து வமுடைக் கோவிந்த னோடு
கூடி யாடிய உள்ளத்த ரானால் குறிப்பி டம்கடந் துஉய்யலு மாமே.
செங்கண்மாலையே சுற்றமாகக் கொண்டு வாழ்

379. வாயொ ருபக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற
தாய்ஒ ருபக்கம் தந்தைஒரு பக்கம் தார மும்ஒரு பக்கம் அலற்ற
தீஓ ருபக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற
மாய்ஒ ருபக்கம் நிற்கவல் லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
தேவபிரானின் பக்தராக இருப்பர்
380. செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபி ரான்மேல்
பத்த ராயிறந் தார்பெறும் பேற்றைப் பாழித் தோள்விட்டு சித்தன்புத் தூர்க்கோன்
சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச் செய்த மாலை இவைபத்தும் வல்லார்
சித்தம் நன்கொருங் கித்திரு மால்மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே.
அடிவரவு: ஆசைவாய் சீயினால் சோர்வு மேல் மடி அங்கம் தென்னவன் கூடி வாய் செத்து- காசும்
ஆறாந் திருமொழி
6. காசும் கறையுடை
பகவந் நாமங்களைச் சொல்ல நேரம் இல்லையா! அப்படியானால் ஒன்று செய்யுங்கள்! உங்கள் 
குழந்தைகளுக்குப் பகவானின் பெயரை இடுங்கள். அவர்களை நீங்கள் அழைக்கும்போது, பகவான் 
தன்னையே அழைப்பதாக நினைக்கிறான். பெயரிட்ட தாய்தந்தையர்களும், பெயர் தாங்கிய குழந்தைகளும் நன்மை பெறுவார்கள் என்கிறது இத்திருமொழி.
மக்களுக்கு பகவானுடைய திருநாமங்களை இட்டழைக்குமாறு அறிவுரை கூறல்
கலிநிலைத்துறை
மகனுக்குக் கேசவன் என்றே பெயரிடுக
381. காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையி னால்அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ
நாயகன் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
மகனை சிரீதரா! என்றழை

382. அங்கொரு கூறை அரைக்கு டுப்பத னாசையால்
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்
செங்க ணெடுமால் சிரீதரா என்றுஅ ழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
பிச்சை புக்காகிலும் எம்பெருமான் திருநாமத்தையே இடு

383. உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய் வான்பிறர் பேரிட்டீர்
பிச்சைபுக் காகிலும் எம்பி ரான்திரு நாமமே
நச்சுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
மகனை மாதவா, கோவிந்தா என்றழை 

384. மானிட சாதியில் தோன்றிற்றுஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட் டால்மறு மைக்கில்லை
வானுடை மாதவா கோவிந் தாஎன்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
கோவிந்தன் என்று பெயரிட்டால் நரகமில்லை

385. மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர்மல வூத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட் டால்மறு மைக்கில்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
தாமோதரா என்று சொல்ல விரும்பு

386. நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராஎன்று
நாடுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
கருமுகில் வண்ணன் பெயரையே விரும்பு
387. மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுஅங்கு
எண்ணமொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
தாமரைக்கண்ணன் என்று பெயரிடுக
388. நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால்
நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
முகில்வண்ணன் பெயரை இடுக
389. ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்உங்கள்
மூத்திரப் பிள்ளையை என்முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
வைகுந்தத்தில் என்றும் இருப்பர்

390. சீரணி மால்திரு நாம மேயிடத் தேற்றிய
வீரணி தொல்புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி யொண்தமிழ் ஒன்பதோ டொன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே.
(பகவானின் பெயரை அனைவருக்கும் தம் குழந்தைகளுக்கு வைப்பதும், பெயரைக் குறைக்காமல் முழுப் பெயரோடு அழைப்பதும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் நலம்)
அடிவரவு: காசும் அங்கொரு உச்சி மானிடம் மலம் நாடு மண் நம்பி ஊத்தை சீரணி- தங்கையை.
ஏழாந் திருமொழி
7. தங்கையை மூக்கும்
வட நாட்டிலுள்ள திருப்பதிகளுள் கண்டமென்னும் கடிநகர் ஒன்று. இது கங்கைக் கரையிலுள்ளது. இங்கு புரு÷ஷாத்தமன் என்ற பெயரோடு பகவான் எழுந்தருளி இருக்கிறான். அவ்வூரின் பெருமைகளை இத்திருமொழி கூறுகிறது. பகவானைக் காட்டிலும் அவன் வாழும் திவ்யதேசமே அடியார்களுக்குப் பெரும்பேறு அளிக்கவல்லது. வட மதுரை, சாளக்கிராமம், ஸ்ரீவைகுண்டம், துவாரகை, அயோத்தி முதலிய தலங்களில் வாழும் எம்பெருமானே இவ்வூரில் வாழ்கிறான். இவனை வணங்கி உய்வு பெறுவீர்களாக என்கிறார் ஆழ்வார்.
தேவப்ராயாகை என்று வழங்கப்படும் கண்டமென்னும் கடிநகரின் பெருமை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
புருடோத்தமனின் இருக்கை கண்டங் கடிநகர்
391. தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே.
எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தமே கங்கை

392. சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
அசுரர்களை அழித்தவனின் இருக்கை கண்டமென்னும் கடிநகர்
393. அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
நம் புருடோத்தமன் நகர்
394. இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
பாவத்தை அழிக்கும் கங்கை

395. உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
அருந்தவ முனிவர் ஸ்நானம் செய்யும் கங்கை

396. தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
மால்புருடோத்தமன் வாழ்வு கண்டமென்னும் கடிநகர்

397. விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி
மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
வேள்விப் புகை கமழும் கண்டங் கடிநகர்

398. திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே.
கடலைக் கலக்கும் கங்கை

399. வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
பிரணவத்தினால் சொல்லப்படுகிறவன் புருடோத்தமன்

400. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
கங்கையில் நீராடிக் கைங்கர்யம் செய்த பயன்
401. பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே.
அடிவரவு: தங்கையை சலம் அதிர் இமையவர் உழுவதோர் தலை வில் திரை வடதிசை மூன்று பொங்கு- மாதவத்தோன்.
எட்டாந் திருமொழி
8. மாதவத்தோன்
ஆழ்வார் திருவரங்கத்தே கங்கையின் புனிதமாய காவிரியின் நடுவில் சயனித்திருக்கும் நம்பெருமாளிடம் ஈடுபடுகிறார். இவனே கண்ணன்; ஆசார்ய பக்தி கொண்டவன்; பார்த்தஸாரதியாக இருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியவன். இவனே எல்லா அவதாரங்களையும் மேற்கொண்டவன். குளிர்ந்த சோலைகள் நிரம்பியது திருவரங்கம். தென்றல் தவழும் இடம்; வண்டுகளும் பகவானின் குணங்களைப் பாடுமிடம் திருவரங்கம் என்கிறார்!
திருவரங்கம் பெரிய கோயிலின் மகிமை
தரவு கொச்சகக் கலிப்பா
சாந்தீபினியின் மகனைப் கொடுத்தவனூர் அரங்கம்
402. மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்
போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே.
ஸ்ரீவைஷ்ணவர் வாழுமிடம் திருவரங்கம் 
403. பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.
பரீக்ஷித்தைப் பிழைப்பித்தவன் வாழுமிடம் திருவரங்கம்

404. மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.
இராக்கதரை அழித்தவனூர் திருவரங்கம் 
405. கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே.
இராவணனைக் கொன்றவனூர் திருவரங்கம்
406. பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண்
பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.
அசுரர்களை ஆழியால் அழித்தவனூர் திருவரங்கம்

407. கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.
காவிரி அரங்கனின் அடிதொழுமிடம் திருவரங்கம்

408. கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.
வண்டுகள் மல்லிகை வெண்சங்கூதும் மதிலரங்கம்

409. வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி
மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே.
நீலநிற நெடுமால் ஊர் ஸ்ரீரங்கம்

410. குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல்
குரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.
திருவரங்கன் புகழ் பாடுவோர்க்கு யாம் அடியேம்
411. பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.
அடிவரவு: மாதவத்தோன் பிறப்பு மருமகன் கூன் பெருகீழுலகில் கொழுப்பு வல்லெயிற்று குன்று பரு-மரவடியை.
ஒன்பதாந் திருமொழி
9. மரவடியை
அடியார்களின் அன்பன் அரங்கன்; அவர்கள் குற்றம் செய்தாலும் அதைக் குற்றமாகவே நினைக்கமாட்டான்; குற்றம் செய்தான் என்று பிராட்டியே கூறினாலும் ஒப்புக் கொள்ள மாட்டான். இவனே ரக்ஷகன். இவனே எல்லா அவதாரங்களையும் மேற்கொண்டவன். அருமைத் தம்பியான பரதனுக்கு எல்லாம் அருளவல்ல பாதுகைகளை நம்பிக்கைக்காக இராமன் அளித்துச் சென்றானே! என்ன பரிவு! அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் இவனே! இவன் வாழுமிடம் திருவரங்கம்.
திருவரங்கத் திருப்பதி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இரமான் கோயில் கொண்ட இடம் ஒளியரங்கம்
412. மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழ
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந் துலகாண்ட திருமால் கோயில்
திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கு மொளிய ரங்கமே
அடியார்மீது நம்பிக்கை கொண்டவன் அரங்கன்
413. தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல்
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிலிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க் காளா வாரே!
அடியவரை ஆட்கொள்வான் ஊர் அணியரங்கம்
414. கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடையவிட் டோசை கேட்டான்
இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூ டேற்றிவைத் தேணி வாங்கி
அருள்கொடுத்திட் டடியவரை யாட்கொள்வான் அமருமூ ரணிய ரங்கமே
துவராபதி மன்னன்  மன்னுமிடம் புனலரங்கம்
415. பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரை யென்னும்
மதில்நாய யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்
புதுநாண் மலர்க்கமல மெம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான்
பொதுநா யகம்பாவித் திறுமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே.
பறவைகள் கருடனின் புகழ் கூறும் இடம் திருவரங்கம்
416. ஆமையாய்க் கங்கையா யாழ்கடலாய் அவனியா யருவ ரைகளாய்
நான்முகனாய் நான் மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானு மானான்
சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்தறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனல ரங்கமே
யாவரும் தொழுமிடம் திருவரங்கம்
417. மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித் தவர்களையே மன்ன ராக்கி
உத்தரைதன் சிறுவனையு முயக்கொண்ட உயிராள னுறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவாகளும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய் நிற்கின்ற திருவ ரங்கமே
அரவணையின் செழுமணிகள் ஒளிரும் இடம் அரங்கம்
418. குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி யரசு வாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்
எறிப்புடைய மணிவரைமே லிளஞாயி றெழுந்தாற்போ லரவ ணையின்வாய்
சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே
இரணியனைப் பிளந்தவன் இடம் தண்ணரங்கம்
419. உரம்பற்றி யிரணியனை யுகிர்நுதியால் ஒள்ளியமார் புறைக்க வூன்றி
சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க வாயலறத் தெழித்தான் கோயில்
உரம்பெற்ற மலர்க்கமல முலகளந்த சேவடிபோ லுயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணங்கும் தண்ண ரங்கமே
தசாவதாரம் எடுத்தவன் கோயில் புனலரங்கம்
420. தேவுடை மீனமா யாமையாய் ஏனமா யரியாய்க் குறளாய்
மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி யூச லாடி
பூவணைமேல் துதைந்தெழுசெம் பொடியாடி விளையாடும் புனல ரங்கமே
திருவாளன் கண்வளரும் இடம் திருவரங்கம்
421. செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செய்யும் நாந்தக மென்னும்
ஒருவாளன், மறையாள னோடாத படையாளன் விழுக்கை யாளன்
இரவாளன் பகலாள னெனையாளன் ஏழுலகப் பெரும்புர வாளன்
திருவாள னினிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவ ரங்கமே
எம்பெருமான் இணையடிக்கீழ் இருப்பர்
422. கைந்நாகத் திடர்கடித்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்ப தியின் மேல்
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்ததமி ழுரைக்க வல்லார்
எஞ்ஞான்று மெம்பெருமா னிணையடிக்கீழ் இணைபிரியா திருப்பர் தாமே
அடிவரவு: மரவடியை தன்னடியார் கருள் பதினாறு ஆமை மைத்துனன் குறள் உரம் தேவுடைய செரு கைந்நாகத்து-துப்பு
பத்தாந் திருமொழி
10. துப்புடையாரை
ஒவ்வொருவரும் புண்ணிய பாவ பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். பாவம் செய்யும்போது கேட்பதில்லை; சொல்வதில்லை; பயப்படுவதில்லை. நகரத்தை நினைக்கும்போதுதான் பயமாக இருக்கிறது. பகவானின் திருநாமங்களைச் சொன்னால் என்ன? அவனை நினைத்தால் என்ன! உயிர் போகும் நேரத்தில் முடியுமா? உடல் நன்றாக இருக்கும்போதே அவனை நினையுங்கள் வராகாவதாரத்தில் அவன் பிராட்டிக்குச் சொன்னப்படி உங்களைக் காத்தே தீர்வான். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வாரும் அரங்கனிடம் வேண்டுகிறார்.
அரவணைப்பள்ளிகொள் அரங்கனைப் போற்றல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
423. துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
யான் சாகும்பொழுது என்னைக் குறிக்கொள்

424. சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள்
போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
அல்லல் படாவண்ணம் காத்திடு

425. எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
மூன்றெழுத்தாய முதல்வனே! என்னைக் காத்திடு
426. ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
காலனையும் படைத்தவனே! என்னைக் காத்திடு
427. பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய்
ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும்

428. தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
அஞ்சல் என்று என்னைக் காத்திடு

429. செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே
எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா
வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது
அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
மதுரைப் பிறந்த மாமாயனே! என்னைக் காத்திடு
430. நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னேஎன்
ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
ஆதியஞ்சோதியே! என்னைக் காக்கவேண்டும்
431. குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே
அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன்
நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
தூயமனம் தூமணிவண்ணனுக்கு ஆளாக்கும்
432. மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும்
ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே.
அடிவரவு: துப்பு சாமிடத்து எல்லை ஒற்றை பை தண்ணென செஞ்சொல் நான் குன்று மாயவனை-வாக்கு.

ஐந்தாம் பத்து
1. வாக்குத்தூய்மை
மனம், வாக்கு, உடல் ஆகிய திரிகரணங்களையும் பகவானிடம் ஈடுபடுத்தவேண்டும். மனம் பகவானையே நாடவேண்டும். சொல் அவனைப் பற்றியதாகவே இருக்கவேண்டும். நாக்கு அவனையே கூறவேண்டும்; திருமந்திரத்தையே சொல்லவேண்டும்; அவனையே துதிக்கவேண்டும். ஆனால் நாக்கு அதற்கு இடம் கொடுக்காது, சுவையைக் காட்டித் தகாத இடத்தில் இழுத்துச் செல்லும். அதன் தன்மையை நினைக்காமல் அதை அடக்கிப் பகவான் நாமங்களையே கூற வேண்டும். கூறப்படும் சொல் எப்படிப்பட்டது என்று பகவான் நினைக்கிறானே தவிர எவ்விடத்திலிருந்து தம்மைப்பற்றிய சொல் வருகிறது என்று நினைப்பதில்லை. குற்றம் நிறைந்த சொல்லாயினும் அதை நற்றமாகவே பகவான் ஏற்கிறான்.
நைச்சியானுசந்தானம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் பெரியோர்
433. வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று
மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.
தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடமை

434. சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்துகை யானே பிழைப்ப
ராகிலும் தம்மடி யார்சொல் பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே விழிக்கும்
கண்ணிலேன் நின்கண்மற் றல்லால் வேறொ ருவரோடு என்மனம் பற்றாது
உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே.
உன் கோயிலில் வாழும் மிடுக்கே பெருமை
435. நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நார ணாஎன்னும் இத்தனை யல்லால்
புன்மை யால்உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வா னன்றுகண் டாய்திரு மாலே
உன்னு மாறுஉன்னை ஒன்றும் அறியேன் ஓவா தேநமோ நாரணா என்பன்
வன்மை யாவதுஉன் கோயிலில் வாழும் வைட்ட ணவனென்னும் வன்மைகண் டாயே.
அடியேனைக் குடிமை கொள்க

436. நெடுமை யால்உல கேழு மளந்தாய் நின்ம லாநெடி யாய்அடி யேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறுஇவை வேண்டுவ தில்லை
அடிமை யென்னுமக் கோயின்மை யாலே அங்கங் கேஅவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்றுநின் தாதை கோத்த வன்தளை கோள்விடுத் தானே.
எல்லா இடங்களிலும் உன்னையே காண்கிறேன்
437. தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடவை யும்கிண றும்இவை யெல்லாம்
வாட்ட மின்றிஉன் பொன்னடிக் கீழே வளைப்ப கம்வகுத் துக்கொண் டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடுஎனக்கு அரிது நச்சு வார்பலர் கேழலொன் றாகி
கோட்டு மண்கொண்ட கொள்கையி னானே குஞ்ச ரம்வீழக் கொம்பொசித் தானே.
நின் திருவடிகளை நினைக்காத நாளே பட்டினி நாள்

438. கண்ணா நான்முக னைப்படைத் தானே கார ணாகரி யாய்அடி யேன்நான்
உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை ஓவா தேநமோ நாரணா வென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுஉன் பாதம்
நண்ணா நாள்அவை தத்துறு மாகில் அன்றுஎ னக்குஅவை பட்டினி நாளே.
உன்னை அடையும் வழி கூறு

439. வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை மெத்தை யாகவிரித்து அதன்
மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காண லாங்கொல்என் றாசையி
னாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்க ளாய்கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான்உன்னைத் தத்துறு மாறே.
உன்னையே புகழுமாறு அருள் செய்
440. வண்ண மால்வரை யேகுடை யாக மாரி காத்தவ னேமது சூதா
கண்ண னேகரி கோள்விடுத் தானே கார ணாகளி றட்டபி ரானே
எண்ணு வாரிட ரைக்களை வானே ஏத்த ரும்பெருங் கீர்த்தியி னானே
நண்ணி நான்உன்னை நாள்தொறும் ஏத்தும் நன்மை யேஅருள் செய்எம்பி ரானே.
எம்பிரானே! இடரைக் களையாய்
441. நம்ப னேநவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய்
உம்பர் கோனுல கேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழிமுன் னேந்தி
கம்ப மாகரி கோள்விடுத் தானே கார ணாகட லைக்கடைந் தானே
எம்பி ரான்என்னை யாளுடைத் தேனே ஏழை யேனி டரைக்களை யாயே.
நாரணன் உலகை அடைவர்

442. காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன்
வாம னன்என் மரகத வண்ணன் மாத வன்மது சூதனன் தன்னை
சேம நன்கம ரும்புது வையர்கோன் விட்டு சித்தன் வியந்தமிழ் பத்தும்
நாம மென்று நவின்றுரைப் பார்கள் நண்ணு வார்ஒல்லை நாரண னுலகே.
அடிவரவு: வாக்கு சழக்கு நன்மை நெடுமையால் தோட்டம் கண்ணா வெள்ளை வண்ணம் நம்பனே காமர்- நெய்க்குடத்தை.
இரண்டாம் திருமொழி
2. நெய்க்குடத்தை
வாத பித்த ச்லேஷ்மங்கள் நிரம்பிய இவ்வுடல் நோய்களுக்கு இருப்பிடம். நோய்கள் மனிதனை வசப்படுத்திக்கொள்கின்றன. யாகயக்ஞாதிகளுக்காக வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் மொய்த்துக்கொண்டு அக்குடத்தையே தன் வசமாக்கிக் கொள்ளவில்லையா!
நோய்களே, உங்களுக்கு ஒரு அறிவுரை! நீங்கள் இனி என்னை ஒன்றும் செய்யமுடியாது. முன்பு இவ்வுடல் என்னுடையதாக இருந்தது. இப்போது பகவான் இதைத் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டுவிட்டான்; 
அவனுடைய பாதுகாப்பில் இருக்கிறது! அவனே என் உள்ளத்தில் வந்து தங்கி இருக்கிறான். இனி உங்களை இருக்கவொட்டான். ஓடிப் போய்விடுங்கள் என்கிறார் ஆழ்வார். இப்பத்துப் பாசுரங்களையும் நாள்தோறும் சொல்லுகிறவர்கள் நோய்களிலிருந்து விடுபடுவர். மருத்துவனாகிய எம்பெருமான் ரக்ஷிப்பான் என்பது 
திண்ணம்.
அரவணையாதியான் காப்பாற் பிணிபோக்கல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நோய்களே! ஓடி விடுங்கள்
443. நெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெறஉய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.
முதல்வன் காவலால் இயம தூதர்கள் ஓடிவிட்டனர்

444. சித்திர குத்த னெழுத்தால் தென்புலக் கோன்பொறி யொற்றி
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன்மூதறி வாளர் முதல்வன்
பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே.
என்னைப் பயிற்றிப் பணி செய்யக்கொண்டான்
445. வயிற்றில் தொழுவைப் பிரித்துவன்புலச் சேவை யதக்கி
கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.
நோய்காள்! என்னிடம் புகாதீர்கள்
446. மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப் படாதுஉய்யப் போமின்பண்டன்று பட்டினம் காப்பே.
என் மனத்தில் உள்ளான்
447. மாணிக் குறளுரு வாய மாயனை என்மனத் துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண் டேன்பிறி தின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்க ளுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.
தீவினைகளே! நடமின்

448. உற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.
கடல்வண்ணன் என் வல்வினைகளை மாற்றிவிட்டான்
449. கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்துழல் வேனை
வங்கக் கடல்வண் ணன்அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படாவண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே.
என் சென்னியில் பாத இலச்சினை வைத்துவிட்டார்
450. ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்துஎன் னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமலவன் னெஞ்சம் புகுந்தும்என் சென்னித் திடரில்
பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே.
பஞ்ச ஆயுதங்களே! காவலர்களே! உறங்கவேண்டா

451. உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.
பள்ளி கொள்கிற பிரான் உறையும் இடம் இச்சரீரம்

452. அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை
பரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே.
(இப்பத்துப் பாசுரங்களையும் நாள்தோறும் சொல்லுகிறவர்கள் நோய்களிலிருந்து விடுபடுவர். மருத்துவனாகிய எம்பெருமான் ரக்ஷிப்பான் என்பது திண்ணம்.)
அடிவரவு: நெய்க்குடத்தை சித்திரகுத்தன் வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதங்கள் உறகல் அரவத்து-துக்க
மூன்றாந் திருமொழி
3. துக்கச் சுழலையை
திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் அழகர் என்ற திருநாமம் பெற்றவர். 
கண்ணனே அழகர்! பெரியாழ்வாருக்குக் கண்ணனிடம் மிக்க ஈடுபாடு. அழகரின் சவுந்தர்யமும், மாலிருஞ்சோலை மலையும் ஆழ்வாரின் திருவுள்ளத்தைக் கவர்ந்தன. ஆழ்வாரிடம் வந்த 
எம்பெருமான் சென்று வருகிறேன் என்றான். நீ கிடைத்தற்கு அரியன்! என்னைக் காக்க நீயாகவே 
வந்து என் உள்ளத்தில் தங்கினாய்! அப்படிப்பட்ட உன்னைப் போகவிடுவதுண்டோ? வளைத்து வைத்தேன்; 
இனிப் போகலொட்டேன் என்கிறார் ஆழ்வார்! பகவானே யார்தான் விடுவார்? பகவானுக்கு அமுது செய்வித்தே உண்ண வேண்டும் என்றும் கூறுகிறது(இத்திருமொழி) மூன்றாம் பாசுராம்.
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தேவகி வயிற்றில் பிறந்தவனே! உன்னைக் கண்டுகொண்டேன்
453. துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண் டேன்இனிப் போகவிடுவதுண்டே
மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன்வயிற்றில்
சிக்கென வந்து பிறந்துநின் றாய்திரு மாலிருஞ்சோலை யெந்தாய்.
எந்தையே! இனி உன்னை போகலொட்டேன்
454. வளைத்துவைத் தேன்இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின்திரு வாணைகண் டாய்நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை
அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
உன் பொன்னடி வாழ்க
455. உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடை யேன்இனிப் போய்ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கைநின் சாயை யழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று
இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
உன் பாதநிழலே என் உயிர்ப்பிடம்

456. காதம் பலவும் திரிந்துழன் றேற்குஅங்கோர் நிழலில்லை நீருமில்லைஉன்
பாத நிழலல்லால் மற்றோ ருயிர்ப்பிடம் நான்எங்கும் காண்கின்றிலேன்
தூதுசென் றாய்குரு பாண்டவர்க் காய்அங்கோர் பொய்சுற்றம் பேசிச்சென்று
பேதஞ்செய்து எங்கும் பிணம்படுத்தாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.
என் மனம் உன்னையே நினைக்கும்

457. காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிகுரல்
மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா
மாலுக ளாநிற்கும் என்மன னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்
சேலுக ளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
பிறவி நோய்க்கு மருந்தளிக்கும் மருத்துவன்

458. எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திர னும்மற்றும்
ஒருத்தரும் இப்பிற வியென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை
மருத்துவ னாய்நின்ற மாமணி வண்ணா மறுபிற விதவிரத்
திருத்திஉங் கோயிற் கடைப்புகப் பெய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
அஞ்சேலென்று எனக்கு அருள்செய்வாய்

459. அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய்
சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்
எந்தாய்! என்சித்தம் நின்பாலது
460. எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளையென்றே
இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் இனிஉன்னைப் போகலொட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவ ரைக்கெடுத்தாய்
சித்தம்நின் பால தறிதியன் றேதிரு மாலிருஞ் சோலையெந்தாய்.
உன்னை இனிப் போகவிடமாட்டேன்
 
461. அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்ய லுற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போகவிடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக் கரமதனால்
தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.
உலகமளந்தான் உறவினராவர்

462. சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்
பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன்
ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே.
அடிவரவு: துக்க வளைத்து உனக்கு காதம் காலும் எருத்து அக்கரை எத்தனை அன்று சென்று-சென்னி
நான்காந் திருமொழி
4. சென்னியோங்கு
உலகிற்கு உதவுவதற்காகவே பகவான் அவதாரங்களை மேற்கொள்கிறான்; அதர்மத்தை அழிக்கிறான். 
தர்மத்தை ரக்ஷிக்கிறான்; நல்லவர்களை ரக்ஷிக்கிறான். அவதாரக் காலங்களில் உதவி 
பெறாதவர்களுக்கெல்லாம் உதவுவதற்காகவே அர்ச்சாவதாரம்! திருமலையில் நிற்பதும் அதற்காகவே
இதயத்துள் நிறைந்து எம்பிரான் மலர்ந்தமை
கலி விருத்தம்
நின்னருளே புரிந்திருந்தேன்
463. சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும்
என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே.
அறிவை என்னும் அமுத ஆறு
464. பறவையேறு பரம்புருடா நீஎன்னைக் கைக்கொண்டபின்
பிறவியென்னும் கடலும்வற்றிப் பெரும்பத மாகின்றதால்
இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
நான் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்?

465. எம்மனாஎன் குலதெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்
நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.
கொடுமை செய்யும் கூற்றமும் என்னிடம் வராது

466. கடல்கடைந்து அமுதம்கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்
உடலுருகி வாய்திறந்து மடுத்துஉன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும் கூற்றமும்என் கோலாடி குறுகப்பெறா
தடவரைத்தோள் சக்கரபாணீ சார்ங்கவிற் சேவகனே.
இருடீகேசன் என் உயிர்க்காவலன்

467. பொன்னைக்கொண்டு உரைகல்மீதே நிறமெழ வுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பாஎன் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே.
உன் விக்கிரமங்களை என் நெஞ்சில் எழுதிக்கொண்டேன்
468. உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழி யாமல்எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட இராமநம்பீ
என்னிடைவந்து எம்பெருமான் இனியெங்குப் போகின்றதே.
உன் சேவடியை என்தலைமேல் பொறித்தாய்

469. பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல்
திருப்பொலிந்த சேவடிஎஞ் சென்னியின் மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்றுஉன் வாசகமே
உருப்பொலிந்த நாவினேனை உனக்குஉரித் தாக்கினையே.
என்னிடம் வந்து தங்கி என்னை வாழச்செய்தாய்
470. அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன்
மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்
நினைந்துஎன்னுள் ளேநின்று நெக்குக்கண்கள் அசும்பொழுக
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன் நேமி நெடியவனே.
என்னை உனக்கு உரித்தாக்கினாய்
471. பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று
உனக்கிடமா யிருக்கஎன்னை உனக்குஉரித் தாக்கினையே.
என்பால் இடவகை கொண்டனையே
472. தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ
வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே.
அணுக்கர் ஆவர்

473. வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித் தன்மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றை அமரர்கோவை அந்தணர்த மமுதத்தினை
சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.
அடிவரவு: சென்னி பறவை எம்மனா கடல் பொன்னை உன் பருப்பதத்து அனந்தன் பனி தடவரை வேயர்-மார்கழி
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.


ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை



திருப்பாவைத் தனியன்கள்
பட்டர் அருளிச்செய்தது
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய
உய்யக் கொண்டார் அருளியவை
நேரிசை வெண்பா
அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை,
பாடி யருளவல்ல பல்வளையாய்,-நாடிநீ
வேங்கடவற் கென்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
பெரியாழ்வார் திருமகளார் ஆண்டாள். பெரியாழ்வாருக்குக் கண்ணன்மீது ஆசை. அதைவிட மிகுதியான ஆசை ஆண்டாளுக்கு. கண்ணனையே மணாளனாகப் பெற ஆசைப்பட்டாள். அவனுக்குக் குற்றேவல் அந்தரங்கக் கைங்கர்யம் செய்ய விரும்பினாள். கைங்கர்யமே சிறந்த புருஷார்த்தம். அதுவே நீங்காத செல்வம். அவனுக்குக் கைங்கர்யம் செய்ய நினைப்பதும் செய்வதும் அவனுடைய அருளால்தான். ஸ்ரீமத் நாராயணனே நமக்குக் கைங்கர்ய செல்வம் தருவான் என்பதை ஆண்டாள் அறுதியிட்டு அனைவரையும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறாள். பக்தர்கள் திருப்பாவையையேனும் அறிந்து தினமும் அனுஸந்திக்க வேண்டும்.
இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா
நாராயணனே பறை தருவான்
474. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
நோன்பு நோற்போர் மேற்கொள்ள வேண்டியவை

475. வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
உத்தமன் பேர்பாட நீங்காத செல்வம் நிறையும்
476. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
யாங்கள் வாழ மழைபொழியச் செய்

477. ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று
அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
தாமோதரனைச் சொல்லு

478. மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
அரி என்று எங்கும் பேரொலி

479. புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பொழுது புலர்ந்து விட்டதே! எழுந்திரு
480. கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பாவாய்! எழுந்திரு

481. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
மாதவன் திருநாமங்களைச் சொல்

482. தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
பறைதரும் புண்ணியன் நாராயணன்
483. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
யாவரும் வந்தனர்: நீ எதற்காக உறங்குகிறாய்?
484. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
மனத்துக்கு இனியவனைப் பாடுகிறோமே! நீயும் வா

485. கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பிள்ளைகள் யாவரும் வந்தனர்: நீயும் நீராட வா
486. புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
எங்களை எழுப்புவதாக அன்றோ நீ சொன்னாய்!

487. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
நீயும் வந்து மாயனைப்பாடு
488. எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
திருப்பள்ளி எழுச்சி பாடவா
489. நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
யாவரும் உறங்காது எழுமின்
490. அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
நப்பின்னை நங்காய்! மகிழ்ந்து வந்து கதவைத்திற

491. உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
தத்துவமன்று! வாய் திற
492. குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
விமலா? நப்பின்னை நங்காய்! எழுந்திருங்கள்

493. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
போற்றிப் புகழ்ந்து வந்தோம்! துயிலெழாய்
494. ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
கண்கள் இரண்டும் கொண்டு எங்களை நோக்கு
495. அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க
496. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
உன் சேவகம் போற்றி வந்தோம்! இரங்கு
497. அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
நெடுமாலே! பறை தருதி
498. ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆலினிலையாய்! அருள்
499. மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
பறைதருக; யாங்கள் சன்மானம் பெறுவோம்
500. கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
உறவை ஒழிக்கமுடியாது

501. கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
உனக்கே நாம் ஆட்செய்வோம்

502. சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய்
503. வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
அடிவரவு : மார்கழி வையத்து ஓங்கி ஆழி மாயனை புள்ளும் கீசு கீழ்வானம் தூமணி நோற்று கற்று கனைத்து புள்ளின் உங்கள் எல்லே நாயகன் அம்பரம் உந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்தி மாலே கூடாரை கறவை சிற்றம் வங்கம்-தை.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நாச்சியார் திருமொழி தனியன்கள்
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது...நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில்-மெல்லியலாள்
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயன்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள், தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலைத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி, அவள் தூநற் பாதம் துணைநமக்கே
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
1. தையொரு திங்கள்
கண்ணனை அடையவேண்டும் என்று ஆண்டாள் விரும்பினாள். மார்கழி மாதம் முழுதும் நோன்பு நோற்றாள். அவன் வரவில்லை. அவனை அடைந்தே தீர்வது என்று தீர்மானித்தாள். நல்ல பயனை யாரைக்கொண்டு அடைந்தால் என்ன? பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவன் மன்மதன். அவன் உதவியை நாடுகிறாள். நீ என்னைக் கண்ணனோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். அவனைக் குறித்து நோன்பு நோற்கிறாள் காமனைக் கொண்டு காமனைப் பயந்த காளையான கண்ணனை அடைய விரும்புகிறாள்.
கண்ணன் இணக்கு எனக் காமனைத் தொழுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காமனே! வேங்கடவற்கு என்று என்னை விதி
504. தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
புள்வாய் பிளந்தவனை அடைய எனக்கு உதவு
505. வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில்
புகவென்னை யெய்கிற்றியே
வேங்கடவாணனென்னும் விளக்கினில்புக எனக்கு உதவு
506. மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துக் கொண்டேன்
507. சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்
508. வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே
கமலவண்ணன் என்னை நோக்குமாறு அருள்
509. உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டுவைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய்
திரிவிக்கிரமன் என்னைத் தொடுமாறு அருள்
510. காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
கேசவனின் கால்பிடிக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடு
511. மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்
கடல்வண்ணனுக்கே பணிசெய்து வாழ்வேன்
512. தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்
அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு
மதுவுனக் குறைக்குங்கண்டாய் உழுவதோ
ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே
வைகுந்தப் பதவி அடைவர்
513. கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்தங்கோர் கரியலற
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே
அடிவரவு: தை வெள்ளை மத்தம் சுவரில் வான் உருகாயுடைய மாசு தொழுது கருப்பு-நாமமாயிரம்
2. நாமமாயிரம்
மன்மதன் வரும் காலம் பங்குனி மாதம். அவன் வருகைக்காக ஆயர் பெண்கள் வீதிகளை அழகு மிளிரச் செய்கிறார்கள்; கோலமிடுகிறார்கள்; மணலாலும், மற்றப் பொருள்களாலும் மிகச் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கிறார்கள். கண்ணன் விரைவாக வந்து அவற்றை அழிக்க முயல்கிறான். கண்ணா! நாங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறாய். உன் முகத்தைக் காட்டுகிறாய்! புன்முறுவல் செய்கிறாய்! எங்கள் சிற்றிலையும் அழிக்கிறாய், நெஞ்சையும் அழிக்கிறாய்! இது நியாயமா? என்று கூறுகிறார்கள்.
சிறுமியர் மாயனைத் தம் சிற்றில் சிதையேல்! எனல்
கலி விருத்தம்
நாராயணா! எங்கள் சிற்றிலைச் சிதையாதே
514. நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமே
காமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும் சிரீதராஎங்கள் சிற்றில்வந்து சிதையேலே
எங்கள்மீது ஏன் இரக்கம் உண்டாகவில்லை?
515. இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே
ஆனைகாத்தவனே! அருளாய்
516. குண்டுநீருறை கோளரீமத யானைகோள்விடுத் தாய்உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம்
தெண்டிரைக்கடற் பள்ளியாய்எங்கள் சிற்றில்வந்து சிதையேலே
கண்ணா! உன்முகம் மாயமந்திரமோ!
517. பெய்யுமாமுகில் போல்வண்ணாஉன்றன் பேச்சும்செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
எங்கள் உள்ளம் உன்னை நோக்கியே ஓடுகிறது
518. வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே
இலங்கையை அழித்தவனே! எம்மைத் துன்புறுத்தாதே
519. முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.
யாங்கள் சிறுமியர்: எங்களை ஏன் துன்புறுத்துகிறாய்?
520. பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்
ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
எங்களைத் துன்புறுத்துவதால் உனக்கு என்ன பயன்?
521. வட்டவாய்ச்சிறுகாதையோடு சிறுசுளகும்மணலுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரங்கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை அறிதியேகடல்கண்ணனே.
சிற்றிலும் சிதைப்பான், சிந்தையும் சிதைப்பான் கோவிந்தன்
522. முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்எம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்
குறை நீங்கி வைகுந்தம் அடைவர்
523. சீதைவாயமுதமுண்டாய் எங்கள்சிற்றில்நீசிதையேலென்று
வீதிவாய்விளையாடும் அயர்சிறுமியர்மழலைச்சொல்லை
வேதவாய்த்தொழிலாளர்கள்வாழ் வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன்றன்
கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறைவின்றிவைகுந்தஞ்சேர்வரே.
(சிறுமியர் கடற்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ சென்றால் மணலைக் குவித்து அதில் வாயில்கள் வைத்து விளையாட்டு(மேடுகள்) வீடுகள் அமைப்பது வழக்கம். இதைச் சிற்றில் (சிறுமை+இல்) என்று கூறவர்.)
அடிவரவு: நாமம் இன்று குண்டு பெய் வெள்ளை முற்றிலாத பேதம் வட்ட முற்றத்தூடு சீதை-கோழி.
3. கோழியழைப்பதன்
ஆயர் பெண்கள் கோழி கூவும் முன்பே (விடியற்காலையில்) எழுந்தார்கள். நீராடுவதற்கு அருகிலுள்ள பொய்கைக்குச் சென்றனர். உறங்கும் கண்ணன் சூரியன் உதிக்கும்முன்பு எழுந்திருக்கமாட்டான் என்று நினைத்தனர். ஆனால், கண்ணன் கோபியர் வருவதற்குமுன்பே அங்கு வந்து மறைந்திருந்தான்; இவர்களது சேலைகளைக் கவர்ந்துகொண்டான்; அருகில் இருந்த குருந்த மரத்தின்மீது அமர்ந்துகொண்டான். மாயனே! ஆயர் கொழுந்தே! நீ எப்படி இங்கு வந்தாய்! ஆயர்கள் எழுந்திருக்கும் முன் நாங்கள் வீடு செல்லவேண்டும்! நாங்கள் இந்தப் பொய்கைக்கு வருவது உனக்குத் தெரிந்துவிட்டது! இனி இப்பொய்கைக்கு வரவே மாட்டோம். தயைசெய்து எங்கள் சேலைகளைக் கொடுத்துவிடு என்னும் பாவனையில் ஆண்டாள் அருளிச் செய்கிறாள். இது கோபீ வஸ்த்ராபஹார சரித்திரத்தின் பகுதியாகும்.
கன்னியரோடு கண்ணன் விளையாடல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அரவணையில் பள்ளிகொண்டவனே! தொழுகிறோம். 
524. கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம்  இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே
மாயனே! எங்கள் ஆடைகளைத் தருக
525. இதுவென் புகுந்ததிங் கந்தோ இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய்முடி மாலே மாயனே எங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
இலங்கை அழித்தவனே! எங்கள் பட்டுத் துணிகளைத் தருக
526. எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே
கண்ணீர் விடுகிறோமே! இரக்கம் இல்லையா?
527. பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ணநீர்கள் அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய் இலங்கை யழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
பிரானே! எம் சிற்றாடைகளைத் தந்துவிடு
528. காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி
வேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோ
கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
வேதனை தாங்க முடியவில்லை; பட்டாடைகளைத் தந்துவிடு
529. தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே ளெறிந்தாலே போல வேதனை யற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே
படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே
எம் தாயர் கோபிப்பர்; ஆடைகளைக் கொடுத்துவிடு
530. நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே
ஆயர் கொழுந்தே! அருள் செய்
531. மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
அசோதை திட்டுவாள்; ஆடைகளைக் கொடு
532. கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசுமையி லீகூறை தாராய்
வைகுந்தம் புகலாம்
533. கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே
அடிவரவு: கோழி இது எல்லே பரக்க காலை தடத்தவிழ் நீரில் மாமிமார் கஞ்சன் கன்னி-தெள்ளியார்.
4. தெள்ளியார் பலர்
மனக்கவலை கொண்டவர் தம் எண்ணம் நிறைவேறுமா என்று அறிவதற்குக் குறி பார்ப்பது வழக்கம். வட்டமாகக் கோடிட்டு அதனுள் பல சுழிகளைப் போடுவது. பிறகு அவற்றை எண்ணிப் பார்க்கும்போது இரட்டையாக இருந்தால் எண்ணம் நிறைவேறும். ஒற்றையாக இருந்தால் நிறைவேறாது. இவ்வாறு பார்ப்பதும் ஒரு குறி. ஓர் ஆயர்மகள் இவ்வாறு கோடிட்டு, கோவலன்வரில் கூடிடு கூடலே என்று கூறி பகவானை அடைய வேண்டும் என்ற பேராவலோடு குறி பார்க்கிறாள். ஆண்டாளுக்கு இப்படியும் ஒரு அனுபவம்.
கூடலிழைத்தல்
கலி விருத்தம்
அழகர் வருவார் என்றால் கூடலே கூடு
534. தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளு மிடத்தடி வொட்டிட
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே
வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு
535. காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே
வசுதேவர் கோமகன்வரில் கூடலே கூடு
536. பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே
காளிங்க நர்த்தனம் செய்தவன் வருவானா?
537. ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே
மதயானை உதைத்தவன் என்னைக் கூடுவானா?
538. மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூடு மாகில்நீ கூடிடு கூடலே
மதுரை வேந்தன் வருவானா?
539. அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே
அசுரர்களைக் கொன்றவன்வரின் கூடலே கூடு
540. அன்றின் னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே
துவராபதிக் காவலன் வருவானா?
541. ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே
வாமனன் வரின் கூடலே கூடு
542. கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே
அழகன் வருவான் எனில் கூடலே கூடு
543. பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழக னார்வரில் கூடிடு கூடலே
பாவம் வராது
544. ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே
அடிவரவு: தெள்ளியார் காட்டில் பூமகன் ஆய்ச்சி மாட அற்ற அன்று ஆவல் கொண்ட பழகு ஊடல்-மன்னு.
5. மன்னு பெரும்புகழ்
சோலையில் வாழும் குயிலே! நீ என்னோடு இருக்கிறாய்! கண்ணனின் பிரிவால் நான் துன்புறுவது உனக்கே தெரியும்! நீ இனிய குரலைப் பெற்று என்ன பயன்? கண்ணன் எங்கு இருக்கிறான் என்பது உனக்குத் தெரியும். அவனைக் கூவி என்னிடம் அழைத்துக்கொண்டு வா! புண்ணியனை வரக் கூவாய்! என்று ஆண்டாள் குயிலை வேண்டுகிறாள். இப்பத்துப் பாடல்களைப் பக்தியோடு கூறுவோர் திருமந்திரத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனை அடைவர்.
கண்ணனைக் கூவியழைக்குமாறு குயிலுக்குக் கூறல் (குயிற்பத்து)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
குயிலே! என் பவளவாயன் வரக் கூவாய்
545. மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய்
குயிலே! என் வேங்கடவன் வரக் கூவாய்
546. வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்
குயிலே! என்தலைவன் வரவில்லை: அவன் வரக் கூவாய்
547. மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
காதலி யோடுடன் வாழ்குயி லேஎன் கருமாணிக் கம்வரக் கூவாய்
குயிலே! வைகுந்தன் வரக் கூவாய்
548. என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய்
குயிலே! என் காதலன் வரக் கூவாய்
549. மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்
இளங்குயிலே! என் தத்துவனை வரக் கூவாய்
550. எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே
அழகிய குயிலே! சங்குசக்ரபாணியை வரக் கூவாய்
551. பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி
சிறுகுயிலே! திருமாலை விரைந்து கூவாய்
552. சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்  அவனைநான் செய்வன காணே
சிரீதரனிடம் மையல் கொண்டேன்: அவனை வரக் கூவாய்
553. பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லேகுறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்  பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.
குயிலே! இன்று நாராயணனை வரக் கூவு
554. அன்றுல கம்மளந் தானையுகந் தடிமைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
நமோ நாராயணாய என்று சொல்லுவதற்குச் சமம்
555. விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுறவென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல்லார்நமோ நாராய ணாயவென் பாரே
அடிவரவு: மன்னு வெள்ளை மாதலி என்பு மென்னடை எத்திசை பொங்கிய சார்ங்கம் பைங்கிளி அன்று விண்-வாரணம்.
6. வாரணமாயிரம்
கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ! என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள்.
மாயவன் தன்னை மணஞ்செயக் கண்ட தூய நற்கனவைத் தோழிக்குரைத்தல்
கலி விருத்தம்
திருமண ஏற்பாடுகள் நடைபெறக் கனாக்கண்டேன்
556. வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
கோவிந்தனாகிய காளைவரக் கனாக்கண்டேன்
557. நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்,
எனக்கு மணமாலை சூட்டக் கனாக்கண்டேன்
558. இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
கங்கணம் கட்டுவதாகக் கனாக்கண்டேன்
559. நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
மதுரை மன்னன் வரக் கனாக்கண்டேன்
560. கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
மதுசூதன் என் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்
561. மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்
கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன்
562. வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்
நான் அம்மி மிதிப்பதாகக் கனாக்கண்டேன்
563. இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்
பொரிமுகம் தட்டுவதாகக் கனாக்கண்டேன்
564. வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்
மணநீரால் மஞ்சனமாட்டுவதாகக் கனாக்கண்டேன்
565. குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
566. ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே
(பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அனுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அனுஸந்திப்பது வழக்கம். இப் பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்)
அடிவரவு: வாரணம் நாளை இந்திரன் நாற்றிசை கதிர் மத்தளம் வாய் இம்மைக்கும் வரிசிலை குங்குமம் ஆயன்-கருப்பூரம்.
7. கருப்பூரம் நாறுமோ
வெண் சங்கே! பாஞ்சசன்னியமே! பஞ்சாயுதங்களுள் நீயே பெரும்பேறு பெற்றவன்! நீ அடைந்த பாக்கியத்தை என்ன வென்று கூறுவது! கண்ணபிரான் திருப்பவளச் செவ்வாயோடு தொடர்பு கொண்டுள்ளாய்! வாயமுதைப் பருகுகிறாய்! நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம்! இந்திரனும் உனக்கு நிகராக மாட்டான்! ஆனால் ஒன்று! எல்லா கோபியர்களுக்கும் உரியதான கண்ணன் வாயமுதத்தை ஆக்கிரமித்து நீ ஒருவனே பருகுவது நல்லதன்று! என்று கூறுகிறாள் ஆண்டாள்.
பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடுஞ் சுற்றமாக்கல்
கலிவிருத்தம்
மாதவனின் வாய்ச்சுவையும் பரிமளவும் எத்தகையவை!
567. கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
சங்கே! நீ பிறந்தது எங்கே! வளர்ந்தது எங்கே!
568. கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்ப
டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே
கோலச் சங்கே! வாசுதேவன் கையில் வீற்றிருக்கிறாயே!
569. தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே
வலம்புரியே! இந்திரனும் உனக்கு நிகராகமாட்டான்
570. சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
மதுசூதன் வாயமுதை நீயே உண்கின்றாயே!
571. உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே
செங்கண்மாலின் வாயில் தீர்த்தமாடுகிறாய்
572. போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே
சங்குத் தலைவனே! நீ பெற்ற செல்வம் அழகானது
573. செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்
செங்கட் கருமேனி வாசுதே வனுடைய போல்
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா! உன்செல்வம் சாலவ ழகியதே!
சங்கே உன்மீது பெண்கள் குற்றம் சொல்கின்றனர்
574. உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணம் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!
பெருஞ்சங்கே! அமுதை நீ மட்டும் உண்பதோ?
575. பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே!
இவற்றைப் பாடுவோர் அணுக்கராவர்
576. பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே
அடிவரவு: கருப்பூரம் கடலில் தடவரை சந்திர உன்னோடு போய் செங்கமல உண்பது பதினாறா பாஞ்ச-விண்
8. விண்ணில் மேலாப்பு
பிரிவாற்றாமையால் வாடும் தலைவி தலைவனைக் குறித்தோ, தலைவன் தலைவியைக் குறித்தோ ஒருவரைத் தூது விடுவது நம் நாட்டின் பழமையான வழக்கம். மேகம், கிளி, நாரை முதலியவற்றைத் தூது விடுவதை இலக்கியங்களில் காணலாம்.
பகவான் நீல நிறம் கொண்டவன், நீல நிறத்தில் ஆண்டாளுக்கு ஆசை. மழை காலம்! திருவேங்கடமலையிலிருந்து மேகங்கள் வருகின்றன. மேகங்காள்! உங்களோடு திருவேங்கடமுடையானும் வருகிறனோ? அவனோடு சேர்ந்தால்தான் என் உயிர் தரித்திருக்கும். இதை அவனிடம் சொல்லி என்னை ஏற்கச் செய்யுங்கள் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
மேகவிடு தூது
தரவு கொச்சகக் கலிப்பா
மேகங்காள்! என் வேங்கடவன் உங்களோடு வந்தனோ?
577. விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?
வேங்கடத்தான் ஏதேனும் சொல்லியனுப்பினானோ?
578. மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே
கோவிந்தனையே பாடி உயிர் தரித்திருப்பேன்
579. ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே
அலர்மேல்மங்ககை மணாளனுக்கே என் உடல் உரிமை
580. மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே
எனது நிலையை வேங்கடவனுக்குக் கூறுங்கள்
581. வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.
நாரணற்கு எனது மெலிவைச் செப்புமின்
582. சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.
வேங்கடவன் வந்தால் உயிர் நிற்கும்
583. சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே
அவர் இதமான உரை தருவாரா?
584. கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே!
பாம்பணையான் வார்த்தை பொய்த்து விடுமோ?
585. மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாதுஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே
இந்த மேகவிடுதூது படிப்போர் பரமன் அடியர் ஆவர்
586. நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே
அடிவரவு: விண் மா ஒளி மின் வான் சலம் சங்கம் கார் மத நாகத்தின்-சிந்துர
9. சிந்துரச் செம்பொடி
ஆண்டாள் திருமாலிருஞ்சோலையின் அழகிலும், அழகரின் திருமேனி சவுந்தர்யத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்து விளங்கிய கார்முகில் மழையை நன்றாகப் பொழிந்தது. மழை காலத்திற்கு உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பூத்துப் பரவி இருந்தன. இவை ஆண்டாள் பிரிவுத் துன்பத்தை அதிகமாக்கின. திருமாலிருஞ்சோலை மணாளனிடம் இவள் மனம் சென்றது.
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடல்
கலிநிலைத்துறை
நான் உய்வேனோ?
587. சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ
அவனளித்த மாலை செய்த யுத்தம்
588. போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே
என் கைவளை பறித்துச் சென்றுவிட்டாரே!
589. கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.
அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?
590. பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே
அடைக்கலம் புக எனக்கு ஓரிடம் கூறுங்கள்
591. துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே
நான் சமர்ப்பிப்பதை அழகர் ஏற்பாரோ?
592. நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ
கைங்கர்யம் செய்துகொண்டே இருப்பேன்
593. இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே
குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்கின்றன
594. காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே
அவனது சங்கொலியும் நாணொலியும் என்று கேட்பேன்?
595. கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்
நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ
திருமாலடி சேர்வர்
596. சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது 6, 7 பாசுரங்களை மிகவும் பக்தியோடு அனுசந்திப்பது வழக்கம்.
ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில் வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம் உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
அடிவரவு: சிந்துர போர் கருவிளை பைம்பொழில் துங்கநாறு இன்று காலை கோங்கலரும் சந்தொடு-கார்.
10. கார்க்கோடல் பூக்காள்!
காந்தள் மலர்களே! உங்களைப் போன்ற நீலவண்ணன் கண்ணன் எங்கே? கண்ணனின் பவள வாயைப் போன்ற பழங்களைக் கொண்ட கொடியே! அவனை சத்யவாதி என்று எல்லோரும் கூறுகின்றனர். என் விஷயத்தில் மாறிவிட்டானோ? கண்ணனின் புன்முறுவலை நினைவூட்டும் முல்லைக் கொடியே! என் எதிரில் தோன்றி என்னை வருத்தாதே! குயில்களே! ஈதென்ன கூச்சல்? திருவேங்கடவன் வந்து எனக்கு நல்வாழ்வு அளிக்குமாறு பாடக் கூடாதோ? மயில்களே!  இது என்ன ஆட்டம்! குடக் கூத்தாடியவனை நினைவூட்டுகிறீர்களே! ஓயாது ஒலிக்கும் கடலே! உன்னிடம் தானே திருவனந்தாழ்வான் இருக்கிறான். அவன்மீது படுத்திருக்கும் பகவானிடம் என் துயர் சொல்லேன் என்று ஆண்டாள் புலம்புகிறாள். கோதாய்! என்ன சொல்லியும் கண்ணன் வரவில்லை! உன் தந்தை பெரியாழ்வார் அழைக்கும்போது கட்டாயம் வருவான். அப்போது அவனைச் சேவிக்கலாம் என்று தோழி கூறி ஆறுதல் அடைவிக்கிறாள்.
மாற்செய் வகையொடு மாற்றம் இயம்பல்
கலிநிலைத்துறை
காந்தள் மலர்களே! கடல் வண்ணன் எங்குற்றான்?
597. கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ.
பகவானுடைய சோதியில் என்னைச் சேர்ப்பீர்களா?
598. மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாதுஎம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே
பாம்பணையார்க்கும் நாக்கு இரண்டோ?
599. கோவை மணாட்டி நீயுன் கொழுங்கனி கொண்டுஎம்மை
ஆவி தொலைவியேல் வாயழ கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே
முல்லைக் கொடியே! அவர் சொல் பொய்யோ?
600. முல்லைப் பிராட்டி நீயுன் முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங் காய்உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே
குயில்காள்! அவர் என்னைக் கூடுவாரா?
601. பாடும் குயில்காள் ஈதென்ன பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே
மயில்களே! எனது நிலையைப் பாருங்கள்
602. கணமா மயில்காள் கண்ணபி ரான்திருக் கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே
எனக்கு வேறு வழியே இல்லை
603. நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே
அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும்
604. மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே
கடலே! என் துயர்களை நாகணைக்கே உரைத்தி
605. கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே
விட்டுசித்தர் அழகரை வருவிப்பாரோ?
606. நல்லஎன் தோழி நாக ணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே
அடிவரவு: கார் மேல் கோவை முல்லை பாடும் கண நட மழையே கடலே நல்ல-தாம்.
11. தாமுகக்கும்
ஆண்டாள் பகவானை நினைத்து ஏங்குகிறாள். உடல் இளைக்கிறது. கை வளைகள் கழன்று விழுகின்றன. அப்போதும் அவன் அவ்விடம் வரவில்லை. ஆண்டாள் வருந்துகிறாள்; கண்ணனாகிய அரங்கன் தன் கையில் ஆசைப்பட்டு சங்கை வைத்திருக்கிறான். ஆனால் என் கையிலுள்ள சங்கு வளைகளைக் கீழே விழுமாறு செய்தவிட்டான். மூவடிமண் பெற மாவலியிடம் நடந்து சென்றானே! அவனையே விரும்பும் எனக்கு நடையழகைக் காட்டக் கூடாதோ? பெண்ணின் வருத்தமறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்டானே! என் விஷயத்தில் மட்டும் வேறுபடுவானேன்? தம்மை விரும்புகிறவரைத் தாமும் விரும்புவார் என்ற வார்த்தை பொய்யாகாமல் இருக்கவேண்டும் என்கிறாள்.
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்
தரவு கொச்சகக் கலிப்பா
என் சங்கு வளைகளைத் திருவரங்கர் கவர்ந்துவிட்டாரே!
607. தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
என் வளைகள் கழல்கின்றனவே!
608. எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே
என் இடரை அவர் தீர்ப்பாரா?
609. பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே
என் வளைமீது அவருக்கு என்ன ஆசை?
610. மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே
என் பொருள் அவருக்கு எதற்கு?
611. பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே
நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்?
612. கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே
தம் நன்மைகளையே அவர் எண்ணுகிறாரே!
613. உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே
அவர் எவ்வளவெல்லாம் பேசினார்!
614. பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
அவரது ஊர் அரங்கமே
615. கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
அவர் சொல் பொய்க்காது
616. செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே
அடிவரவு: தாம் எழில் பொங்கு மச்சு பொல்லா கை உண்ணாது பாசி கண்ணாலம் செம்மை- மற்று.
12. மற்றிருந்தீர்
உறவினர்களே! நான் பகவத் விஷய ஆசையின் மேல் நிலையில் இருக்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் பயனில்லை. அது என் காதில் விழாது; பதிலும் கூறமாட்டேன். என்னைக் காப்பாற்ற நினைத்தால் இவ்வாறு செய்யுங்கள்: கண்ணன் தன் வீரத்தைக் காட்டி மகிழ்வித்த வட மதுரைக்குக் கொண்டு போய் விடுங்கள். என் விரக நோயை நீங்கள் தீர்க்கமுடியாது. திருவாய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவனைச் சேவித்தால்தான் நோய் தீரும் என்கிறாள் ஆண்டாள்.
சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு
ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மதுரைப்புறத்து என்னை அழைத்துச் செல்லுங்கள்
617. மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்
மாயனின் ஆய்ப்பாடிக்கே என்னை அனுப்புங்கள்
618. நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்துசெய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்
நந்தகோபாலன் இருக்கைக்கு என்னை உய்த்திடுமின்
619. தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான் கொந்தள மாக்கிப்
பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
யமுனைக் கரைக்கே என்னைச் செலுத்துங்கள்
620. அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
காளியனுச்சியில் நடமாடிய பொய்கைக்கு என்னை உய்த்திடுமின்
621. ஆர்க்குமென் நோயி தறியலாகா தம்மனை மீர்துழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
கண்ணன் பக்கல் என்னை அனுப்புங்கள்
622. கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின்
திருத்துழாய் மாலையை எனக்குச் சூட்டுங்கள்
623. வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானமி லாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்
கோவர்த்தனத்திற்கு என்னை உய்த்திடுமின்
624. கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்
துவராபதிக்கு என்னைச் செல்ல விடுங்கள்
625. கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்
ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும்
நாட்டிற்றலைப்பழியெய்தி உங்கள்நன்மையழிந்துதலையிடாதே
சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கென்னையுய்த்திடுமின்.
இவற்றைப் பாடுவோர் வைகுந்தப்பதவி அடைவர்
626. மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே
அடிவரவு: மற்று நாணி தந்தை அங்கை ஆர்க்கும் கார்த்தண் வண்ணம் கற்றினம் கூட்டில் மன்னு-கண்ணன்.
13. கண்ணனென்னும்
தாய்மார்களே! எனக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, கண்ணன் அணிந்த பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்மீது வீசுங்கள். அவனணிந்த திருத்துழாயைக் கொண்டு வந்து என் கூந்தலில் செருகுங்கள். அவனுடைய வனமாலையைக் கொண்டு வந்து என்மீது போட்டுப் புரட்டுங்கள். அவன் நடந்து சென்ற இடங்களிலுள்ள மண்ணைக் கொண்டு வந்து என்மீது பூசுங்கள். இம்முறைகளுள் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் நீங்கள் என்னைக் காப்பாற்றலாம் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
அச்சுதன் அணிபொருட்கொண்டு அவலம் தணிமின் எனல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணனது பீதாம்பரத்தைக் கொண்டு வீசுங்கள்
627. கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே
திருத்துழாயை என் கூந்தலில் சூட்டுங்கள்
628. பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே
கண்ணன் சூடிய மாலையை எனக்குச் சூட்டுங்கள்
629. கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
கண்ணனின் வாய்ச்சுவை எனக்கு வேண்டும்
630. ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கீரே
கண்ணன் ஊதும் குழல்வாய் நீரைத் தடவுங்கள்
631. அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே
கண்ணனின் திருவடிப் பொடியைப் பூசுங்கள்
632. நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே
என்னைக் கண்ணனுடன் இணையுங்கள்
633. வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே
என் மார்பைப் பறித்துக் கண்ணன் மார்பில் எறிவேன்
634. உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே
ஒருநாள் கண்ணன் உண்மை சொல்வானா?
635. கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே
துன்பக் கடலிலிருந்து நீங்குவர்
636. அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே
அடிவரவு: கண்ணன் பால் கஞ்சை ஆரே அழில் நடை வெற்றி உள்ளே கொம்மை அல்லல்-பட்டி
14. பட்டி மேய்ந்து
தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் பகவான் எப்படிப் பொறுத்துக்கொள்வான்? கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் பெருந்துன்பமடைந்தாள். அத்துன்பமெல்லாம் தீருமாறு கண்ணன் ஆண்டாள் எதிரில் நின்று சேவை தருகிறான்.
கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், தோழர்களோடு விளையாடுவதையும், அவன்மீது வெயில் படாமல் இருக்கக் கருடன் விரித்துப் பறப்பதையும், உடலில் வியர்வைத் துளிகள் படிந்த யானைக்குட்டிபோல் கண்ணன் விளையாடுவதையும், சங்கு சக்கரங்களைக் கொண்ட பரமபுருஷன் கேசம் தோளில் புரண்டு அலையும்படி விளையாடுவதையும் விருந்தாவனத்தில் கண்டோம் என்று கூறுகிறாள் ஆண்டாள்.
முதலை வாய்ப்பட்ட களிறு பகவான் அருளால் மீட்கப்பட்டு துயர் தீர்ந்ததுபோல் ஆண்டாளும் பிரிவுத் துன்பத்திலிருந்து மீண்டு பெருமகிழ்வு அடைந்தாள். இப்பத்தும் கூறுவோர் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கவலையின்றி வாழ்வர்.
விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
பலதேவனின் தம்பியை விருந்தாவனத்தே கண்டோம்
637. பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
கண்ணன் விளையாட்டைக் கண்டோம்
638. அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
கருடனது சிறகின்கீழ் வருவானைக் கண்டோம்
639. மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
வியர்த்து விளையாடும் கண்ணனைக் கண்டோம்
640. கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்  ஈசன் றன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
விருந்தாவனத்தே வீதியில் கண்ணனைக் கண்டோம்
641. மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
உதயசூரியன் போலும் கண்ணனைக் கண்டோம்
642. தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே
கருநிறக் கண்ணனைக் கண்டோம்
643. பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
விளையாடும் கண்ணனைக் கண்டோம்
644. வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
அசுரர்களை அழித்த கண்ணனைக் கண்டோம்
645. நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
எம்பெருமான் அடிக்கீழ் வாழ்வர்
646. பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே
அடிவரவு: பட்டி அனுங்க மால் கார்த்தண் மாதவன் தருமம் பொருத்தம் வெளிய நாட்டை பருந்தாள்-இருள்
ஆண்டாள் திருவடிகளே சரணம்.



குலசேகரப்பொருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி!


ல் கொண்டவாறே
இற்றை யிரவிடை யேமத்தென்னை இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் எம்பெரு மான்நீ யெழுந்தருளே
இனி என்னை ஏமாற்ற வேண்டாம்
704. பையரவிண்ணைப்பள்ளியினாய் பண்டையோமல்லோம்நாம்  நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம் வைகியெம்சேரிவரவொழிந்
செய்யவுடையுந்திருமுகமும் செங்கனிவாயுங்குழலுங்கண்டு
பொய்யொருநாள்பட்டதேயமையும் புள்ளாவம் பேசாதேபோகுநம்பீ!
ஒரு நாள் வந்தால் என் சினம் தீர்ப்பேன்
705. என்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே
குழைந்து குழலூதி வரமாட்டாயா?
706. மங்கல நல்வன மாலைமார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி
பொங்கிள வாடை யரையில்சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து
கொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழலினி தூதிவந்தாய்
எங்களுக் கேயொரு நாள்வந்தூத உன்குழ லின்னிசை போதராதே
துன்பம் போய்விடும்
707. அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினி லேமத்தூடி எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே
அடிவரவு: ஏர் கெண்டை கரு தாய் மின் மற்பொரு பை என்னை மங்கலம் அல்லி-ஆலை
7. ஆலை நீள்கரும்பு
மகனின் திருவிளையாடல்களைக் கண்டுகளிக்கும் அனுபவத்தை இழந்த தேவகியாக இருந்துகொண்டு ஆழ்வார் அனுபவிக்கிறார்.
கண்ணா! என்னை உனக்குத் தாய் என்கிறார்கள். உலகில் உள்ள தாய்மார்களுள் நான் கடைசியாக இருப்பவள். பாக்கிய மில்லாதவள்! உன்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டவில்லை! நீ படுத்திருக்கும் அழகைக் காணவில்லை! உன்னுடைய இளம் பருவ இன்பத்தை நான் அனுபவிக்கவில்லை! உனக்குப் பால் பெற்றிலேன் திருவிலேன். எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே! என்று தேவகி புலம்புவது போல் ஆழ்வார் உள்ள முருகக் கூறுகிறார்.
சேய் வளர் காட்சியின்சீரை யசோதைபோல் தாய் தேவகி பெறாத் தாழ்வெண்ணிப் புலம்பல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தாய்மாருள் நான் கடையானவள்
708. ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே
நீ மல்லாந்து கிடந்ததைக் காணப்பெற்றிலேன்
709. வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற்
கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ கேச வாகெடு வேன்கெடு வேனே
நந்தன் பெற்றனன் நல்வினை
710. முந்தை நன்முறை யுன்புடை மகளிர் முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் விரலி னும்கடைக் கண்ணினும்காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே
நின் இளமைப்பருவ இன்பத்தை இழந்தேன்
711. களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னே! திண்கை மார்வும்திண் டோளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே
எல்லாம் யசோதையே பெற்றாள்
712. மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே
நீ உண்ட உணவின் மிச்சம் எனக்குக் கிடைக்கவில்லை!
713. தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையா
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே
நின் திருக்கண் நோக்கத்தை இழந்தேன்
714. குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்! கோவிந்தா! என் குடங்கையில் மன்னி,
ஒழுகுபேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா,
மழலை மென்னகை இடிடை அருளா, வாயிலே முலை இருக்க, என் முகத்தே
எழில்கொள் நின் திருக் கண்ணிணை நோக்கந் தன்னையும் இழந்தேன், இழந்தேன்!
அசோதையே இன்பத்தின் இறுதி கண்டாள்
715. முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யுமிவை கண்ட அசோதை தொல்லை யின்பத் திறுதிகண் டாளே
நின் விளையாட்டுக்களைக் காணப்பெற்றிலேன்
716. குன்றி னால்குடை கவித்ததும் கோலக் குரவை கோத்த தும்குட மாட்டும்
கன்றி னால்விள வெறிந்ததும் காலால் காளி யன்தலை மிதித்தது முதலா
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன் காணு மாறினி யுண்டெனி லருளே
கண்ணா! நீ நல்ல தாயைப் பெற்றாய்!
717. வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய் கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே
நாரணன் உலகு நண்ணுவர்
718. மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல் கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் நண்ணு வாரொல்லை நாரண னுலகே
அடிவரவு: ஆலை வடி முந்தை களி மருவு தண்ணம் குழகன் முழுதும் குன்றினால் வஞ்சம் மல்லை-மன்னு
8. மன்னுபுகழ்
திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சவுரிராஜனையே ஆழ்வார் இராமனாகக் குறிப்பிடுகிறார்.
கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு
தரவு கொச்சகக் கலிப்பா
கணபுரத்தின் கருமணியே! தாலேலோ!
719. மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
எண்திசையும் ஆள்பவனே! தாலேலோ!
720. புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ
சனகன் மருமகனே! தாலேலோ
721. கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய்
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ.
வில்லுக்கு ஒருவனே! தாலேலோ
722. தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ
பரதனுக்கு நாடு தந்தவனே! தாலேலோ
723. பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ
சிற்றன்னை சொற்கொண்டவனே! தாலேலோ
724. சுற்றம் எல்லாம் பின் டிதாடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா! தாலேலோ!
அயோத்தி மன்னனே! தாலேலோ
725. ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ
தேவர்க்கு அமுதம் அளித்தவனே! தாலேலோ
726. மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ
இலங்கையை அழித்தவனே! தாலேலோ
727. தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ
யாவரையும் படைத்தவனே! தாலேலோ
728. தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ
காகுத்தனின் பக்தர்கள் ஆவர்
729. கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே.
அடிவரவு: மன்னு புண்டரிகம் கொங்கு தாமரை பார் சுற்றம் ஆலின் மலை தளை தேவரை கன்னி-வன்தாள்
9. வன்தாளினிணை
இராமன் வனவாசம் செய்யச் சென்றான். தசரதன் இராமனைப் பிரிந்து வருந்தினான்; மனமிரங்கிப் புலம்பினான். அவன் புலம்பியவாற்றை ஆழ்வார் ஈண்டுப்பாடுகிறார். 
தனயன் கான்புகத் தசரதன் புலம்பல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்!
730. வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு
என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே
இராமா! வனத்தில் நீ எவ்வாறு நடந்தனையோ!
731. வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ எம்பெருமான் எஞ்செய் கேனே
கல் அணைமேல் துயில எப்போது கற்றாய்?
732. கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே
என் நெஞ்சம் பிளக்கவில்லையே!
733. வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே
பாவி சொல் கேட்டேனே!
734. பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் எஞ்செய்கேன் அந்தோ யானே.
உயிரோடு உன்னை இழந்தேனே!
735. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது
எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே.
என் மகன் வனம் செல்லுதல் தகுமோ?
736. பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல்
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே
கைகேசீ! உனக்கு இதயமே இல்லையா?
737. பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகிகையும் வனத்தில் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் இனிதாக விருக்கின் றாயே.
ஏழ்பிறப்பிலும் நின்னையே மகனாகப் பெறுவேன்
738. முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே.
யான் இறக்கப் போகின்றேன்
739. தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே.
தீய நெறியில் செல்லமாட்டார்கள்
740. ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம்புக்க அதனுக் காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் புலம்பியஅப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே.
அடிவரவு: வன்தான் வெவ்வாயேன் கொல்லணை வாபோகு பொருந்தார் அம்மா பூ பொன் முன் தேன் ஏரார்ந்த-அங்கண்.
10. அங்கணெடுமதிள்
வால்மீகி முனிவர் இராமயணத்தில் இராம சரித்திரத்தைப் பரக்கக் கூறி அனுபவித்தார். இவ்வாழ்வார் இராமாயணத்தை ஈண்டுச் சுருக்கிக் கூறி அனுபவிக்கிறார்.
தில்லைநகர்த் திருச்சித்திர கூடமால் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சித்திரகூடத்தே எம்பெருமானை எப்போது காண்பேனோ!
741. அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றிவிண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.
இராமனே திருசித்திர கூடத்தான்
742. வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே.
சீதைக்காகச் சிலையிறுத்தவன் சித்திரகூடத்தான்
743. செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே.
சித்திரகூடத்தானைக் கண்டோர்க்கு நிகரில்லை
744. தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே.
இப்பூவுலகம் பாக்கியம் பெற்றது!
745. வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.
சித்திரகூடத்தானைத் துதிப்பவரை யான் துதிப்பேன்
746. மனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே.
சித்திரகூடத்தான் அடிசூடும் அரசே அரசு
747. குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே
இராம சரித்திரமே இன்னமுது
748. அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே.
இனித் துயரம் அடையோம்
749. செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே.
சித்திரகூடத்தானை நாள்தோறும் துதித்து வணங்குங்கள்
750. அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்றுஇலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே.
நாராயணன் திருவடியைச் சேர்வர்
751. தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.
அடிவரவு: அங்கண் வந்து செவ்வரி தொத்து வலி தனம் குரை அம்பொன் அன்று தில்லை- பூநிலாய
குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக